கொலை வழக்கில் கைதான ஜனனி.. குணசேகரன் வலையில் வசமாக சிக்கினார்.. பதறி தவிக்கும் சக்தி!

சென்னை: ஜனனியின் கடைக்கு வரும் போலீஸ், உங்க கடையில் வேலை செய்த அமுதாவை காணவில்லை என, அந்த அம்மாவின் கணவர் புகார் கொடுத்து இருக்கிறார். குறிப்பாக உங்க மேல சந்தேகமா இருப்பதாக கூறியுள்ளார். இதுவரைக்கும் அமுதாவை எங்கே தேடியும் கிடைக்கவில்லை. அமுதா, வீட்டிலிருந்து நேராக இங்குதான் வந்துள்ளார் என போலீஸ் கூறுகிறார்கள். இதனால், இந்த இடத்தை நான் சோதனை செய்ய வேண்டும் என சொல்லி போலீசார் சோதனை செய்ய, மொட்டைமாடியில் உள்ள பெரிய கவரை திறக்கிறார்கள். அதை பார்த்தவுடன் ஜனனி அய்யோ அமுதா என கத்துகிறாள். அமுதா சடலமாகி கிடப்பதை பார்த்து பதறுகின்றனர்.

அமுதாவின் உடலை பார்த்து கதறி அழும் அந்த பெண்ணின் கணவர், சார், இவங்க தான், என் மனைவியை கொன்றுவிட்டார்கள். நான் என் மனைவி பற்றி விசாரித்த போதே என்னை அடிச்சாங்க, இப்போ என் மனைவி அடிச்சி கொன்றுவிட்டார்கள். நானும் என் மகளும் அநாதையாகி விட்டோம் என கதறி அழுகிறார். உடனே, ஜனனி சார் இப்படி செய்தார்கள் என்று உண்மையாகவே எங்களுக்கு தெரியாது. இவங்களுக்கு பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டோம். இதுதான் உண்மை என்று சொல்ல, போலீசார் ஜனனியை கைது செய்து வண்டியில் ஏற்றுகின்றனர். இதைப் பார்த்து பதறிப்போன சக்தி, என்ன நடந்தது என்று தெரியாமல் நீங்க எப்படி கைது செய்ய முடியும் என்று கேட்க, அப்போது போலீஸ்,இந்த பெண்ணின் கணவர் ஜனனி மீது தான் புகார் கொடுத்து இருக்கிறார். அதனால், கைது செய்து இருக்கிறோம் மற்றதை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளும்படி சொல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்படும் ஜனனியை 30 நாள் ரிமெண்ட் செய்து இருக்கும் விஷயத்தை சக்தி, நந்தினிக்கு ஃபோன் செய்து சொல்கிறான். இதையடுத்து நந்தினி, ரேணுகா இருவருமே இது எல்லாம் இவர்களின் வேலை தான். ஏதோ ஒரு திட்டத்தை போட்டு ஜனனியை இந்த விஷயத்தில் சிக்க வைத்த இருக்கிறார்கள். கொற்றவை மேடமுக்கு ஃபோன் போகவே இல்லை சக்தி. நீ மதிவதனி மேடம் வீட்டுக்கு போ அவர்களிடம் சென்று விசயத்தை சொல்லு, நாங்களும் அங்கே வருகிறோம் என நந்தினி, ரேணுகா இருவருமே கிளம்பி செல்கின்றனர். அப்போது, தர்ஷினி நானும் வருகிறேன் என்று சொல்கிறாள். ஆனால் ரேணுகா, வீட்டில் என்ன நடக்கிறது. இவர்கள் யார் யாரிடம் ஃபோன் பேசுகிறார்கள் என்பதை விசாரிப்பதற்கு வீட்டில் ஒரு ஆள் இருக்க வேண்டும். நீங்கள் வீட்டிலிருந்து பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு இருவருமே மதிவதனி வீட்டிற்கு கிளம்புகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X