அறிவுக்கரசி உணவில் கலந்தது என்ன? சிறைக்கு செல்வாரா ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய நேற்றைய எபிசோடுல நந்தினி கவுன்சிலர் வந்து மிரட்டிய விஷயத்தை விசாலாட்சியிடம் சொல்கிறாள். அது மட்டும் இல்லாம உங்க பையன் ஜனனியோட கதையை முடிக்கிறதுக்காக ஒரு பெரிய திட்டம் போட்டு, கடை திறப்பு விழாவை நடக்கக்கூடாது என்று வெடிகுண்டு வீசுவதற்கும் பிளான் பண்ணி இருந்தாங்க, நல்ல வேலை ஜனனி அந்த பையன் கிட்ட அன்பா பேசுனதுனால அந்த பையன் எதுவுமே செய்யாம மனசு மாறிவி போய்விட்டான். இல்லை என்றால் என்ன ஆயிருக்கும் எப்படித்தான் இந்த மாதிரி குழப்பத்தை செய்றாங்கன்னு என்று சொல்கிறாள். இதைக்கேட்டு, கவனமா வேலை செய்ங்க என்று சொல்கிறாள்.
இன்றைய எபிசோடில், அன்புக்கரசி குணசேகரனுக்கு போன் பண்ணி, நீங்க எதுவும் செய்ற மாதிரி தெரியல, இவளுங்க பிசினஸை ஆரம்பிச்சி ஆட்டமா ஆடுறாங்க. இந்த பிசினசுக்கு இப்போ கலெக்டரும் துணையா இருக்காங்க போல, அது மட்டும் இல்ல ஞானம் மாமா, நீங்க போட்ட திட்டத்தை எல்லாமே, ரேணுகா கிட்ட சொல்லிட்டு இருக்காரு. இப்போ எல்லாமே நம்ம கையை மீறி போயிட்டு இருக்கு, இவளுங்க ஆட்டத்தை என்னால பார்க்கவே முடியல மாமா, ஏதாவது நீங்க கண்டிப்பா செய்யணும் என்கிறாள். உடனே, குணசேகரன் கொஞ்சம் அமைதியா இரு, அதற்கான ஏற்பாடுகளை நான் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் என்கிறார். இல்ல மாமா, நான் வேற ஒரு ஐடிகா வெச்சி இருக்கேன் அதை செய்கிறேன் என்கிறாள். உடனே குணசேகரன் நீ என்ன வேணுமானால செய் என்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: உடனே அறிவுக்கரசு முல்லையிடம், இந்த விஷயத்தை மட்டும் நாம சரியாக செய்துவிட்டால், ஜனனியை ஜெயிலுக்கு அனுப்பிவிடலாம் என்கிறார். உடனே முல்லை, என் பிளான் சொல்லு செய்துவிடுவோம் என்று கேட்கிறார். இவளுங்க சாப்பாட்டுக்கடை தானே வெச்சி இருக்காங்க, அந்த சாப்பாடு தரமானதா இல்லை, சாப்பாட்டில் கலப்படம் இருக்கு, கரப்பான்பூச்சி இருக்கு, புழு இருக்குனு புகார் வந்தா, அந்த வண்டிக்கும் சீல் வைப்பாங்க, ஜனனியை கைது செய்துவிடுவார்கள் என்று ஐடியாவை சொல்ல முல்லை சாரியான பிளான் என்கிறான்.
இதையடுத்து, அனைவரும் சமைத்துமுடித்துவிட்டு மேல சென்ற நேரத்தில், அறிவுக்கரசியும் முல்லையும் சமையல் அறைக்கு வந்து, அவர்கள் சமைத்துவைத்த உணவில் கரப்பான்பூச்சை போடும் நேரத்தில், ஜனனி வந்துவிடுகிறார். ஜனனியை பார்த்த முல்லை பயத்தில் ஏதோ உளர,ஜனனிக்கு சந்தேகம் வந்து நீ எதுக்கு இங்க இருக்க என்றுகேட்கிறாள், பின் சமையல் அறைக்கு சென்று பார்க்க அங்கு அறிவுக்கரசி இருக்கிறார். உடனே நீ எதுக்கு இங்கே வந்து உனக்கு இங்கே என் வேலை என்று கேட்க, அறிவுக்கரசி இது என் மாமா வீடு, நான் எங்க வேண்டும் என்றாலும் போவேன், தண்ணீர் கூட குடிக்க இங்கு வரக்கூடாதா என்று சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











