பிசுபிசுத்துப் போன எதிர்நீச்சல் தொடர்கிறது.. டி.ஆர்பியில் படுசரிவு.. கடுப்பாகும் ஃபேன்ஸ்!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், கதிர், அறிவுக்கரசிக்கு போன் செய்து, நாளை வியாபாரம் நடக்கவே கூடாது, என்ன பண்ணுவ, ஏது பண்ணுவ என்று எனக்கு தெரியாது நாளைக்கு அவங்களுடைய வியாபாரம் நடக்கவே கூடாது என்று சொல்கிறார். இதனால், அறிவுக்கரசி அடுத்து என்ன திட்டத்தை போடலாம் என யோசித்துக் கொண்டு இருக்கிறாள்.
இன்றைய எபிசோடில் அறிவுகரசி ஒரு திட்டத்தை போட்டு, அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக சமையல் அறைக்கு முல்லையை அனுப்புகிறாள். சமையலறைக்குள் முல்லை செல்ல தர்ஷினி, நீ எதுக்கு இங்கே வர என அவனை தடுத்து நிறுத்துகிறாள். உடனே முல்லை, தண்ணி குடிப்பதற்காக வந்தேன் என சொல்கிறான். ஆனால், அவனை தடுத்து நிறுத்தி நீ உள்ளே வரக்கூடாது என தகராறு செய்கிறாள். அப்போது, ரேணுகா தண்ணிதானே குடிச்சிட்டு போகட்டும் என சொல்கிறாள். பின் சமையல் அறைக்குள் நுழைந்த முல்லை, அங்கிருந்த நெய் பாட்டிலைய எடுத்து சென்று விடுகிறான், பின் அந்த நெய் பாட்டிலில் பேதி மருந்தை இருவரும் சேர்ந்து கலந்து விடுகிறார்கள். பின் எந்த இடத்தில் நெய் பாட்டிலை எடுத்தார்களோ அதே இடத்தில் மீண்டும் கொண்டு வந்து வைத்து விடுகிறான் முல்லை.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் குணசேகரன், நான் வீட்டிற்கு சென்றாக வேண்டும் வீட்டில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது என சொல்கிறார். உடனே கதிர், அது என்ன என்று கேட்க. ஈஸ்வரியை நான் அடித்தபோது எடுத்த வீடியோ என்னிடத்தில் தான் உள்ளது. அதை நான் வீட்டிற்குள் ஒரு இடத்தில் வைத்திருக்கிறேன். அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என சொல்கிறார். உடனே கதிர், எந்த இடத்தில் இருக்கிறது என்று சொல்லுங்க நான் சென்று எடுத்து வருகிறேன் என சொல்கிறான். அப்போது, குணசேகரன் அது யாருக்குமே தெரியாத ஒரு இடம், அதை கண்டுபிடிக்கவே முடியாது என சொல்கிறார்.
குணசேகரின் முடிவு: மேலும் இத்தனை நாட்களாக நாம் அனைவரும் தலைமறைவாக இருந்துவிட்டோம் இதற்கு மேலும், தலைமறைமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் சரண்டர் அடைந்து விடுகிறேன். நீங்கள் இருவரும் சென்று நல்லபடியாக வாழ்க்கையை வாழுங்கள் என சொல்கிறார். அப்போது கதிர் என்ன அண்ணா தேவையில்லாமல் பேசுகிறீர்கள், நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கே தான் நான் இருப்பேன் என்ன சொல்கிறான். அப்போது குணசேகரன், நான் கஷ்டப்பட்டு உங்களை வளர்த்தது இதற்கு தானே, உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் வாழுங்க, நான் நீதிமன்றத்தில் சரண்டர் அடையப் போகிறேன் என்கிறார் குணசேகரன்.
படு சரிவு: மறுபக்கம் கடையில் நந்தினி, குழம்பு தாளிக் நெய் பாட்டிலை எடுக்க அது கை தவறி விழுந்துவிடுகிறது. இதனால், இந்த முறையும் அறிவுக்கரசியின் பிளான் சொதப்பிவிடுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குணசேகரனை சீரியலில் பார்க்கவே முடியவில்லை. அவர் தலைமறைவாகிய இருப்பதாக சீரியல் போகும் நிலையில் சீரியல் பிரியர்களுக்கு இது ஒரு அலுப்பை ஏற்படுத்துகிறது, தொடர்ந்து தலைவராக இருக்கும் குணசேகரன் ஜனனியின் பிசினஸை கெடுடகக பல வேலை செய்து வருகிறார். இதே போல காட்சினய், தொடர்ந்து வருவதால் சீரியலில் சுவாரஸ்யம் குறைந்து டிஆர்பி ரேட்டில் படுசரிவை சந்தித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications











