இதுக்கு மேல முடியாது.. குணசேகரனின் அதிரடி திட்டம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: கடையில் நந்தினி, குழம்பு தாளிக் நெய் பாட்டிலை எடுக்க அது கை தவறி விழுந்து விடுகிறது. அந்த நெய் பாட்டிலில் இருந்த நெய்யை வேலை கேட்டு வந்த பெண் சாப்பிட்டு விடுகிறாள். மற்றொரு பக்கத்தில் குணசேகரன், தனது தம்பிகளிடம் நான் போலீசில் சரணடைந்து விடுகிறேன். நீங்கள் வீட்டிற்கு சென்று மனைவி குழந்தைகளுடன் வாழுங்க என்று சொல்கிறார். இதை கேட்டு கதிர், நான் உங்களை விட்டு போக மாட்டேன். ஞானம் வேண்டுமானால் போகட்டும் நான் உங்களுடன் இருக்கிறேன். அவனால் தான் இங்கே இருந்து கொண்டு தேவையில்லாத வேலைகளை செய்கிறான் என்று சொல்ல, இருவருக்கும் இடையே சண்டைவருகிறது.
இருவரையும் தடுத்து நிறுத்தும் எம்எல்ஏ குமார், எதற்காக நீங்கள் இருவரும் இப்படி சண்டை போட்டுக் கொள்கிறீர்கள். உங்கள் அண்ணன் உங்களை எவ்வளவு கஷ்டப்பட்டது வளர்த்தார் என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கும் ஒரு அண்ணன் இருந்தார். அவர், நாங்க நன்றாக இருக்க வேண்டும் என சொத்து சுகத்தை எல்லாமே விற்று என்னையும், என் தம்பிகளையும் பார்த்துக் கொண்டார். அவருக்கு என்று எந்த சொத்தையும் அவர் சேர்த்து வைக்கவில்லை. கடைசியில், நான் நன்றாக இருப்பதை பார்க்க அவர் உயிரோடு இல்லை. அந்த நன்றி கடனுக்காக அவருடைய குழந்தைகளை என் மகள்கள் போல பார்த்து நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து இருக்கிறேன். நானே இப்படி நன்றியோட இருக்கும் போது, குணசேகர் உங்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இந்த நேரத்தில் நீங்கள் அவருக்கு துணையாக இருக்க வேண்டும்.

எதிர்நீச்சல் தொடர்கிறது : அப்போது குணசேகரன் என்னுடைய பிரச்சனைக்காக இருவரின் வாழ்க்கையை நாசமாக நான் விரும்பவில்லை, நீங்க இரண்டு பேரும் வீட்டுக்க அதுதான் சரியாக வரும் என்று சொல்கிறார். அப்போது கரிகாலன், ஞானம் மாமா மீது வழக்கு இல்லை அவர் வீட்டுக்கு போகலாம். ஆனால், கதிர் மீது வழக்கு இருக்கிறதே அவர் எப்படி வீட்டுக்கு போக முடியும் என்று கேட்கிறார். அப்போது குமார், அதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், நீங்கள் வீட்டிற்கு போனதும் முதலில் அந்த பெண்கள் வைத்து இருக்கும் கடையை இழுத்து மூட வேண்டும். பொண்டாட்டி எப்போதும் நம்ம காலுக்கு கீழத்தான் கிடக்கணும். பெண்கள் வீட்டை வெளியே போகக்கூடாது அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து, அவர்களை அடக்கி வையுங்க என்கிறார்.
நெய்யில் விஷம்: மற்றொரு பக்கம் கடையில், மருந்து கலந்த நெய்யை சாப்பிட்ட அந்த பெண் மயங்கி விழுந்து விடுகிறாள். இதையடுத்து, பதறிப்போன சக்தி, ஜனனி இருவருமே அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். மருத்துவ பரிசோதனையில் நெய்யில் விஷம் கலந்து இருப்பது தெரிய வருகிறது. மீண்டும் கடைக்கு வரும் ஜனனி நந்தினியிடம், நெய்யில் விஷம் கலந்து இருக்கிறது என்ற விஷயத்தை சொல்ல அதைக்கேட்டு அதிர்ச்சி அடைகிறார். மேலும், இதற்கு மேல் அறிவுக்கரசியை நாம சும்மா விட கூடாது என்று சொல்ல, அப்போது ஜனனி அவர்களை சரியான நேரத்தில் அடிக்க வேண்டும் என்கிறாள்.


Click it and Unblock the Notifications











