சரிந்து விழுந்த ஜனனி.. துடித்துப்போன சக்தி.. அரக்ககுணத்தை காட்டிய குணசேகரன்!
சென்னை: ஜனனியின் கை, கால்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் இருக்க, அவளுக்கு லேசாக மயக்கம் தெளிகிறது. அப்போது எம்எல்ஏ குமார் ரௌடிகளிடம் அண்ணனுக்கு நாளைக்கு ஜாமீன் கிடைத்துவிடும். அவர் வெளியே வந்தவுடன் ஜனனியின் கதையை முடித்துவிடுங்க, போலீசில் இருந்து தப்பித்துப்போனவள் யார் கையிலும் கிடைக்கவே கூடாது என்று சொல்கிறான். இதனால் ஜனனிக்கு என்ன ஆகுமோ என்கிற பதற்றம் எழுந்துள்ளது. இதையடுத்து, குண்டாஸ் ரத்தாகி குணசேகரன் ஜாமீனில் வெளியே வருகிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோடில் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் குணசேகரன் மாஸாக வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறார். குணசேகரனை பார்த்த அறிவுக்கரசி துள்ளி குதித்துக் கொண்டு ஆரத்தி எடுக்கிறாள். குணசேகரன் வந்ததை பார்த்து அனைவரும் ஸ்தம்பித்து போய் நிற்கின்றனர். அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் அனைவரும் இருக்கின்றனர். வீட்டுக்குள் வந்த குணசேகரன், விசாலாட்சியை பார்த்துவிட்டு எதுவுமே பேசாமல் அமைதியாக செல்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜனனியை கடத்தி வைத்திருக்கும் எம்எல்ஏ குமார், ரவுடிகளுக்கு ஃபோன் செய்து குணசேகரன் வெளியில் வந்துவிட்டார். இதற்கு மேல் அந்த ஜனனி உயிரோடு இருக்க தேவையில்லை. காதும் காதும் வைத்தது போல, அவள் கதையை முடித்துவிட்டு எனக்கு தகவல் சொல்லுங்கள் என சொல்கிறார். இதையடுத்து ரவுடிகள், ஜனனியை கொல்வதற்காக செல்கின்றனர். மயக்கம் தெளிந்த ஜனனி, கையில் கட்டப்பட்டிருந்தால் கயிறை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து செல்ல முயற்சி செய்கிறாள். அப்போது, ரவுடிகள் அறைக்குள் வந்ததும் அவர்களை அடித்து விட்டு. அந்த இடத்தில் இருந்து ஜனனி தப்பித்து செல்கிறாள். ஆனால், அவளை ரவுடிகள் விடாது துரத்திக் கொண்டே வருகின்றனர். மறுபக்கம் சக்தி, நந்தினிக்கு ஃபோன் செய்து ஜனனிடம் இருந்து ஏதாவது ஃபோன் வந்ததா என்று கேட்கிறான். அப்போது நந்தினி, ஜனனியிடம் இருந்து எந்த ஃபோனும் வரவில்லை. ஆனால், உங்கள் அண்ணன் குணசேகரன் வந்து விட்டார் என்கிறாள். கேட்டதும் சக்தி அதிர்ச்சியில் உறைந்து போகிறான். மறுபக்கம் எம்எல்.ஏ குமாருக்கு ரவுடிகள் போன் செய்து ஜனனி கதையை முடித்துவிட்டதாக சொல்கின்றனர். இதையடுத்து எதிர்நீச்சல் சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











