ஜனனிக்கு என்ன ஆச்சு... கதறி அழும் சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: ஜனனியை கடத்தி வைத்திருக்கும் எம்எல்ஏ குமார், ரவுடிகளுக்கு ஃபோன் செய்து குணசேகரன் வெளியில் வந்துவிட்டார். இதற்கு மேல் அந்த ஜனனி உயிரோடு இருக்க தேவையில்லை. காதும் காதும் வைத்தது போல, அவள் கதையை முடித்துவிட்டு எனக்கு தகவல் சொல்லுங்கள் என சொல்கிறார். இதையடுத்து ரவுடிகள், ஜனனியை கொல்வதற்காக செல்கின்றனர். மயக்கம் தெளிந்த ஜனனி, கையில் கட்டப்பட்டிருந்தால் கயிறை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து செல்ல, அவளை ரவுடிகள் பின் தொடர்ந்து, விடாது துரத்திக் கொண்டே வருகின்றனர்.

வீட்டிற்கு வந்த குணசேகரன்,விசாலாட்சியிடம் உன்னை இனி மேல் எப்படி அம்மா என்று கூப்பிடுவது என்றே தெரியவில்லை. எனக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செஞ்ச நீ, நான் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் ஊர் ஊராக சுத்திக்கொண்டு இருக்கும் போது, இவளுங்களோட சேர்ந்துகிட்டு சோத்துக்கடை வைக்கிறியா? கடைசியில் நீயும் ஆதிமுத்து குடும்பத்தோட ரத்தம் இல்லங்குறத நிரூபிச்சிட்ட, இத்தனை நாளா எங்க கூட நடிச்சிட்டு இருந்திருக்க, சரியான நேரம் வந்ததும் உன்னோட வேஷம் கலைந்துவிட்டது.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இந்த வீட்டுக்குள்ள வந்து இருக்கும் பொம்பளைங்க எல்லாருமே துரோகிகள், ஆனா, இந்த கரிகாலன் யாரு அவனுக்கு பொண்ணு குடுக்குறன்னு சொன்னேன். கல்யாணம் கூட பண்ணி வைக்க முடியல, அவன் எனக்காக என் கூட இருக்கான், கஷ்டப்படுறான் எனக்காக கண்ணீர் விடுறான். ஆனா, பெத்த தாய் நீ. நான் செத்தாலும் பரவாயில்லை என பட்டு புடவை கட்டிக்கிட்டு சோத்து கடையில் திறக்க போய் இருக்க, உன்னை எல்லாம் என்ன சொல்றதுன்னே தெரியல என விசாலாட்சியை திட்டிக்கொண்டு இருக்கிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

கதறி அழும் சக்தி: மறுபக்கத்தில் ரவுடிகளிடம் இருந்து தப்பித்த ஜனனி, ஒரு இடத்திற்கு செல்ல அங்கு கிணறு இருக்கிறது. கிணற்றுக்கு பக்கத்தில் இருக்கும் மோட்டார் ரூமுக்குள் சென்று ஜனனி ஒளிந்து கொள்கிறாள். வெளியில் ஜனனியை தேடி வரும் ரௌடிகள் அங்கு இருப்பவரிடம் ஒரு பொண்ணு இந்த பக்கம் வந்துதா என்றும், அந்த மோட்டார் ரூமை திறங்க என்று சொல்ல, அந்த நபர் நீங்க யாரு, யாரை தேடி வந்தீங்க, நான் ஏன் பூட்டி இருக்கும் மோட்டார் கதவை திறக்க வேண்டும் என கேள்வி கேட்க, ரவுடிகள் அங்கிருந்து சென்று விடுகின்றனர். ஜனனி பூட்டிய மோட்டார் அறையில் இருக்கிறாள். மறுபக்கம், கொற்றவை மற்றும் சக்தியை இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது சக்தி, ஜனனியை எங்கே தேடியும் கிடைக்கவில்லை. அவள் ரௌடிகள் கையில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என பதற்றத்தில் புலம்பி கொண்டு இருக்கிறான். கொற்றவை உங்க பயம் புரியுது சக்தி என சமாதானம் படுத்த சக்தி கதறி அழுகிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X