குணசேகரனை கழட்டி விட்ட இயக்குநர்.. மாறும் கதைக்களம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: கலெக்டரை பார்ப்பதற்காக ஜனனி அவரின் வீட்டிற்கு சென்று அவரை பார்த்து பேசுகிறார்.
அப்போது, ஜனனியை கொல்ல வந்த நபர் வந்து பேசுகிறார். அவரை பார்த்த ஜனனி, நேற்று ஏன் நீங்க சாப்பிடாமல் போனீங்க என கேட்கிறாள், அப்போது அந்த ரவுடி, அக்கா நான் சாப்பிட வரவில்லை, உங்களை கொல்வதற்காகத்தான் வந்தேன். ஆனால், நீங்கள் என்னிடம் அன்பாக பேசியதைப்பார்த்து என் மனம் மாறிவிட்டது. எனக்கு அம்மா, தங்கை இருக்கிறார்கள் அவர்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். உங்களை கொலை செய்ய செய்தால் பணம் தருவதாக சொன்னாங்க அதற்காகத்தான் நான் உங்களை கொல்வதற்காக வந்தேன். ஆனால், என்னால் முடியவில்லை அக்கா என்கிறார்.
இதையடுத்து, ஜனனி என்னை கொல்ல சொன்னது யார் என்று குணசேகரிடம் போட்டோவை காட்ட, அந்த ரௌடி இவர் தான் பணம் கொடுத்து உங்களை கொல்ல சொன்னார். இதை நான் போலீசில் கூட சொல்லுவேன் அக்கா என்று சொல்கிறான். உடனே வேண்டாம் தம்பி அப்படி செய்தால் உனக்குத்தான் பிரச்சனை வரும், நீ உன் அம்மா, தங்கையை நன்றாக பார்த்துக்கொ அதுபோதும் என்கிறாள். இந்த விஷயத்தை ஜனனி, கலெக்டரிடம் சொல்ல அவர், வாங்க போலீசில் புகார் கொடுக்கலாம் என்று சொல்கிறார். வேண்டாம், அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் நான் தெளிவாக இருக்கிறேன் என்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது ஜனனி, கிளம்புவதாக சொல்ல கலெக்டர் நான் உங்களை காரில் டிராப் பண்ணுகிறேன் என சொல்கிறாள். இருவரும் ஒன்றாக வெளியே வருகின்றனர். அப்போது ஒருவர் கலெக்டரிடம் வந்து, மகளை பார்க்க வேண்டும் அழைத்து வாருங்கள் என சொல்கிறார். உடனே ஆத்திரப்படும் கலெக்டர், கோர்ட்டு சொன்ன நாளின் மட்டும் தான் என் மகளை நீங்கள் பார்க்க முடியும் உங்களுக்கு வேலை இருக்கிறது என்பதற்காக தேவையில்லாத நேரத்தில் எல்லாம் என்னுடைய மகளை நான் அனுப்ப மாட்டேன். அதை உங்க ஓனரிடம் சொல்லி விடுங்கள், தேவையில்லாமல் மீண்டும் பிரச்சனை செய்தால் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து பார்க்கும் நேரத்தை கூட குறைத்து விடுவேன் என சொல்கிறாள். இதையடுத்து அந்த நபர் சென்று விடுகிறார். இதை பார்த்த ஜனனி, கலெக்டரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறாள். மறுபக்கம் குணசேகரன் எந்த விதமான தகவலும் அறிவுக்கரசியிடம் இருந்து வரவில்லையே என குழப்பத்தில் இருக்கிறார். கடந்த சில வாரங்களாக குணசேகரை சீரியலில் பார்க்கவே முடிவில்லை. எதிர்நீச்சல் சீரியலில் மிக முக்கியமானவதே அவர் தான், ஆனால் அவரை கழட்டிவிட்டு இயக்குநர் கதையை வேறு கோணத்தில் எடுத்து செல்கிறார்.


Click it and Unblock the Notifications











