ஜனனியின் குழந்தை குணசேகரனை வதம் செய்துவிடும்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: நேற்றைய எபிசோடில் ஜனனியின் அப்பா வீட்டுக்கு வந்து, நீ கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மாப்பிள்ளை ஃபோன் பண்ணி சொன்னாரு, எனக்கு ரொம்ப சந்தோஷம். அம்மாவும் வருவதாக இருந்தேது. ஆனால், அவளால் வரமுடியவில்லை. என்னால் உனக்கு இப்போது எதுவுமே செய்யமுடியவில்லை. நானே ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன் என சொல்லி வருத்தப்படுகிறார்.

இதையடுத்து, இன்றைய எபிசோடில், ஈஸ்வரி இருக்கும் மருத்துவமனையில் இருந்து போன் வருகிறது. அதில் ஈஸ்வரி மோமாவில் இருந்து திரும்பி விட்டார். இன்னும் இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்துவிடலாம் என சொல்ல, அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். அப்போது, நந்தினி, பாத்தியா சக்தி, ஜனனி கர்ப்பமாக இருக்கும் நேரம், அக்கா வீட்டுக்கு வர போறாங்க இந்த குழந்தை உண்மையில் ராசியான குழந்தை என்று சொல்லி அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, வீட்டில் இருக்கும் அனைவரும், வீட்டிற்கு புதிதாக வரப்போகும் வாரிசு பற்றி தெரிந்து கொள்வதற்காக வீட்டிற்கு ஜோசியரை அழைத்துள்ளனர். இதையடுத்து, வீட்டிற்கு வரும் ஜோசியர் ஜனனியின் ஜாதகத்தை பார்த்துவிட்டு, ஜனனிக்கு நல்ல நேரத்தில் தான் குழந்தை உண்டாகி இருக்கு, இந்த குழந்தையால் இந்த வீட்டில் செல்வம், சந்தோஷம் எல்லாம் இருக்கும், சித்தி, சித்தப்பா என அனைவரும் சீரும் சிறப்புகாக இருப்பார்கள். ஆனால், குழந்தையின் பெரியப்பாவிற்கு இந்த குழந்தையால் ஆபத்து. இந்த குடும்பத்திற்கு எதிரானவர்களை இந்த குழந்தை வதம் செய்துவிடும் என்று சொல்கிறார். இதைக் கேட்டு ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதே நேரம், இதையடுத்து கதிர், இந்த விஷயம் இப்போதைக்கு அண்ணாவிற்கும், அம்மாவிற்கும் தெரியவேண்டாம். நல்லபடியாக குழந்தை பிறக்கட்டும் அதன்பின் சொல்லிக்கொள்ளலாம் என சொல்கிறார்.

ராசியான குழந்தை: இதையடுத்து, அனைவரும் பேசிக்கொண்டு இருக்க அப்போது ஜனனி இந்த விஷயம் மட்டும் ஆதிகுணசேகரனுக்கு தெரிந்தால் அவர் என்ன செய்வார் என்று தெரியவில்லை என சொல்கிறார். அப்போது சக்தி எனக்கு குழந்தை தான் முக்கியம், அப்படி ஏதாவது பிரச்சனை செய்தால், நானும் ஜனனியும் இந்த வீட்டை விட்டு சென்று விடுவோம் என்கிறார். இதையடுத்து இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X