தற்குறி மானம் கெட்ட புருஷன்.. ரேணுகா, நந்தினிக்கு வரும் பேராபத்து.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ரேணுகா, நந்தினி இருவருக்கும் விவகாரத்து கொடுப்பதற்காக, கதிர்,ஞானம் இருவரும் அந்த ஊரில் இருக்கும் பெரியவர்களை வீட்டிற்கு வரவைத்துள்ளனர். அப்போது, கதிர் ஒரு பத்திரத்தை கொடுத்து அதை படிக்க சொல்கிறான். அதை படிக்கும் நந்தினி, நான், கதிரை திருமணம் செய்து கொண்டேன். எங்களின் திருமண வாழ்க்கை ஒற்றுமை இன்றி இருப்பதால், நாங்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறோம். இந்த சொந்தில் எனக்கு எந்த பங்கும் என எழுதி இருப்பதை படித்து முடிக்கிறாள். அப்போது, கதிர் படிச்சிட்டியா, கையெழுத்து போட்டுவிட்டு இங்கிருந்து கிளப்பு என சொல்கிறான்.
உடனே நந்தினி, ஏய் படிக்காத தற்குறி, நீங்க சொன்ற இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு போக நான் என்ன உன்னமாதிரி முட்டாளா.. உங்களை, கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பிறந்துவிட்டால், இந்த சொத்தில் பங்கு இருக்கு, இது தெரியம, இந்த பேப்பரில் கையெழுத்து போட சொல்லுற, முறைப்படி என் வழக்கறிஞர் வந்து விவகரத்து பேப்பரை தருவாங்க அதில் கையெழுத்து போடுகிறேன் என்று சொல்கிறாள். இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கதிர், ஞானம் இருவரும் இருக்கின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைடுத்து, தம்பிகளை அழைத்து பேசும் குணசேகரன், என்னப்பா முடிவு செய்து இருக்கீங்க, இவளுங்களை நீங்க ஆரம்பத்தில் இருந்தே கண்டிச்சி இருக்க வேண்டும். அப்போ கை மீறி போய்விட்டார்கள். இப்பவும் ஒன்னும் கேட்டுப்போகவில்லை. ஒன்னு உங்க பொட்டிகளை அடக்கி வைங்க, இல்லை என்றால் அடக்கம் பண்ணிவிட்டு, அடுத்த வேலையை பாருங்க என்று சொல்கிறார். இதைக்கேட்டு கதிர், ஞானம் இருவரும் அமைதியாக இருக்கின்றனர்.
மறுபக்கம்,ஜனனி தனக்கு அடைக்களம் கொடுத்த தேவசகாயத்திடம் நடந்த எல்லாத்தையும் சொல்ல, அவர் நீ இப்போது வெளியில் இருப்பது ஆபத்து, நீ இந்த வீட்டில் இரு, அங்கு என்ன நடக்கிறது என்று நான் பார்த்துவிட்டு வருகிறேன் என்கிறார். இதையடுத்து, ஜனனி வழக்கு குவித்து என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் அவர், ஜனனியிடம் மதிவதனியை பதவியில் இருந்து தூக்கிவிட்டார்கள், கொற்றவையை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கக்கூடாது என சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்கிறார். இதை கேட்டு ஜனனி வருத்தத்தோடு இருக்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











