ஜனனியின் உயிர் தப்புமா? உலகமே காரிதுப்பும்.. கதிரிடம் சவால் விட்ட ரேணுகா.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: போதை வழக்கில் கைதான ஜனனி நேற்று போலீஸிடம் இருந்து தப்பி சென்று விடுகிறாள். இந்த விஷயம் தெரிந்த சக்தி, மதிவதனி இருவருமே அனைவருமே ஜனனி இப்படி செய்திருக்கக்கூடாது. ஜனனிக்கு ஏதாவது பிரச்சனை நடந்துவிட்டால், பின் விபரீதமாகிவிடும் என பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதையடுத்து மதிவதனி இதுபற்றி நான் கூடிய சீக்கிரத்தில் முடிவு எடுக்கிறேன் என சொல்ல அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். குணசேகரனின் நண்பர் எம்எல்ஏ குமார், அடியாட்களை வைத்து தப்பித்துப் போன ஜனனியை கடத்தி ஒரு இடத்தில் கை, கால்களை கட்டிப்போட்ட அடைத்து வைத்துள்ளனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் கதிர், ஞானம் இருவருமே ஜனனி தப்பி சென்று விட்டார். என்னமோ பெரிய இவ மாதிரி பேசுவா, ஆனால், போலீஸ் பிடித்ததும் பயந்து எங்கோ ஓடி விட்டால் என்று சிரிந்து சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதைக் கேட்டு ஆத்திரப்படும் ரேணுகா, தேவை இல்லாமல் ஜனனி பற்றி யாரும் இங்கு பேசக்கூடாது எங்களைப் பற்றி இந்த ஊரில் தான் பேசுகிறார்கள். ஆனால். நீங்கள் செய்த விஷயத்தைப் பற்றி இந்த உலகமே பேசுது. அந்த பாவத்திற்கும் என்ன செய்வது என்று யோசியுங்கள் தேவையில்லாமல் இனிமேல் ஜனனியை பற்றி பேசினீங்க என்றால் நன்றாக இருக்காது என சொல்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

ஆத்திரத்தில் ரேணுகா: அப்போது கோபப்படும் கதிர், இனிமேல் தான் உங்க கூட்டத்திற்கு சரியான தண்டனை இருக்கு. நிலத்திற்கு வாடகை கொடுத்தவன், வண்டியை வாடகை கொடுத்தவன் என அனைத்து கடன்காரர்களும் வந்து உங்களை கேள்வி மேல் கேள்வி கேட்பாங்க, அப்போது என்ன செய்வீர்கள் என்று என்று கேட்கிறான். உடனே ரேணுகா, அவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் நாங்க சொல்லிக் கொள்கிறோம். இது உங்களுக்கு தேவையில்லாத வேலை. உங்கள் வேலையை நீங்க பார்த்துக்கொண்டு போங்க, என திமிராக பேசுகிறாள். இதனால் ஆத்திரப்படும் ஞானம், ஏய் ரேணுகா வாயை மூடிக்கொண்டு போ, என்ன மிரட்டுறியா என்று கேட்கிறான். ஆமாம், மிரட்டுறேன், உங்க அண்ணன் வீடியோ என்னிடம் தான் இருக்கு, அது மட்டும் வெளியே வந்தால் உலகமே காரிதுப்பும், தூக்குல தொங்கவேண்டியது என்று சொல்ல, என்னால் இனிமேல் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது, என்னை மிரட்டுவதற்கு இந்த வீட்டில் யாருக்கும் தகுதியே இல்லை என சொல்கிறாள்.

ஜனனியின் உயிர் தப்புமா?: மறுபக்கம் ஜனனி கை, கால்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் இருக்க, அவளுக்கு லேசாக மயக்கம் தெளிகிறது. அப்போது எம்எல்ஏ குமார் ரௌடிகளிடம் அண்ணனுக்கு நாளைக்கு ஜாமீன் கிடைத்துவிடும். அவர் வெளியே வந்தவுடன் ஜனனியின் கதையை முடித்விடுங்கள்.போலீசில் இருந்து தப்பித்துப்போனவள் யார் கையிலும் கிடைக்கவே கூடாது என்று சொல்கிறான். இதனால் ஜனனிக்கு என்ன ஆகுமோ என்கிற பதற்றம் எழுந்துள்ளது. இதையடுத்து அடுத்து என்ன ஆனது என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X