பத்தினி விரதம் வீணாபோச்சுனு வருத்தப்படல.. அவன்லாம் ஒரு புருஷனா?.. கதிருக்கு கட்டம் கட்டிய நந்தினி!

சென்னை: கடையில் கதிர் பேசியதை நினைத்து நந்தினி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாள். அப்போது ஜனனி, நந்தினியை சமாதானப்படுத்துகிறாள். உடனே நந்தினி, அவன் கூட வாழ முடியவில்லை என்பதை நினைத்து வருத்தப்பட்டு அழுகிறேன் என நினைக்கிறியா ஜனனி. இத்தனை வருஷமா என் கூட பழவிட்டு, இன்னுமா நீ என்னை புரிஞ்சுக்கல. அவன் மனுஷனே இல்ல, இதுல புருஷன் என்கிற பட்டம் வேற, என் வாழ்க்கை போச்சு, இப்படிப்பட்ட மகானுக்கு இனிமே பொண்டாட்டியாக வாழ முடியாது, என் பத்தினி விரதமெல்லாம் வீணா போச்சே என்று வருத்தப்பட்டு அழுது கொண்டு இருக்கிறேன் என நினைச்சியா?

நான் இத்தனை நாளா வாழ்ந்தது எல்லாம் ஒரு வாழ்க்கையா? கதிர் என்னை கல்யாணம் செய்து கொண்டு அழைத்து வந்ததே அவனுக்கு ஒரு அடிமை வேண்டும். சமைத்து போட, துணி துவைக்க ஒருத்தி வேண்டும்,. என்பதற்காகத்தான். கேவலமான புத்தி கொண்ட கொலைகாரன் அவன் கூட மறுபடியும் சேர்ந்து வாழும் எண்ணமே எனக்கு இல்லை. நான் சொல்ல வேண்டியதை அவன் சொல்கிறான் விவகாரத்தை கொடுப்பேன் என்று, கொடுக்கட்டும் எல்லாத்தும் நான் தயாராக தான் இருக்கிறேன் என சொல்கிறாள். நந்தின் உடைத்து பேசுவதை பார்த்த ஜனனி, நந்தினியை தமாதானம் செய்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுநாள் காலை, நந்தினியின் அம்மா ஃபோன் செய்து, உன்னுடைய புருஷன் கதிர், அவசரமாக ஏதோ பேச வேண்டும் என என்னை வரை சொன்னான். வீட்டில் பெரிய பிரச்சனை நடந்து கொண்டு இருக்கிறது. வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களை எல்லாம் தூக்கிப்போட்டு எரித்துக் கொண்டு இருக்கிறான் எனக்கு பயமாக இருக்கிறது. உடனே வா என்று சொல்கிறார். இதை கேட்டுக் கொண்டிருந்த ஜனனி, அக்கா பிரச்சனை பெரிய விஷயமாகி கொண்டே இருக்கிறது. கதிர் ஏதோ ஒரு முடிவோடுத்தான் வீட்டிற்கு வந்து இருக்கிறான். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், நீங்கள் கதிரிடம் தீர்க்கமாக பேசி ஒரு முடிவை எடுத்துவிட்டு வாங்க என்று சொல்ல நந்தினி வீட்டுக்கு கிளம்பி செல்கிறாள்.

கொந்தளித்த: வீட்டிற்குள் நந்தி நுழைந்ததும், இனி இந்த வீட்டில் நீ இருக்க வேண்டும் என்றால், கடைக்கு போகக்கூடாது. சோத்துக் கடையை மூடிவிட்டு இந்த வீட்டில் நான் சொல்வதைகேட்டு இருக்க வேண்டும், இல்லை என்றால் நடையை கட்டிவிட்டு வெளியில் போ எ ன்று கதிர் சொல்கிறான். உடனே நந்தினி, நான் எது வேண்டுமானாலும் செய்வேன், உன் கூட வாழ்வதற்கு எனக்கு விருப்பமில்லை அதை சொல்விட்டு போகத்தான் வந்தேன் என்று சொல்கிறாள். உடனே கதிர், தாராளமா போ ஆனால், தாரா உன் கூட வரமாட்டாள், என் மகள் என்கூடத்தான் இருப்பாள் என்று தாராவை அறையில் தள்ளி அடைத்துவைத்துவிட்டு, நந்தினியை வெளியில் தள்ளிவிடுகிறான். இதனால் ஆத்திரத்தில் இருக்கும் நந்தினி, ஜனனிக்கு ஃபோன் செய்து, நான் சொன்னேன் ஜனனி, இவங்க ரொம்ப ஓவரா போவங்க, இப்போ தாராவை அறையில் அடைத்துவைத்து இருக்கிறார்கள். ரேணுகா அக்கா வரட்டும் இதற்கு ஒரு முடிவு கட்டிவிட்டு நான் வருகிறேன் என்கிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X