போதை பொருள் விற்பனை.. தப்பித்து ஓடிய ஜனனி.. குணசேகரனை சிக்க வைக்கும் வீடியோ எங்கே.. எதிர்நீச்சல்!
சென்னை: ஜனனியின் கடைக்கு வேலைக்கு வந்த அமுதாவை போலீசார் பிணமாக மீட்கின்றனர். அமுதாவின் உடல் இங்கு இருப்பதால், நாங்க கொலை பண்ணதாக ஆகிவிடுமா, இதற்கு என்ன ஆதாரம் இருக்கு என்று சக்தி கேட்கிறார். அப்போது, போலீசார் ஒரு வீடியோவை காட்டுகிறார்கள். அந்த வீடியோவில் பேசும் அமுதா, இந்த கடையில சமூக விரோதமான போதைப்பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். இதனை நான் தட்டி கேட்டேன், என்னை அடிக்க வந்தாங்க, எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு காரணம் ஜனனி தான் என பேசி உள்ளார். இந்த ஆதாரத்தை வைத்துத்தான் நாங்க ஜனனியை கைது செய்கிறோம் என்று, ஜனனியை போலீசார் கைது செய்து அழைத்து செல்கின்றனர்.
ஜனனியை நீதிமன்றத்தல் ஆஜர் செய்ய, நீதிபதி ஜனனிக்கு 30 நாள் சிறையில் அடைக்கும்படி உத்தரவு வருகிறது. இந்த விஷயத்தை சக்தி, நந்தினிடம் சொல்கிறான். அப்போது, நந்தினி இது எல்லமே இவர்களின் சதிதான். நமக்கு உதவி செய்வதற்கு இப்போது யாரும் இல்லை. நீ கலெக்டர் மதிவதனி மேடம் வீட்டுக்கு சென்று விஷயத்தை சொல்லு, நாங்களும் அங்கு வருகிறோம் என்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், ரேணுகா, நந்தினி, சக்தி மூன்று பேரும் மதிவதனியை சந்தித்து பேசுகின்றனர். அப்போது சக்தி, கடையில் நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்லிக் கொண்டு இருக்க, ஒரு போலீஸ் டீம் கலெக்டரின் வீட்டுக்குள் நுழைந்து, வீட்டை சோதனை போட வேண்டும் என சொல்கின்றனர். எதற்காக சோதனை போட வேண்டும் என மதிவதனி கேட்க, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, ஜனனியை அழைத்து செல்லும் வழியில் ஜனனி தப்பித்துவிட்டதாக சொல்கிறார். இதைக்கேட்டு பதறிப்போன சக்தி, ஜனனி அப்படி செய்வதற்கு வாய்ப்பே இல்லை. நீங்க ஜனனியை ஏதோ செய்துவிட்டீங்க என்று சொல்லி கத்துகிறான்.

தப்பிச்சென்ற ஜனனி: அப்போது போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஒரு கைதி தப்பித்துவிட்டால், பிரச்சனை எங்களுக்கு தான் அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் ஜனனியை ஏதாவது செய்யப் போகிறோம். ஜனனி உண்மையிலேயே தப்பித்துவிட்டார். அதற்காகத்தான் இந்த வீட்டை சோதனை போட வந்தோம் என சொல்லி, போலீசார் வீட்டு முழுவதும் சோதனை போட்டுகின்றனர். ஜனனி அங்கு இல்லாததால், போலீசார் சென்று விடுகின்றனர். அப்போது மதிவதனி, ஜனனி எதற்காக போலீசில் இருந்து தப்பித்தார். அவர் தப்பித்தது பெரிய தப்பு, அவர் அப்படி செய்து இருக்க கூடாது. இந்த நேரத்தில் ஜனனிக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று பதறுகிறார். அப்போது நந்தினி, நிச்சயமாக இந்த வேலையை, குணசேரன் தான் செய்து இருப்பார். குணசேகரன் நாளைக்கு குண்டர்ஸ் ரத்தாகி வீட்டிற்கு வருகிறார். ஆனால், ஜனனியை போலீசார் கொலை வழக்கில் கைது செய்து இருக்கிறார்கள். இங்கு என்ன தான் நடக்கிறது என்று தெரியவில்லை என பதற்றத்துடன் பேசுகிறாள்.
வீடியோ எங்கே: மறுபக்கம், கதிருக்கு ஃபோன் செய்யும் வழக்கறிஞர், குணசேகரன் ஈஸ்வரியை அடித்த வீடியோவை வீட்டில் தான் எங்கே வைத்து இருக்கிறார். அதை எப்படியாவது கண்டுபிடிங்க, அது பெண்கள் கையில் கிடைத்துவிட்டால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்று சொல்கிறார். இந்த விஷயத்தை கதிர்,ஞானத்திடம் ரகசியமாக சொல்லிக்கொண்டு இருக்க, அறிவுக்கரசி இதை எதற்கு மாமா ரகசியமாக பேசுறீங்க, நாம எல்லாருமே சேர்ந்து அந்த வீடியோ தேடுவோம் என்கிறாள். இப்படியான நிலையில் ஜனனிக்கு என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











