சக்தி மனதில் விஷத்தை விதைக்கும் கதிர்.. சூழ்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், சிவப்பிரகாசம் என்பவர் வீட்டுக்கு வந்து, தமிழ்சோறு பிசினசை விரிவுபடுத்த வேண்டும். அதற்கான இடம், பொருட் அனைத்தையும் நாங்கள் தருகிறோம். ஆனால், நீங்கள் வீட்டில் இருந்தோ இல்ல வேறு எங்காவது இருந்தோ சமைத்துக் கொடுத்தால் போதும் என சொல்கிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படும் சக்தி அதெல்லாம் தேவையில்லை என்று கோபத்துடன் சொல்கிறார். அப்போது, நந்தினி, சார் ஜனனி இப்போது கர்ப்பமாக இருப்பதால் சக்தி இப்படி பேசுகிறார் என்று சொல்கிறாள்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: உடனே, சிவபிரகாசம், அப்படியா நல்ல விஷயம் தான், அப்போ ஜனனி வீட்டிலிருந்தே பிசினஸை செய்யட்டும், அவருக்கு உதவி செய்யத்தான் நீங்க இருக்கீங்களே என்று சொல்கிறார். அப்போது ஆத்திரப்படும் சக்தி, அவரைத் திட்டி அனுப்பி விடுகிறார். இதனால் ஜனனிக்கும் சக்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, சக்தி கோபமாக வெளியில் சென்று விடுகிறார். இதையடுத்து, வீட்டில் நந்தினி, ரேணுகா அனைவரும் ஜனனியிடம் ஆறுதல் சொல்கின்றனர். சக்தி உன் குழந்தையின் மீது இருக்கும் பாசத்தால் அப்படி பேசிவிட்டான். நீ எதை பற்றியும் கவலைப்படாதே, நீ நல்லா சாப்பிட வேண்டும் என சொல்கின்றனர்.

பொண்டாட்டியை அடக்கிவை: அதைத்தொடர்ந்து சக்தி வீட்டிற்கு வர, அப்போது கதிர், ஞானம் இருவரும் சக்தியிடம், இப்போதைக்கு உன்னுடைய குழந்தை தான் முக்கியம். மறுபடியும் உன் பொண்டாட்டி உன் பேச்சை கேட்காமல், பிசினஸை பார்க்க போகிறேன் என கிளப்பிடப்போறா, இதை நான் கால்புணர்ச்சியால் சொல்லவில்லை, தம்பி மீது இருக்கும் பாசத்தால் சொல்கிறேன். உன்னுடைய பொண்டாட்டிக்கு நீ அதிகம் இடம் கொடுத்துட்ட, இதற்கு மேலும் நீ இப்படியே இருந்தால், நன்றாக இருக்காது. அது பிறக்கப் போகும் குழந்தையை தான் பாதிக்கும், உன்னுடைய குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்றால் முதலில் ஜனனியை நந்தினி, ரேணுகாவிடம் பேச விடாதே. அவர்கள் தான் ஜனனியிடம் எதையாவது சொல்லிக்கிட்டே இருக்கிறார்கள். அவர்களிடம் பேசாமல் இருந்தாலே ஜனனி நன்றாக இருப்பாள் என சொல்லி சக்தியை வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எதிராக திசை திருப்புகிறார் கதிர்.
வீட்டிற்கு வரும் அப்பா: இதையடுத்து,ஜனனியின் அப்பா வீட்டுக்கு,நீ கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மாப்பிள்ளை போன் பண்ணி சொன்னாரு, எனக்கு ரொம்ப சந்தோஷம். அம்மாவும் வருவதாக இருந்தேது. ஆனால், அவளால் வரமுடியவில்லை. என்னால் உனக்கு இப்போது எதுவுமே செய்யமுடியவில்லை. நானே ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் என சொல்லி வருத்தப்படுகிறார். இதையடுத்து நடப்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











