குழந்தைக்காக ஏங்கும் சக்தி.. குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: பிரியாணியில் கரப்பான்பூச்சி போட்டு அதன் மூலம் ஜனனியை மாட்டி விடலாம் என அறிவுகரசி போட்ட திட்டம் தோல்வி அடைந்து விட்டதால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் இருக்கின்றனர்.
இன்றைய எபிசோடியில், திட்டம் தோல்வியடைந்ததால் ஆத்திரப்பட்ட குணசேகரன் இதற்கு தான், இந்த சில்லறைத்தனமான விஷயத்தை எல்லாம் செய்ய வேண்டாம் என சொன்னேன். சாப்பாட்டில் கரப்பான் பூச்சியை போடுவது எல்லாம் ஒரு வேலையா. இந்த விஷயம் இப்படித்தான் நடக்கும் என எனக்கு ஏற்கனவே தெரியும். இதற்குமேல் யாரும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம், உங்களால் முடியவில்லை என்றால் என்னிடம் விட்டு விடுங்கள், அவங்களை என்ன செய்ய வேண்டும் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன் என ஆத்திரத்தோடு கத்துகிறார் குணசேகரன்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் வீட்டில் சக்தி, ஜனனி இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ஜனனி, தமிழ்சோறு நல்ல படியாக சென்று கொண்டு இருக்கிறது. அதை நினைக்கும் போதே மனசுக்கு சந்தோஷமா இருக்கு என்கிறாள். அப்போதும் சக்தி அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு, ஏன் சக்தி எதையும் மனம் திறந்து சொல்வதில்லை, நான் எது செய்தாலும் அமைதியா இருக்க ஏன் என்ற கேட்கிறாள். அதற்கும் சக்தி சிரித்தபடி அமைதியாக இருக்க, உனக்கு நான் எப்பொழுதும தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இதை செய், அதை செய்யாதே என நீ ஏன் என்னை கண்டிப்பதே இல்லை.
கண்கலங்கிய ஜனனி: இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், மற்றொரும பக்கம் எனக்கு கஷ்டமாக இருக்கு. நாம ரெண்டு பேரும் தனிக்குடித்தனம் நடத்தி இருந்தா, வேலைக்கு போய் நல்ல சம்மதித்து சந்தோஷமா இருந்து இருப்போம். ஆனால், அதற்கும் நான் ஒத்துவரவில்லை. ஆனால்,எல்லா பிரச்சனைகளையும் உன்னை நான் இழுத்து விடுகிறேன். உனக்கென்று எந்த ஆசையும் இல்லையா... எனக்கு தெரியும் குழந்தை பெத்துக்க வேண்டும் என்று நீ ஆசைப்பட்ட, நாம ஏன் இப்போ குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என கேட்கிறாள். உடனே சக்தி, ஆமாம் ஜனனி, குழந்தை பெத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் ஆசை தான். ஆனால், அதற்கு இது நேரம் இல்லை. நீ இப்போது தான் போராடி இந்த பிஸ்னசை ஆரம்பித்து இருக்க, இந்த நேரத்தில் நான் உன்னை கஷ்டப்படுத்த விரும்பவில்லை ஜனனி. அதுக்கு இன்னும் நேரம் இருக்கு என்று சொல்லி சக்தி, ஜனனியை சமாதானப்படுத்துகிறான்.
அடுத்த பிளான்: மறுபக்கம் கதிர், அறிவுக்கரசிக்கு ஃபோன் செய்து இன்றைக்கு வியாபாரம் நடக்கவே கூடாது, நீ என்ன செய்வியோ... ஏது செய்வியோ என தெரியாது. ஆனால் இன்றைக்கு வியாபாரம் நடக்கக்கூடாது இன்றோடு கடையை இழுத்து மூட வேண்டும் என சொல்கிறான். இதனால், அறிவுக்கரசி அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கிறாள்.இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்,.


Click it and Unblock the Notifications











