கதிர் கொடுத்த எச்சரிக்கை.. பேரதிர்ச்சியில் நந்தி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில், குணசேகரன் தனது தம்பிகளிடம், நான் சரண்டராக போகிறேன் நீங்க வீட்டுக்கு போங்க, இதுக்கு மேல, நாம பார்ப்போமா இல்லையான்னு தெரியவில்லை, இந்த அண்ணனை மட்டும் மறந்துவிடாதீங்க என தம்பிகளை கட்டிப்பிடித்து அழுகிறார்.
இதையடுத்து இன்றைய எபிசோடில், தம்பிகளை பார்த்து கதறியழும் குணசேகரன், நீங்க வீட்டுக்கு போயி முடிஞ்சா எனக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்க, இல்லன்னா பொண்டாட்டி பிள்ளைகளோட சந்தோஷமா இருங்க, என்னை பத்தி கவலையேபடாதீங்க என அழுகிறார். குணசேகரன் அழுவதை பார்த்த கரிகாலன், கதிர், ஞானம் என அனைவரும் அழுகின்றனர். அப்போது எம்எல்ஏ குமார் இப்படி அழுது கொண்டு இருந்தால் என்ன அர்த்தம், நிச்சயமாக அண்ணன் வீட்டுக்கு வந்து விடுவார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: அதற்கான வேலைகளை நீங்க தான் வீட்டுக்கு போய் செய்ய வேண்டும் என சொல்கிறார். அப்போது கரிகாலன், நானும் உங்களுடன் வருகிறேன் மாமா என்று சொல்ல, குணசேகரன் நீ எதற்கு என் கூட வரவேண்டும். எனக்காக நீ கஷ்டப்பட வேண்டாம். நீ, என் ரத்த சொந்தமா.. இல்லையே அப்படி இருக்கும்போது நீ ஏன் என் கூட வரவேண்டும். உனக்காக தங்கையை திருமணம் செய்து வைத்தேன், அவளும் உன் கூட வாழவில்லை. மகளை திருமணம் செய்து வைக்கலாம் என நினைத்தேன். அதுவும் நடக்காமல் போய்விட்டது. அப்படி இருக்கும்போது நீ ஏன் என் கூட வந்து கஷ்டப்பட வேண்டும் என்கிறார். ஆனால் கரிகாலன் பிடிவாதமாக குணசேகருடன் செல்வதில்லையே குறியாக இருக்கிறார்.

கதிர் கொடுத்த எச்சரிக்சை: இதையடுத்து, உச்ச கட்ட கோவத்தோடு வீட்டுக்கு வரும் ஞானம், கதிர் நேராக ஜனனி கடைக்கு வருகின்றனர். கதிரைப் பார்த்த நந்தினி, நீ எதுக்கு இங்கே வந்தே என்று கேட்டு சண்டை போடுகிறாள். அப்போது கதிர், நந்தினி உனக்கு வாழ்க்கை வேண்டும் என்றால் எல்லாத்தையும் விட்டு விட்டு, இந்த கடையை இழுத்து மூடிவிட்டு இன்னும் இரண்டு மணி நேரத்தில் வீட்டுக்கு வா, இந்த கடை தான் முக்கியம் என்றால் வீட்டில் உனக்கு இடம் இல்லை. நீ அடிக்கடி கேப்பியே அந்த டைவர்ஸ் எனக்கு வரும் என்கிறார். இதைக்கேட்டு நந்தினி என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறார்.
கடுப்பான விசாலாட்சி: நேராக வீட்டிற்கு கதிர்,ஞானம் இருவரும் வருகின்றனர். இவர்களை பார்த்த விசாலாட்சி, இங்கே ஏன்டா வந்தீங்க, என்று கேட்க, இனிமேல் இந்த வீட்டில் தான் இருப்போம் யாரும் எங்களை ஒன்னும் செய்ய முடியாது. எல்லாரும் சேர்ந்து எங்களுக்கு சதி செய்றீங்களா... பெத்த பசங்களுக்கு எதிராக சதி செய்றியா.. இனிமேல் அவங்க இந்த வீட்டிற்குள் வர மாட்டாங்க, ஆனால், நீ எங்க அம்மா என்பதால் இருந்துக்கோ என்று சொல்கிறான். கதிரின் பேச்சை கேட்டு கோவப்பட்ட விசாலாட்சி, எனக்கு யாருடா இந்த வீட்டில் இருக்க அனுமதி கொடுக்கவேண்டும். இது என் வீடு என சொல்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











