சம்பவம் செய்த அறிவுக்கரசி.. கலங்கி நிற்கும் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: நேற்றைய எபிசோடில் அறிவுக்கரசி முல்லை இருவரும் சேர்ந்து சாப்பாட்டில் கரப்பான்பூச்சியை போட்டு, ஜனனியை ஜெயிலுக்கு அனுப்பிவிடலாம் என திட்டம் போட்டுவிடுகின்றனர். அதற்கு சரியான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்க, அனைவரும் சமைத்துமுடித்துவிட்டு மேல சென்ற நேரத்தில், அறிவுக்கரசியும் முல்லையும் சமையல் அறைக்கு வந்து, அவர்கள் சமைத்துவைத்த உணவில் கரப்பான்பூச்சை போடும் நேரத்தில்,ஜனனி வந்துவிடுகிறார். ஜனனியை பார்த்த முல்லை பயத்தில் ஏதோ உளர, ஜனனிக்கு சந்தேகம் வந்து நீ எதுக்கு இங்க இருக்க என்று கேட்கிறாள், பின் சமையல் அறைக்கு சென்று பார்க்க அங்கு அறிவுக்கரசி இருக்கிறார். உடனே நீ எதுக்கு இங்கே வந்து உனக்கு இங்கே உனக்கு என்ன வேலை என்று கேட்க, அறிவுக்கரசி இது என் மாமா வீடு, நான் எங்க வேண்டும் என்றாலும் போவேன், தண்ணீர் கூட குடிக்க இங்கு வரக்கூடாதா என்று சொல்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

இது உண்மை என நம்பிய ஜனனிஇ அங்கிருந்து சென்றுவிட அறிவுக்கரசி தன் கையில் வைத்திருந்த கரப்பான் பூச்சியை பிரியாணியில் கலந்துவிடுகிறார். இந்த விஷயம் தெரியாமல் அனைவரும் பிரியாணியை கடைக்கு எடுத்து செல்கின்றனர். அறிவுக்கரசி திட்டத்தின் படி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு போன் செய்து, புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் தமிழ்ச்சோறு கடையில் உணவு தரமானதாக இல்லை. அதில், கரப்பான் பூச்சி, புழுக்கள் இருக்கிறது என புகார் கொடுக்க அந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கடைக்கு வந்து ஒவ்வொரு உணவாக திறந்து பார்த்து ஆய்வு செய்கின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதை தூரத்தில் இருந்து முல்லை ஃபோன் மூலம் அறிவுகரசி, குணசேகரன் டீமுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். நாம் போட்ட முதல் திட்டமே வெற்றியாக அமைந்துவிட்டது. உணவுத்துறை அதிகாரி ஒவ்வொரு பொருளாக திறந்து சோதனை செய்கிறார், அடுத்து அந்த பிரியாணி அண்டாவை திறந்தால் நிச்சயமாக மாட்டிக்கொள்வார்கள் என்கிறார். உணவுத்துறை அதிகாரிகள் கடையின் லைசன்சை பார்த்துவிட்டு, கடைசியாக பிரியாணி அண்டாவை திறக்க, அந்த உணவில் கரப்பான் பூச்சி இருப்பார்த்தை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அதைப்பார்த்த ஜனனியின் டீம் இப்படி கரப்பான் பூச்சி வந்தது என நினைக்கின்றனர். உடனே அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்த அனைவரும் சாப்பாட்டை கீழே போட்டுவிட்டு, இதெல்லாம் என்ன, சாப்பாட்டில் இப்படிக்கூடவா செய்வீங்க என்று பொதுமக்கள் திட்டுகின்றனர். இதைத்தொடர்ந்து உணவுத்துறை அதிகாரிகள் தரமான உணவு தராத ஜனனியை கைது செய்வதாக கூறுகிறார். அப்போது தான் ஜனனிக்கு இதை செய்தது அறிவுக்கரசி தான் என்பது தெரியவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X