மருமகளுக்கு ஆப்பு வைத்த குணசேகரன்.. கைதான ஞானம்.. கதறி அழுத ரேணுகா.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில், பார்கவியின் அப்பா இறந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதற்காக ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி என அனைவரும் நீதிமன்றத்தில் இருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் சாருலதா, பார்கவி, இப்பொழுது எப்படி இருக்கிறாள் என்று விசாரிக்கிறாள். அப்போது ஜனனி, அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை அப்பாவை இறந்த துயரத்தில் தான் இருக்கிறாள் என்று சொல்கிறாள்.

இதையடுத்து சாருலதா, ஜீவானந்தம் அவர்களுக்கு போன் செய்து, பார்கவி இப்போது எப்படி இருக்கிறாள் அவளுடைய வாக்கு மூலம் தான், இப்போது நமக்கு மிகவும் தேவை, நீதிமன்றத்தில் அவள் ஏதாவது வேறு விதமாக சொல்லிவிட்டால், இந்த கேஸ் நிக்காது என்று சொல்கிறாள். உடனே, ஜீவானந்தம் பார்கவிடம் நான் எடுத்து கூறி அழைத்து வருகிறேன் என்கிறார். தொடர்ந்து ஜீவானந்தம் பார்கவியிடம், இதற்கு மேல் நீ இழப்பதற்கு எதுவுமே இல்லை பார்கவி. எல்லாத்தையும் இந்த வயதிலேயே நீ இழந்துவிட்ட, இந்த நேரத்தில் தான் நீ, மன உறுதியோடு போராட வேண்டும், உன்னுடைய அப்பா அதை தான் விரும்புவார். மீண்டும் மீண்டும் நீ பயந்து பயந்து ஓடிக்கொண்டே இருந்தால் நிம்மதியாகவே வாழ முடியாது. பணமும் செல்வாக்கும் இருந்தால் எதை வேண்டுமானால் செய்யலாம் என நனைக்கும் குணசேகரனுக்கும் அவர்களுடைய தம்பிக்கும் இந்த தீர்ப்பு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என சொல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

சரண் அடைந்த ஞானம்: மறுபக்கம் குணசேகரனின் வீட்டுக்கு வரும் போலீசார், விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்கிறார். அப்போது, அங்கு வரும் வழக்கறிஞர், குணசேகரனிடம் சில விஷயங்களைப் பற்றி பேச வேண்டி இருக்கிறது நான் பேசிவிட்டு உங்களை அழைக்கிறேன் என்கிறார். அதன் பின், வழக்கறிஞர் இந்த வழக்கு மிகவும் சிக்கலான வழக்காக மாறிவிட்டது. இதனால், இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கைது ஆவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. அதற்காக யாராவது ஒருவர் சரண் அடைந்தால், இந்த வழக்கிலிருந்து அனைவரும் தப்பிக்கலாம் என்று சொல்கிறாள். இதை கேட்ட குணசேகரன், ஞானத்தை சரணடையும்படி சொல்கிறார். அண்ணாவின் பேச்சை மறுக்க முடியாத ஞானம், குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண் அடைகிறார்.

சிறைக்கு சென்ற ஞானம்: இன்றைய எபிசோடில் ஞானம், குணசேகரன், கதிர் என அனைவரும் நீதிமன்றத்திற்கு வருகின்றனர். வழக்கு விசாரணை ஆஜராகும் போது ஞானம் தானாகவே முன் வந்து பார்கவியின் அப்பா மீது இருந்த கோபத்தில் நான்தான் அவர்கரை தாக்கினேன். இதில் பார்கவியின் அப்பா உயிரிழந்து விட்டார். அவருடைய இறப்புக்கு நான் தான் காரணம் என்று சொல்ல நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். ஞானத்தை கைது போலீசார் செய்து அழைத்து செல்ல, ரேணுகா ஞானத்தை பார்த்து கதறி அழுது, செய்யாத தவறுக்காக ஏன் நீங்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என்று கேட்க எதுவுமே சொல்ல முடியாமல் ஞானமும் அழுது கொண்டு சிறைக்கு செல்கிறார். வீட்டிற்கு வரும் குணசேகரிடம், விசாலாட்சி ஞானம் எங்கே என்று கேட்டு விசாரிக்கிறாள். அந்த நேரம் பார்த்து, ஜனனி, ஈஸ்வரி , நந்தினி, ரேணுகா அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X