அய்யோ எல்லாம் என்னால் தான்.. பார்கவியின் காலில் விழுந்த தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: காவல்துறை அதிகாரி அறிவுக்கரசிக்கு ஃபோன் செய்து இங்கு நிலைமை சரி இல்லை நிச்சயமாக எஃப்.ஐ.ஆர் போட வேண்டியது வரும், இதுக்கு மேல என்னால் எதுவும் செய்ய முடியாது. எஃப்.ஐ.ஆர் போட்டால், வீட்டிற்கு வந்து ஆய்வு செய்வார்கள். தவறு செய்து இதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியாது, இனிமேல் எனக்கு ஃபோன் செய்யாதீர்கள் என்கிறார். மறுபக்கம் ஜனனி, காவல்துறை அதிகாரி சரியான நடவடிக்கை எடுக்காததால் சாலையில் அமர்ந்து தர்ணா செய்கின்றனர். அப்போது, அங்கு வரும், கொன்றவை உங்களுக்கு சரியான நியாயத்தை நான் வாங்கி தருகிறேன் என்கிறார்.

இதைத்தொடர்ந்து, நேற்றைய எபிசோடில், குணசேகரன் வீட்டிற்கு வரும், வழக்கறிஞர், உங்க வீட்டு பெண்களே உங்களை கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்யும் போது, இந்த நேரத்தில் நாம் நிதானமாக இருக்க வேண்டும் என்கிறார். மேலும், வீட்டில் சிசிடிவி இருக்கா என்று கேட்க, சிசிடிவி இருக்கு ஆனால், வேலை செய்யாது என்கிறான் கரிகாலன் மேலும், வீட்டில் இருக்கும் அனைவரிடமும் போலீசார் விசாரிப்பார்கள், இதனால், நிதானமாக அனைவரும் பதில் சொல்லுகிறார் என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம், மருத்துவமனையில் கொன்றவை, இந்த வழக்கில் வேறு ஒரு அதிகாரியை இந்த வழக்கில் விசாரிக்க நியமிக்கிறார். அப்போது, கொன்றாவை, நாளைக்கு இந்த வழக்கு தொடர்பாக குணசேகன் வீட்டில் விசாரணை நடத்துவார்கள். இந்த பிரச்சனை பெரியதாகி விட்டதால், நிச்சயமாக அனைவரும் உங்கள் மீது கோவமாக இருப்பார்கள் இதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பார்கவி, நீதிமன்றத்தில் இந்த விஷயம் குறித்து தெளிவாக பேச வேண்டும். ஆனால், பார்கவி இப்போது இருக்கும் மனநிலையில் நீதிமன்றத்தில் எதையும் மாற்றி சொல்லிவிடக்கூடாது. அதை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

பார்கவி என்ன செய்வாள்: அப்போது, ஜனனி பார்கவியிடம் சென்று பேசுகிறார். அப்போது, பார்கவி, என் அப்பாவே போய்விட்டார். இதற்கு மேல் நான் யாருக்காக போராட வேண்டும். இனி மேல் எனக்கு எதுவும் தேவையில்லை, யாரும் தேவையில்லை என்று அழுகிறார். அப்போது, ஜீவனந்தம், இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் பார்கவி, இல்லை என்றால், இவர்கள் உன்னை நிம்மதியாகவே வாழவிடமாட்டார்கள் என்கிறார். இதைத் தொடர்ந்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

காலில் விழுந்த தர்ஷன்: இதையடுத்து இன்றைய எபிசோடு காண ப்ரமோ வெளியாகியுள்ளது, அந்த பிரமோவில் பார்கவியின் அப்பா இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திற்கு, தர்ஷன் எப்படியோ தப்பி வந்து எரிந்து கொண்டிருக்கும் உடலை பார்த்து கதறி அழுகிறான். இவருடைய இந்த நிலைமைக்கு நான் தான் காரணம், நான் பார்கவியை காதலி ஏமாற்றி விட்டேன். கடைசியில் அவருடைய அப்பாவின் சாவிற்கு நானே காரணமாகிவிட்டேன் என்று அழுகிறான். என்னால் ஏற்பட்ட தவறை நானே சரி செய்ய வேண்டும். நானே, பார்க்கவியை திருமணம் செய்து கொள்கிறேன். இது பார்கவியின் மேல் இருக்கும் அனுதாபத்தால் இல்லை. உண்மையிலேயே, நான் பாரதியை காதலிக்கிறேன். தயவுசெய்து பார்க்கவியை என்னை ஏற்றுக் ஏற்றுக்கொள்ள சொல்லுங்க அம்மா என கதறி அழுகிறான். அதன்பின் பார்கவியின் காலில் விழுந்து, பார்கவி நான் செய்தது அனைத்தும் தவறு தான் தயவு செய்து என்னை மன்னித்துவிடு என்ற அழுகிறான். ஆனால், பார்கவி அவனை தள்ளிவிட்டு எல்லாம் உன்னால் தான், உன்னால் தான் என் அப்பா இறந்தார் என்று அழுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X