இந்த அண்ணனை மறந்துடாதீங்க.. தம்பிகளை பிரிந்த குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் குணசேகரன் என்னுடைய பிரச்சனைக்காக உங்களுடைய வாழ்க்கையை நாசமாக நான் விரும்பவில்லை, நீங்க இரண்டு பேரும் வீட்டுக்கு போங்க அதுதான் சரியாக வரும் என்று சொல்கிறார். அப்போது கரிகாலன், ஞானம் மாமா மீது வழக்கு இல்லை அவர் வீட்டுக்கு போகலாம். ஆனால், கதிர் மீது வழக்கு இருக்கிறதே அவர் எப்படி வீட்டுக்கு போக முடியும் என்று கேட்கிறார். அப்போது எம்.எல்.ஏ குமார், அதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், நீங்கள் வீட்டிற்கு போனதும் முதலில் அந்த பெண்கள் வைத்து இருக்கும் கடையை இழுத்து மூட வேண்டும். பொண்டாட்டி எப்போதும் நம்ம காலுக்கு கீழத்தான் கிடக்கணும். பெண்கள் வீட்டை வெளியே போகக்கூடாது அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து, அவர்களை அடக்கி வையுங்க என்கிறார்.

மற்றொரு பக்கம் கடையில், மருந்து கலந்த நெய்யை சாப்பிட்ட அந்த பெண் மயங்கி விழுந்து விடுகிறாள். இதையடுத்து, பதறிப்போன சக்தி, ஜனனி இருவருமே அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். மருத்துவ பரிசோதனையில் நெய்யில் விஷம் கலந்து இருப்பது தெரிய வருகிறது. மீண்டும் கடைக்கு வரும் ஜனனி நந்தினியிடம், நெய்யில் விஷம் கலந்து இருக்கிறது என்ற விஷயத்தை சொல்ல அதைக்கேட்டு அதிர்ச்சி அடைகிறார். மேலும், இதற்கு மேல் அறிவுக்கரசியை நாம சும்மா விட கூடாது என்று சொல்ல, அப்போது ஜனனி அவர்களை சரியான நேரத்தில் அடிக்க வேண்டும் என்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, இன்றைய எபிசோடில் அறிவுக்கரசி, முல்லையிடும் இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாரும் அலறி அடித்துக்கொண்டு வருவார்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்க, நந்தினி, பதற்றத்துடன் அலறியபடி வருகிறாள். இதைப்பார்த்த அறிவுக்கரசி, பாத்தியா முல்லை நான் சொன்னபடி வருகிறாள், வா உள்ளே போய் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று இருவரும் உள்ளே வருகின்றனர். உள்ளே நந்தினி பதற்றத்தோடு இருப்பதை பார்த்த முல்லை, என்ன விஷயம் ஏன் இவ்வளவு பதற்றம் என கேட்கிறான். அந்த நேரத்தில் கடையில் இருந்த அனைவரும் வீட்டுக்கு வருகின்றனர். அப்போது நந்தினி, அத்தை வத்த குழம்பில் என்னத்த கலந்தாங்க என்று தெரியவில்லை. இப்படி பெரிய பிரச்சனை நடந்துவிட்டதே என்று புலம்புகிறாள்.

இதுக்கு போல உங்களை எப்போ பார்ப்பேன்: உடனே முல்லை, பிரச்சனை வந்துவிட்டதா என சந்தோஷத்தில் துள்ளி குதிக்க. கோபத்தோடு இருந்த நந்தினி முல்லையை ஓங்கி அடித்து. டேய் நீங்க எல்லாம் மனுஷங்களா டா, சாப்பாட்டில் விஷத்தை கலக்குறீங்க. இதுக்கு மேல உங்களை இந்த வீட்ல இருக்க விட மாட்டோம் என சொல்கிறாள். அப்போது ஜனனி, நாளைக்கு காலையில் போலீஸ் வீட்டுக்கு வருவாங்க, வந்து உன்னோட ஜாமீனை கேன்சல் பண்ணிட்டு உன்னை கைது செய்து கூட்டிக்கிட்டு போவாங்க என்று சொல்கிறாள். இதைக்கேட்டு அறிவுக்கரசி அதிர்ச்சி அடைகிறாள். மறுபக்கம் குணசேகரன் தனது தம்பிகளிடம், நான் சரண்டராக போகிறேன் நீங்க வீட்டுக்கு போங்க, இதுக்கு மேல, நாம பார்ப்போமா இல்லையான்னு தெரியவில்லை, இந்த அண்ணனை மட்டும் மறந்துவிடாதீங்க என தம்பிகளை கட்டிப்பிடித்து அழுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X