சிகப்பு ரோஜாக்கள் மொமண்ட்.. வீட்டில் இருக்கும் ரகசிய அறை.. மாறும் எதிர்நீச்சல் தொடர்கிறது கதைகளம்!
சென்னை: தம்பிகளை அழைத்து பேசும் குணசேகரன், உங்க பொண்டாட்டிங்களா பத்தி முடிவு செய்து இருக்கீங்க, இவளுங்களை நீங்க ஆரம்பத்தில் இருந்தே கண்டிச்சி இருக்க வேண்டும். அப்போ கை மீறி போய்விட்டார்கள். இப்பவும் ஒன்னும் கேட்டுப்போகவில்லை. ஒன்னு உங்க பொண்டாட்டிகளை அடக்கி வைங்க, இல்லை என்றால் அடக்கம் பண்ணிவிட்டு, அடுத்த வேலையை பாருங்க என்று சொல்கிறார். இதைக்கேட்டு கதிர், ஞானம் இருவரும் அமைதியாக இருக்கின்றனர்.
மறுபக்கம், ஜனனி தனக்கு அடைக்களம் கொடுத்த தேவசகாயத்திடம் நடந்த எல்லாத்தையும் சொல்ல, அவர் நீ இப்போது வெளியில் இருப்பது ஆபத்து, நீ இந்த வீட்டில் இரு, அங்கு என்ன நடக்கிறது என்று நான் பார்த்துவிட்டு வருகிறேன் என்கிறார். இதையடுத்து, ஜனனி வழக்கு குறித்து என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் அவர், ஜனனியிடம் மதிவதனியை பதவியில் இருந்து தூக்கிவிட்டார்கள், கொற்றவையை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கக்கூடாது என சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்கிறார். இதை கேட்டு ஜனனி வருத்தத்தோடு இருக்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம், ஜனனி வீட்டில் இருக்க அந்த வீட்டில் வேலை செய்யும் ஒருவர், எதுக்கு இந்த வீட்டிற்கு வந்த, இந்த வீட்டை பற்றி தெரியுமா என கேட்கிறார். இதனால், பயம் கொள்ளும் ஜனனி, எதற்காக அவர் அப்படி சொன்னார் என்பது பற்றி யோசிக்கிறாள். பின், வீட்டிற்கு வெளியே நடந்து கொண்டு இருக்க, அங்கு இருக்கும் பெண் ஒருவர், இங்கே வரக்கூடாது, போய் உங்க ரூமில் இருங்க, சார் பாத்தா சத்தம் போடுவார் என்கிறாள். இதனால், ஜனனிக்கு அந்த வீட்டின் மீது சந்தேகம் அதிகமாக வருகிறது. பின், அந்த பெண் அங்கிருந்து போனதும், வீட்டின் பின் பக்கத்தல் இருக்கும் ஒரு சின்ன வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் அங்கு செல்கிறாள். அந்த இடத்தில் ஜன்னல், கதவு அனைத்துமே பூட்டப்பட்டு இருகிறது.
வசமாக சிக்கிய ஜனனி: இதை ஜனனி பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்த அந்த பெண், உன்னை அறையில் தானே இருக்க சொன்னேன், நீ எதுக்கு இங்கே வந்தே, உனக்கு ஒருமுறை சொன்னா புரியாதா என ஜனனியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு செல்கிறாள். அந்த நேரம், டாக்டர் தேவசாயம் அங்கு வர, அந்த பெண், சார் இவங்க அவங்க அறையில் இல்லாமல், பின்பக்கம் இருக்கும் இடத்திற்கும் போகிறார்கள் என்று சொல்கிறார். உடனே தேவசகாயம், அங்கே எல்லாம் போகக்கூடாது, நீ போய் ஓய்வு எடு ஜனனி என்று சொல்கிறார்.
யார் இந்த டாக்டர்: உடனே ஜனனி, சார் எனக்கு இப்போ எதுவும் இல்லை. நான் நன்றாகத்தான் இருக்கேன், நீங்க செய்த உதவிக்கு நன்றி, நான் இங்கிருந்து கிளம்புகிறேன் என்று சொல்கிறார். உடனே தேவசகாயம், ஓ அப்படியா.. இங்கே நான் தான் டாக்டர், நீ உள்ளே போ என்கிறார். அப்போது ஜனனி அங்கே நிற்க, தேவசாகயம் கோவத்தோடு உள்ளே போ என்கிறார். இதனால், ஜனனி யார் இவர், நம்மை தான் வெளியே விடவில்லை என குழப்பம் அடைகிறாள். இதைப்பார்த்த இணையவாசிகள், அவர் கிட்னி திருடும் டாக்டர் என்றும், ஒருவேளை சிவப்பு ரோஜா போல அந்த ரகசிய அறையில் ஏதோ இருக்கு என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











