குணசேகரனின் திட்டம்.. ஜனனிக்கு தெரியவந்த உண்மை.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில் சென்னைக்கு இன்டர்வியூக்கு சென்று விட்டு வந்த தர்ஷன், சோகத்துடன் வீட்டிற்கு வருகிறான். அப்போது வெறுப்பாக பேசும் தர்ஷன், நேற்று இரவு வீட்டிற்கு வந்தேன். வீடு பூட்டி இருந்தது வீட்டில் யாரும் இல்லாததால் பார்க்கில் சென்று திண்ணையில் படுத்து கொண்டேன் என சொல்கிறான். இதை கேட்டு ஆத்திரப்படும். விசாலாட்சி உன் சித்திகள் எல்லாம் ஒவ்வொரு வேலையாக ஓடிக் கொண்டு இருக்கிறார்கள், நீ எதற்காக பார்க்கிற்கு சென்று படுத்த என கேட்க. இந்த வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையாக ஓடிக் கொண்டு இருக்கிறார்கள் என்னை கவனித்துக் கொள்வதற்கு யாரும் இல்லை. மறுபடியும் தனியாக இருப்பது போல தோன்றியது. அதனால் தான் பார்க்கிறல் சென்று படுத்துக்கொண்டேன் என சொல்கிறான்.
இதையடுத்து ரேணுகா, நீ போன விஷயம் என்ன ஆனது என்று கேட்க, அப்போது தர்ஷன் வீட்டில் இருப்பவர்களை என்னை மதிப்பதில்லை வெளியில் இருப்பவர்கள் எப்படி என்னை மதித்து வேலை கொடுப்பார்கள். பெரிய இடத்தில் ரெகமெண்டேஷன் இருந்தால் வேலை தருகிறேன் என சொல்கிறார்கள் என்று கோபத்தோடு சொல்லிவிட்டு வேகமாக வீட்டிற்குள் சென்று விடுகிறான். அதை மேலே இருந்து பார்த்துக் கொண்டு இருந்த அறிவுக்கரசி, என்னடா வேதாளம் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறுது என முல்லை இடம் சொல்கிறாள்.

ஜனனிக்கு தெரியவந்த உண்மை: மறுபக்கம் கலெக்டரை பார்ப்பதற்காக ஜனனி சென்ற நிலையில் வழியில், கடைதிறப்பு விழாவில், ஜனனியை கொல்ல வந்த நபரை பார்த்துவிட்டு, நேற்று ஏன் நீங்க சாப்பிடாமல் போனீங்க என கேட்கிறாள், அப்போது அந்த ரவுடி, நான் உங்களை கொல்வதற்காகத்தான் வந்தேன். ஆனால், நீங்கள் என்னிடம் அன்பாக பேசியதைப்பார்த்து என் மனம் மாறிவிட்டது உங்களை கொலை செய்ய செய்தால் பணம் தருவதாக கூறினார் என்ற உண்மையை சொல்கிறாள். இதையடுத்து, ஜனனி என்னை கொல்ல சொன்னது யார் என்று குணசேகரின் போட்டோவை காட்ட, அந்த ரௌடி இவர் தான் பணம் கொடுத்து உங்களை கொல்வதற்கான பணம் கொடுத்தார் என்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்,


Click it and Unblock the Notifications











