கலெக்டர் மதிவதினி ராணாவின் மனைவியா? குணசேகரனுக்கு காத்திருக்கும் ஆபத்து.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: மதிவதினிக்கு நன்றி சொல்லிவிட்டு ஜனனி வீட்டிற்கு கிளம்புவதாக சொல்ல கலெக்டர் நான் உங்களை காரில் டிராப் பண்ணுகிறேன் என சொல்கிறாள். இருவரும் ஒன்றாக வெளியே வரும் போது, சொகுசு காரில் இருந்து இறங்கி வந்த ஒருவர், கலெக்டரிடம் வந்து, மகளை பார்க்க வேண்டும் அழைத்து வாருங்கள் என சொல்கிறார். உடனே ஆத்திரப்படும் கலெக்டர், கோர்ட்டு சொன்ன நாளின் மட்டும் தான் என் மகளை நீங்கள் பார்க்க முடியும் உங்களுக்கு வேலை இருக்கிறது என்பதற்காக தேவையில்லாத நேரத்தில் எல்லாம் என்னுடைய மகளை நான் அனுப்ப மாட்டேன். அதை உங்க ஓனரிடம் சொல்லி விடுங்கள், தேவையில்லாமல் மீண்டும் பிரச்சனை செய்தால் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து பார்க்க கூட விடமாட்டேன் என்று சொல்கிறாள். பின் அந்த நபர் நபர் சென்று விடுகிறார். இதை பார்த்த ஜனனி, கலெக்டரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறாள்.

பின் மதிவதினி வீட்டிற்குள் செல்ல, ஜனனியும் செல்கிறாள் அப்போது, தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேட்கிறேன் என தவறாக நினைக்க வேண்டாம் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் பிரச்சனையாக என்று கேட்கிறாள். இதையடுத்து, தன்னுடைய கடந்தக்காலம் பற்றி மதிவதினி சொல்கிறாள். இலங்கையில் குடும்பத்தை இழந்துவிட்ட வந்த தன்னை, தன்னுடைய அப்பா தத்தெடுத்து வளர்த்தார். என்னை கலெக்டர் ஆக்குவதற்காக பெரும் உதவியாக இருந்த அவர், தான் கலெக்டர் ஆவதற்கு முன்பாகவே அப்பா இறந்துவிட்டார். அதன்பின்னர் தவறான ஒரு ஆளை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். ஆனால், அவருக்கும் எனக்கும் சரிபட்டு வராததால் இருவரும் பிரிந்துவிட்டோம் என்று சொல்கிறார். அதனையெல்லாம் கேட்டு கலெக்டர் வாழ்வில் இவ்வளவு விஷயங்கள் நடந்துள்ளதா என்பதை அறிந்து கடுமையாக அதிர்ச்சி ஆகிறாள். அதோடு இப்போது தானும், மகளும் மட்டுமே இருப்பதாகவும் சொல்கிறார் மதிவதினி.
மதிவதினி யார்?: இதைத் தொடர்ந்து ஜனனி கடைக்கு செல்ல, அங்கு நிலத்தின் உரிமையாளர் ஒரு பிரியாணி கடைக்காரரை அனுப்பி தகராறு செய்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் இதை பார்த்துக்கொண்டு பொறுத்துக் கொள்ள முடியாத சக்தி, அந்த நபரை அடிக்க செல்கிறான். அப்போது ஜனனி, அவர்களை தடுத்து நிறுத்தி இவனை பிரச்சனை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு அனுப்பி இருக்கிறார்கள் அதை தெரிந்து கொண்டும் நாம் இவனிடம் பிரச்சனை செய்வது நல்லதில்லை என சமாதான படுத்தி அவர்களை அழைத்து செல்கிறார். இன்றைய எபிசோடில் யோசிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் மதிவதினி இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் அனேகமாக மதிவதினி ராணாவின் மனைவியாக இருப்பாரோ அந்த நோக்கி கதை நகருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











