யார் இந்த தேவசகாயம்? தவித்து நிற்கும் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: குணசேகரன் ஏற்பாடு செய்த ரவுடிகள் ஜனனியை துரத்தி வருகின்றனர். ஒரு கட்டத்தில் அவர்களிடம் இருந்து தப்பித்த ஜனனி, கிணற்றுக்கு பக்கத்தில் இருக்கும் மோட்டார் அறையில் சென்று ஒளிந்து கொள்கிறார். இது தெரியாத அந்த கிணற்றின் உரிமையாளர் மோட்டார் அறையின் கதவை பூட்டி விடுகிறார். இரவு முழுவதும் ஜனனி அங்கே இருக்க, பின் எப்படியோ ஜனனி இருப்பது தெரிந்து, ஜனனி அங்கிருந்து தப்பிக்க அவர் உதவி செய்கிறார்.
இதையடுத்து, நள்ளிரவு காட்டுப் பகுதியில் ஜனனி தப்பித்து ஓட ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் தவிக்கிறாள். அப்போது மீண்டும் ரவுடிகள் ஜனனியை பார்த்துவிட்டு துரத்துகின்றனர். இதனால், வேகமாக ஓடிவரும் ஜனனி, ஒரு காரின் மீது மோதி மயக்கம் அடைந்து விழுகிறாள். அந்த காரில் இருந்த நபர் ஜனனியை வீட்டிற்கு அழைத்துச் சென்று முதலுதவி கொடுக்கிறார். மறுநாள் காலை மயக்கம் தெளிந்து ஜனனி, எங்கு இருக்கிறோம் என்று தெரியாமல் தவிக்கிறாள். அந்த நேரம் ஜனனியை காப்பாற்றிய நபர், நான் கேப்டன் தேவசகாயம் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். நீங்கள் ஏதோ, பிரச்சனையில் இருக்கிறீர்கள் என தெரிந்தது. அதனால் தான் காப்பாற்றி இங்கே அழைத்து வந்தேன். அது என்ன பிரச்சனை என்று சொன்னால், நான் நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்கிறேன் என்கிறார்.

நந்தினி எடுத்த முடிவு: மறுபக்கம், வீட்டில் விசாலாட்சி, என் தம்பியை ஏற்கனவே சொன்னான். உன்னுடைய மூத்த மகன் வீட்டிற்குள் வந்தால் மிகப்பெரிய பிரச்சனைகள் நடக்கும் என்று அந்தப் பிரச்சனைகள் எப்போது வீட்டில் நடக்க ஆரம்பித்து விட்டது. யாருக்கு என்ன ஆகும் என்றே தெரியவில்லை என வருத்தப்படுகிறாள். அதைத்தொடர்ந்து, நந்தினி, ரேணுகா இருவரும் ஊர் பஞ்சாயத்து தலைவர்களை பஞ்சாயத்திற்கு கூட்டி இருக்கின்றனர். அப்போது, நந்தினி ஆகிய நான், கதிரை திருமணம் செய்து கொண்டேன். எங்களின் திருமண வாழ்க்கை ஒற்றுமை இன்றி இருப்பதால், நாங்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறோம் என பத்திரத்தை படிக்கிறார். இதே போல ரேணுகாவும் பத்திரத்தை படித்துவிட்டு, அதில் கையெழுத்து போடுகின்றனர். இதை சற்றும் எதிர்பாராத குணசேகரன் அடுத்து என்ன செய்யலாம் என்ற திட்டத்தோடு இருக்கிறார். இதையடுத்து எதிர்நீச்சல் சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications