எல்லா திட்டமும் சொதப்பல்.. குணசேகருக்கு விழுந்த செருப்படி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: பிரியாணியில் கரப்பான் பூச்சியை போட்ட முல்லை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்ல, உணவுத்துறை அதிகாரி வந்து புட் டிரக்கில் இருக்கும் ஒவ்வொரு பொருளாக திறந்து சோதனை செய்கிறார்கள். அடுத்து அந்த பிரியாணி அண்டாவை திறந்தால் நிச்சயமாக மாட்டிக்கொள்வார்கள் என்று முல்லை, குணசேகரிடம் போனில் சொல்கிறான். அவர் சொன்னது போல, உணவுத்துறை அதிகாரிகள் கடையின் லைசன்சை பார்த்துவிட்டு, கடைசியாக பிரியாணி அண்டாவை திறக்க, அந்த உணவில் கரப்பான் பூச்சி இருப்பார்த்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்களா.. ஃபுட் டிரக்கிற்கு சீல் வைக்கப்பட்டதா என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில், ஃபுட் ட்ரக்குடன் ஜனனி டீம் மற்றும் அனைவரும் வீட்டிற்கு வந்து இறங்குனதை பார்த்து முல்லை அறிவுக்கரசி ரெண்டு பேருமே அதிர்ச்சி அடைகிறார்கள். என்ன முல்லை, இந்நேர இவங்களை போலீஸ் கைதுக்கு பண்ணி இருப்பாங்க, வண்டிக்கு சீல் வச்சிருப்பாங்கனு என்னென்னமோ கதை சொன்னா கடைசியில் வீட்டுக்கு வந்துவிட்டாங்கள, நம்ம தான் குழப்பம் செய்தோம் என்று தெரிஞ்சா, வம்பு இழுப்பாங்களே என்று அறிவுக்கரசி, முல்லையிடம் புலம்புகிறாள் வண்டியில் இருந்து இறங்கிய அனைவருமே இவங்க ரெண்டு பேரையும் ஏற இறங்க பார்த்துட்டு வீட்டுக்குள்ள போகின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது விசாலாட்சி என்னடி இவ்ளோ சீக்கிரமா வந்துட்டீங்க, என்று கேக்க, உடனே நந்தினி அத்தை உங்க கை பக்கமுமே அருமையான கை பக்குவம், அண்டாவை திறந்ததுமே பிரியாணி எல்லாமே வித்துப்போச்சு, அதுக்கு அப்புறம் சாம்பார் சாதம் செய்து போட்டோம் இன்னைக்கு அமோசமான வியாபாரம், அதனால் தான் நாங்க இன்னைக்கு சீக்கிரமா முடிச்சிட்டோம் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு விசாலாட்சி ரொம்ப சந்தோஷப்பட்டு, இன்னும் வேணும் என்று சொல்லி இருந்தா செய்து கொடுத்து இருப்பேனே என்கிறாள்.
குணசேகருக்கு சரியான செருப்படி: இது எல்லாத்தையுமே வெளியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அறிவுக்கரசி மற்றும் முல்லை, என்ன பிரியாணி விற்றுவிட்டதா...நம்ம நாடும் சீனா போல ஆகிபோச்ச, எது கிடைக்குதோ எல்லாத்தையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள், உணவுத்துறை அதிகாரிங்க சோதனை செய்வதற்கு முன்பே, அண்டால இருக்குற எல்லா பிரியாணியும் விற்றுவிட்டது போல, அதனாலதான் இவங்க திரும்பி வந்துட்டாங்க. இனிமே நம்ம வேற திட்டத்தைத்தான் போட வேண்டும் என்கிறார். குணசேகரன் போட்ட இந்த திட்டமும் சொதப்பிக்கொண்டதால், குணசேகரன் ஆத்திரத்தில் கொந்தளிக்கிறார். அவருக்கு செருப்படி மேல செருப்படி விழுந்துகொண்டே இருக்கிறது.


Click it and Unblock the Notifications











