ஜெயிலுக்கு போன அப்பாவி ஞானம்..குணசேகரனின் மாஸ்டர் பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், கொற்றவை, பார்கவி அப்பாவின் மரண வழக்கை விசாரிப்பதற்கு புது அதிகாரியை வரவைத்து. அவரிடம் அனைத்தையும் செய்துவிடுங்கள் என்று சொல்கிறார். இதையடுத்து புது அதிகாரி வந்து எப்.ஐ.ஆரையை கொடுக்க, பார்கவியின் அப்பாவிற்கு இறுதி சடங்கு செய்வதற்கான வேலைகள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து, நாளை கோர்ட்டில் ஆஜராக வேண்டும், அந்த நேரத்தில் பார்கவி மாற்றி பேசி விட்டால் அனைத்துமே வீணாகி விடும், தயவு செய்து அவளுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு என்கிறார். இதைத்தொடர்ந்து, ஜீவானந்தம் நான், பார்கவிக்கு எல்லாத்தையும் சொல்லி புரிய வைக்கிறேன் என்கிறார்

மறுபக்கம், போலீஸ் அதிகாரி, அறிவுக்கரசிக்கு போன் செய்து, நிலைமை கையை மீறி போய் விட்டது, எப்.ஐ. ஆர் போட்டாச்சு, நாளைக்கு நீதிமன்றத்தில் வழக்கு வரும், இனி மேல் எனக்கு போன் செய்யாதீர்கள் சொல்லி அறிவுக்கரசியிடம் சொல்லிவிட்டு போனை வைக்கிறார். இதை அறிவுக்கரசி, குணசேகரிடம் சொல்ல, கதிர் சிறைக்கு செல்வதை நினைத்து வருத்தப்படுகிறான். அப்போது, குணசேகரன், எதை பற்றியும் கவலைப்படாதே, நான் இருக்கேன் என்றார். மேலும், உன்னை அடிச்ச, அந்த ஜனனி, அந்த ஒட்டு மொத்த பொம்பளை கூட்டத்திற்கும் சரியான ஆப்பு இருக்கு என்கிறார். இதைத்தொடர்ந்து, குணசேகரன் வழக்கறிஞரை வரவைத்து விசாரிக்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்: மறுபக்கம், பார்கவி, அப்பாவின் உடலுக்கு தீ வைத்துவிட்டு கதறி அழுதுக்கொண்டு இருக்கிறாள். அப்போது, வீட்டில் இருந்து தப்பித்து வந்த தர்ஷன், அதைப்பார்த்து கதறி அழுகிறான். அய்யோ, எல்லாத்திற்கும் காரணம் நான் தான், பார்கவியை நான் தான், இந்த நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டேன். எல்லா தப்பையும் செய்தது நான் தான் என்று கதறி அழுதபடி, பார்கவியின் காலில் விழுந்த அழுகிறான். அப்போது, பார்கவி, தர்ஷனை பார்த்து என் முன்னாடி நிற்காத, எல்லாத்துக்கும் நீ தான் காரணம், தயவு செய்து போ என்று அழுகிறாள். அப்போது, தர்ஷன் ஈஸ்வரியிடம் வந்து, அம்மா நான் பெரிய தவறு செய்துவிட்டேன்மா, நான் செய்த தவறை நானே சரி செய்ய வேண்டும், நானே பார்கவியை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று அழுகிறான். இதைக்கேட்ட, ஈஸ்வரி, அதைப்பற்றி பேசுவதற்கான நேரம் இது இல்லை தர்ஷன். காலம் உங்களை ஒன்றாக சேர்க்க வேண்டும் என நினைத்தால் அது நிச்சயம் நடக்கும். நீ இப்போ இங்கு வந்தது சரியில்லை. தயவு செய்து வீட்டுக்கு போ என்று சொல்லி அனுப்புகிறாள்.

சிக்கிய ஞானம்: இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், குணசேகரன் வீட்டிற்கு வரும் போலீஸ் வழக்கு பற்றி சொல்லி குணசேகரன், கதிரை கைது செய்ய வருகின்றனர். அப்போது, குணசேகரன், ஞானத்தை அழைத்து, நான் அவரை அடித்தேன் என்று சொல்லி சரண்டர் ஆகிவிடு, அண்ணன் உன்னை வெளியில் கொண்டு வருகிறேன். அப்போது, நான் இங்கு இருக்க வேண்டியது அவசியம் என்கிறார். அதை கேட்ட ஞானம் வேறு வழியே இல்லாமல், சரண்டர் ஆக அவரை போலீசார் சிறைக்கு அழைத்து செல்கின்றனர். மறுபக்கம், அழுதுகொண்டே இருக்கும் பார்கவிக்கு, ஜீவானந்தம், இத்தனை நாள் அழுதது எல்லாம் போதும், இதுக்கு மேல நீ நன்றாக வாழ வேண்டும். பயந்து பயந்து இருந்தது எல்லாம், துணிந்து வந்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி தரவேண்டும் என்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்றுபார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X