கொலை வெறியில் குணசேகரன்.. தர்ஷனால் வரும் புது பிரச்சனை.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: கடை திறப்பு விழா கலெக்டரின் தலைமையில் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது என சொல்ல ஆத்திரப்படும் குணசேகரன் அங்கு இருக்கும் ரவுடியை அனுப்பி அனைவரின் கதையையும் முடிக்க சொல்கிறான். இதையடுத்து, அந்த ரவுடி கையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு, ஜனனியின் அருகில் செல்ல, ஜனனி அவரிடம் அன்போடு நடந்து கொண்டதை பார்த்து மனம் மாறி அந்த இடத்தில் இருந்து சென்றுவிடுகிறான். திட்டமிட்டபடி திறப்பு நடத்திய சந்தோஷத்தில் அனைவரும் இருக்க குணசேகரன் கடும் கோவத்தில் இருக்கிறார்.

திட்டம் தோல்வி அடைந்ததால், ஆத்திரத்தில் இருக்கும் குணசேகரன், டேய் கதிரை கடுமையாக திட்டிவிட்டு, இதற்கு மேல் உங்களை நம்பி பயன் இல்லை. இனி என்ன அடுத்து செய்ய வேண்டும் என்பதை நானே பார்த்துக்கொள்கிறேன் என கோபத்தோடு சொல்கிறார். இதற்கு மேல் நாம இங்கு தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, நாம் அனைவரும் இங்கிருந்து கிளம்ப வேண்டியதுதான் என்று சொல்ல கரிகாலன் மீண்டும் அந்த வீட்டுக்கா மாமா என கேட்கிறார். அப்போது குணசேகரன் அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் வேரோடு சாய்த்து விட்டு தான், அந்த வீட்டில் நான் கால் வைப்பேன் சொல்லிவிட்டு அனைவரும் அந்த இடத்தை விட்டு கிளம்புகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் வீட்டில் அனைவரும் அமைதியாக ஜாலியாக பேசிக்கொண்டு எப்படியோ கடை திறப்பு விழா நன்றாக நடந்துவிட்டது. இதற்கு எல்லாம் காரணம் கலெக்டர் தான் அவங்க மட்டும் இல்லை என்றால், கடை திறப்பு விழா நடந்தே இருக்கா என சொல்கிறார். அப்போது ஜனனி, நான் கலெக்டரின் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு நன்றி தெரிவித்து வருகிறேன் என செல்கிறார். இதைத்தொடர்ந்து, வீட்டில் ரேணுகா, நந்தினி இருவரும், ஹோட்டலுக்கான சமையல் வேலைகளை செய்து கொண்டு இருக்கின்றனர்.

புது பிரச்சனையுடன் வரும் தர்ஷன்: இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், குணசேகரன் ஆக்ரோஷமாக உன்னை நம்பித்தான் நான் வந்து கொண்டு இருக்கிறேன். என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிடு என பேசுகிறார். சென்னைக்கு இன்டர்வியூக்கு வந்த தர்ஷன் இன்டர்வியூ முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார், வரும்போதே புது பிரச்சனை உடன் தர்ஷன் வர, அப்போது விஷாலாட்சி, உன்னுடைய சித்திகள் எல்லாம் இந்த வீட்டை எப்படி தலை தூக்கி நிறுத்த யோசித்துக் கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நீ வரும்போதே புது பிரச்சனையோடு வந்து இருக்க என சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X