குணசேகரனை விட மோசமானவன்.. கொடுமையை அனுபவிக்கும் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: கதிர் ,விசாலாட்சியை கட்டாயப்படுத்தி பத்திரத்தில் கையெழுத்து போட சொல்கிறான். விசாலாட்சி நான் எதற்கு கையெழுத்து போட வேண்டும் முடியாது என்று சொல்ல, நீ கையெழுத்து போடவில்லை என்றால், வீட்டில் பத்து உயிர் போகும் என மிரட்ட வேறு வழியே இல்லாமல் விசாலாட்சி கையெழுத்து போடுகிறாள். உடனே நந்தினி அத்தை என்ன பண்றீங்க அவங்க நம்பள எதுவுமே செய்ய முடியாது என்று சொல்ல, ஆத்திரப்படும் கதிர், யாராவது உள்ளே வந்தாக காலை வெட்டி விடுவேன் என்று மிரட்டுகிறான்.
இன்றைய எபிசோடில், ஜனனி, இந்த வீட்டில் ஏதோ ஒரு மர்மம் இருக்கு என்பதை தெரிந்து கொள்கிறாள். அதை கண்டுபிடிப்பதற்காக பின் பக்கம் இருக்கும் வீட்டுக்கு செல்கிறாள். அங்கு, கதவு பூட்டப்பட்டு இருக்க, ஜன்னலை திறந்து பார்க்க பெண் ஒருவரின் கால் மட்டும் தெரிகிறது. அதைப்பார்த்து ஜனனி பயந்து போய், யார் நீங்க, என்ன ஆச்சு,நான் பேசுவது கேட்குதா என்று சொல்லிக்கொண்டு இருக்க, இதை, டாக்டர் தேவசகாயம் பார்த்துவிட்டு அந்த இடத்திலேயே வாக்கிடங் ஸ்டிக்கால் ஜனனியை அடித்து இழுத்து வந்து ஒரு அறையில் தள்ளுகிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இந்த வீட்டுக்கு வந்ததை நீ தீர்மானிக்கவில்லை, போவதையும் நீ தீர்மானிக்க முடியாது. நீ வெளியில் போனா பிரச்சனை வரும்னு எத்தனை வாட்டி சொல்வது, உன்னை தேடி வரும் ஆட்களால் மட்டுமில்லை, இன்னும் சில ஆட்களாளும் உனக்கு பிரச்சனை வரும். வெளியில் ஒரு கூட்டமே காத்துக்கிட்டு இருக்கு, சொன்னா உன்னை குதறி விடுவாங்க, ஒழுங்க நான் சொல்வதை கேட்டு இந்த வீட்டுக்குள் இரு, இல்லை என்றால் நடப்பதே வேறு என்று சொல்ல, ஜனனி என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தோடு இருக்கிறாள்.
ஜனனி உயிரோடு இருக்கிறாள்: மேலும், தேவசகாயத்திற்கு குணசேகரின் நம்பர் கிடைத்துவிட, அவர் குணசேகரனுக்கு போன் செய்து, ஜனனி என்னிடம் தான் இருக்கிறாள் என்று சொல்கிறார். இதைகேட்டு அதிர்ச்சி அடையும் குணசேகரன், தம்பிகளை அழைத்து. நாம் ஜனனியை கொல்ல அனுப்பிய ரௌவுடிகள் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். ஜனனி இப்போது உயிரோடு தான் இருக்கிறாள் என்று சொல்கிறார். இந்த விஷயத்தை கேட்டு ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











