குண்டாஸ் ரத்து.. ஜாமீனில் வெளியே வரும் குணசேகரன்.. மீண்டும் சூடுபிடிக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த நந்தினிக்கும் கதிருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடக்கிறது. அப்போது, உனக்கும் எனக்கும் எல்லாம் முடிந்துவிட்டது. பத்திரத்தை எடுத்துக்கொண்டு வா, அதில் கையெழுத்து போட்டுவிட்டு போய்விடுகிறேன். இதற்கு மேலையும் கஷ்டப்பட்டுக்கொண்டு இந்த வீட்டில் என்னால் வாழ முடியாது என்று சொல்லும் நந்தினி, மகள் தாராவிடம் உனக்கு அப்பா இல்லை, உன் அப்பா செத்துவிட்டான். இனிமேல் எல்லாமே நான் மட்டும் தான் என மகளை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்புகிறாள்.
அப்போது கதிர். நந்தினி பிடித்து இழுத்து, வீட்டை விட்டு ஓடுவதாக இருந்தால் நீ ஓடு, இனிமேல் தாரா என் கூடத்தான் இருப்பாள், உனக்கு தாரா வேண்டும் என்றால் எல்லாத்தையும் விட்டு விட்டு நீ இந்த வீட்டோடு அடங்கி இருக்க வேண்டும் என சொல்லி தாராவை அறையில் அடைத்து விடுகிறான். இதனால், ஆத்திரத்தோடு வெளியில் வரும் நந்தினி, ஜனனிக்கு ஃபோன் செய்து, கதிர் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டான். நான் அடங்கமாட்டேன் என்பதால், தாராவை வைத்து மிரட்டுகிறான். தாராவை அறையில் பூட்டி வைத்து இருக்கிறான். இன்னைக்கு அவனுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு நான் வருகிறேன். ரேணுகா அக்கா வீட்டுக்கு வந்துக்கொண்டு இருக்கிறார்கள், இரண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுத்துவிட்டு வருகிறோம் என்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: விஷயத்தை கேள்விப்பட்ட ரேணுகா, வீட்டிற்கு வந்து நாங்க ஏதோ பிஸ்னஸ் செய்து செய்கிறோம். அதை இந்த வீட்டில் இருந்து செய்ய வேண்டாம் என்றால், நாங்க வெளியில் அதை பார்த்துக்கொள்கிறோம். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க ஞானம், யாரும் வீட்டை விட்டு வெளியில் போகக்கூடாது, அப்படி போனா திரும்ப இந்த வீட்டிற்குள் வரக்கூடாது என்று சொல்கிறான். உடனே ரேணுகா, நாங்க எங்க வேலையை தொடர்ந்து செய்வோம், வீட்டைவிட்டு போவோம் அதை யாராலையும் தடுக்க முடியாது என்று சொல்கிறாள். இதையடுத்து, நந்தினி நேத்தே எல்லாம் பேசிவிட்டேன், உனக்கும் எனக்கும் எல்லாம் முடிந்துவிட்டது. தாராவை அனுப்பி விட்டால் நாங்கள் வெளியே சென்று விடுகிறோம் என சொல்கிறாள். ஆனாலும் தாராவை வெளியில் விட முடியாது என கதிர் பிடிவாதமாக இருக்கிறான்.
சூடுபிடிக்கும் சீரியல்: தாரா அறைக்குள் அழுது கொண்டு இருக்க, பின் தாராவை வெளியில் அழைத்து வருகின்றனர். அப்போது தாரா தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள், என்னை ரூமில் வைத்து பூட்டாதீங்க பயமா இருக்கு, நீ செய்தது தப்புப்பா, அதனால் தான் அம்மாவிற்கு உன்னை பிடிக்கவில்லை, என்னல் அந்த வீட்டில் இருக்க முடியாது என்று அழுகிறாள். இப்படி இவர்களுக்குள் சண்டை நடந்து கொண்டு இருக்க, அப்போது ஞானத்திற்கு வழக்கறிஞரிடமிருந்து ஃபோன் வருகிறது. அதில், குணசேகரனின் குண்டாஸ் ரத்தாகிவிட்டது. அவர் நாளைக்கு ஜாமீனில் வெளியே வருகிறார் என சொல்கிறார். இதைக்கேட்டு சந்தோஷப்படும் கதிர், இனிமே உங்களுக்கு இருக்குடி, அண்ணன் ஜாமீனில் வெளியே வருகிறார் என சொல்கிறார். ஆனால், நந்தினி, ரேணுகா, விசாலாட்சி என ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதையடுத்து இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











