பேயாட்டம் ஆடிய கதிர்.. கதறி அழுத விசாலாட்சி.. நந்தினி எடுத்த முடிவு.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், கதிர்,ஞானம் இருவரும் நேரடியாக கடைக்கு சென்று மிரட்டுகின்றனர். இன்னும் இரண்டு மணிநேரத்தில் எல்லாத்தையும் மூட்டை கட்டிவிட்டு வீடுக்கு வர அப்படி வரவில்லை என்றால், விவாகரத்து கொடுத்துவிடுவேன் என மிரட்டிவிட்டு வீட்டுக்கு செல்கிறான். வீட்டில், இவர்களை பார்த்த விசாலாட்சி, இங்கே ஏன்டா வந்தீங்க, என்று கேட்க, இனிமேல் இந்த வீட்டில் நாங்க தான் இருப்போம், யாரும் எங்களை ஒன்னும் செய்ய முடியாது. எல்லாரும் சேர்ந்து எங்களுக்கு சதி செய்றீங்களா... பெத்த பசங்களுக்கு எதிராக சதி செய்றியா.. இனிமேல் அவங்க இந்த வீட்டிற்கு வர மாட்டாங்க,. ஆனால், நீ எங்க அம்மா என்பதால் இதே வீட்டில் இருக்கலாம் என்கிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

இதைக்கேட்டு கோவப்படும் விசாலாட்சி, எனக்கு யாருடா இந்த வீட்டில் இருக்க அனுமதி கொடுக்க வேண்டும். நீங்க கொஞ்ச பாவத்தையா செய்து இருக்கீங்க, ஒழுங்க போலீசில் சரண் அடைந்து விடுங்க என்று சொல்கிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படும் கதிர், இனிமேல் அவளுங்க, இந்த வீட்டில் கால் எடுத்துவைக்க முடியாது, எல்லாத்தையும் விட்டுவிட்டு வந்தா வாழலாம் இல்லை என்றால், விவகாரத்து தான் என்று, சமையல் அறைக்கு சென்று, அவர்கள் வாங்கி வைத்து இருக்கும் சமையல் பொருட்களை ஒவ்வொன்றாக வீட்டுக்கு வெளியில் போடுகிறான். இதைப்பார்த்த, விசாலாட்சி டேய் கதிர் என்னடா பண்ற, அவங்க ரொம்ப கஷ்டப்பட்டு இந்த தொழிலை ஆரம்பித்து இருக்கிறார்கள், அதை கெடுத்துவிடாதே என்று தடுக்கிறாள். இதனால், கதிர், இதுக்கு மேல நீ இந்த அறைவிட்டு வெளியே வரவே கூடாது இந்த ரூமில் தான் இருக்க வேண்டும் என் சொல்லி அறையில் தள்ளி பூட்டிவிட்டு, வெளியே வந்து சமையல் பொருட்கள் அனைத்தையும் தீயிட்டு கொளுத்துகிறான்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் கடையில் கதிர் பேசியதை நினைத்து நந்தினி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாள். அப்போது ஜனனி, நந்தினியை சமாதானப்படுத்துகிறாள். உடனே நந்தினி இவன் எப்படி அனைத்து வழக்குகளில் இருந்தும் வெளியே வந்தான். முதலில் கொற்றவை மேடமுக்கு ஃபோன் செய்து என்ன விஷயம் என்று கேளு, இவனை புடிச்சி ஜெயிலில் போட சொல்லு என சொல்கிறாள். அப்போது ஜனனி அக்கா, உங்களுடைய முடிவில் நீங்க தீர்க்கமாக இருக்கிறீர்களா? தாராவிற்காக சொஞ்சம் யோசித்துப் பாருங்க, கதிருக்கு தாரா மீது பாசம் இல்லாமல் இருக்கலாம், ஆனால், தாரா அப்பா மீது அதிக பாசம் வைத்து இருக்கிறாள் என்று சொல்ல கண்கலங்கும் நன்தினி, என் மனசு வெறுத்துப்போச்சு ஜனனி, இதற்கு மேல் என்னால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது. என் முடிவில் நான் தெளிவாக இருக்கிறேன் என கண் கலங்கி பேசுகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X