குணசேகரின் சதியால் பறிபோன உயிர்.. துடித்துப்போன ஜனனி.. நடந்தது என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், நந்தினி, கதிர் சண்டை போட்டுக்கொண்டு இருக்க, அப்போது ஞானத்திற்கு வழக்கறிஞரிடமிருந்து ஃபோன் வருகிறது. அதில், குணசேகரனின் குண்டாஸ் ரத்தாகிவிட்டது. அவர் நாளைக்கு ஜாமீனில் வெளியே வருகிறார் என சொல்கிறார். இதைக்கேட்டு சந்தோஷப்படும் கதிர், இனிமே உங்களுக்கு இருக்குடி, அண்ணன் ஜாமீனில் வெளியே வருகிறார் என சொல்கிறார். இதனால், நந்தினி, ரேணுகா, விசாலாட்சி என ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதையடுத்து இன்றைய எபிசோடில், ரேணுகா, ஜனனிக்கு ஃபோன் செய்து, இங்கே கதிர் பிரச்சனை செய்து கொண்டு இருக்கிறான். அதை நாங்க பார்த்துக்கொள்கிறோம். ஆனால், அங்கே ஏதோ பெரிய பிரச்சனை செய்ய இருக்கிறார்கள். நீ கவனமாக இரு ஜனனி என்று சொல்கிறாள். உடனே, அக்கா இங்கே நடக்கும் பிரச்சனையை நான் பார்த்துக்கொள்கிறான். நீங்க, முதலில் கதிர், ஞானத்திடம் பேசி முடிவு எடுத்துவிட்டு வாங்க என்று சொல்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, அந்த கடையில் வேலைக்கு சேர்ந்த அமுதாவின் கணவர், குடித்துவிட்டு கடைக்கு வந்து, என் பொண்டாட்டி எங்கே என்று கேட்கிறான். அவள் உன்னிடம் காசு வாங்கிவிட்டு வருவதாக சொன்னால், இன்னும் அவள் வரவில்லை என குடித்துவிட்டு தகராறு செய்கிறான். அப்போது, ஜனனி உனக்கு எல்லாம் அசிங்கமா இல்லையா... பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பி, அவ கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தில் குடிச்சிட்டு தகராறு பண்றீயா என ஒங்கி ஒரு அறைவிட்டு, உன் பொண்டாட்டி அமுதா இங்கே வரவில்லை என சொல்ல, அந்த குடிகார கணவன், என்னையே அடிச்சிட்டியா உன்னை சும்மா விடமாட்டேன் என்ற சொல்லிவிட்டு போலீசில் அமுதாவை காணவில்லை என புகார் கொடுக்கிறான்.
பறிபோனது உயிர்: பின், ஜனனியின் கடைக்கு வரும் போலீஸ், உங்க கடையில் வேலை செய்த அமுதாவை காணவில்லை என, அந்த அம்மாவின் கணவர் புகார் கொடுத்து இருக்கிறார். குறிப்பாக உங்க மேல சந்தேகமா இருப்பதாக கூறியுள்ளார். இதுவரைக்கும் அமுதாவை எங்கே தெரியும் கிடைக்கவில்லை. அமுதா, வீட்டிலிருந்து நேராக இங்குதான் வந்துள்ளார் என போலீஸ் கூறுகிறார்கள். இதனால், இந்த இடத்தை நான் சோதனை செய்ய வேண்டும் என சொல்லி போலீசார் சோதனை செய்ய, மொட்டைமாடியில் உள்ள பெரிய கவரை திறக்கிறார்கள். அதை பார்த்தவுடன் ஜனனி அய்யோ அமுதா என கத்துகிறாள். அமுதா இறந்துவிட்டார் என கூறுகின்றனர். ஜனனி மற்றும் பெண்களில் தொழிலை முடக்க இப்படியொரு விஷயத்தை ஆதி குணசேகரன் செய்து இருக்கிறார். இப்படி ஒரு விஷயத்தை ஆதி குணசேகரன் செய்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இனி, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











