10 உயிர் போகும்.. விசாலாட்சியை மிரட்டும் கதிர்.. பயத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஜனனியை காப்பாற்றிய அந்த மருத்துவர் ஒரே மர்மமானவராக இருக்கிறார். ஜனனி வெளியே வர அப்போது அங்கு வேலை செய்யும் பெண், அறையில் தானே இருக்க சொன்னேன், நீ எதுக்கு இங்கே வந்தே, உனக்கு ஒருமுறை சொன்னா புரியாதா என ஜனனியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு செல்கிறாள். அந்த நேரம், டாக்டர் தேவசாயம் வருகிறார். உடனே அவர், ஜனனி, உங்களுக்கு உடம்பு சரியில்லை நீங்க ஒய்வு எடுக்க வேண்டும், இப்படி வெளியில் வந்தால் உங்களுக்குத்தான் ஆபத்து என சொல்கிறார். அப்போது, ஜனனி, நான் நன்றாகத்தான் இருக்கேன், நீங்க செய்த உதவிக்கு நன்றி, நான் இங்கிருந்து கிளம்புகிறேன் என்று சொல்கிறார். உடனே தேவசகாயம், இங்கே நான் தான் டாக்டர், நீ உள்ளே போ என்று மிரட்டுகிறார். இதனால், ஜனனிக்கு அந்த மருத்துவர் மீது சந்தேகம் வருகிறது.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுநாள் காலை ஜனனி தூங்கிக்கொண்டு இருக்க அப்போது, டாக்டரும் அங்கு வேலை செய்யும் பெண்ணும் இருக்கின்றனர். இவர்களை பார்த்த ஜனனி பயந்து எழ, பயப்பட வேண்டாம் ஜனனி, BP செக் செய்வதற்கு வந்தோம், தூங்கிக்கொண்டு இருந்ததால், காத்து இருந்தோம் என சொல்கிறார்.இதையடுத்து, ஹீமோக்ளோபின் செக் செய்ய வேண்டும் என ரத்தத்தை எடுக்கிறார். டாக்டரின் நடவடிக்கையை பார்த்து ஜனனிக்கு மேலும் சந்தேகம் அதிகரிக்க அவர் என்ன செய்கிறார் என்பதை நோட்டமிடுகிறார் ஜனனி. அப்போது, தேவசகாயம் காரில் இருந்து கொண்டு, யாரோ ஒருவருக்கு போன் செய்து மதுரை தல்லாக்குளம் குணசேகரின் நம்பர் வேண்டும் என்கிறார். இதை ஜனனி மறைந்து பார்க்கிறாள்.
10 உயிர் போகும்: மறுபக்கம், கதிர் , விசாலாட்சியை கட்டாயப்படுத்தி கையெழுத்து போட சொல்கிறார். விசாலாட்சி நான் எதற்கு கையெழுத்து போட வேண்டும் முடியாது என்று சொல்ல, அப்போது, கதிர் நீ மட்டும் இந்த பத்திரத்தில் கையெழுத்து போடவில்லை என்றால், வீட்டில் பத்து உயிர் போகும் என மிரட்டவேறு வழியே இல்லாமல் விசாலாட்சி அதில் கையெழுத்து போடுகிறாள். உடனே நந்தினி அத்தை என்ன பண்ணீங்க அவங்க நம்பள எதுவுமே செய்ய முடியாது என்று சொல்ல, ஆத்திரப்படும் கதிர், யாராவது உள்ளே வந்தாக காலை வெட்டி விடுவேன் என்று மிரட்டுகிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











