குணசேகரன் முகத்தில் கரியை பூசிய பெண்கள்.. அடுத்து நடக்கப்போவது என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: குணசேகரனின் வீட்டுக்கு வரும் போலீசார், விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்கிறார். அப்போது, அங்கு வரும் வழக்கறிஞர், குணசேகரனிடம் சில விஷயங்களைப் பற்றி பேச வேண்டி இருக்கிறது நான் பேசிவிட்டு உங்களை அழைக்கிறேன் என்கிறார். அதன் பின், வழக்கறிஞர் இந்த வழக்கு மிகவும் சிக்கலான வழக்காக மாறிவிட்டது. இதனால், இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கைது ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்காக யாராவது ஒருவர் சரண் அடைந்தால், இந்த வழக்கிலிருந்து அனைவரும் தப்பிக்கலாம் என்று சொல்கிறாள். இதை கேட்ட குணசேகரன், ஞானத்தை சரணடையும்படி சொல்கிறார். அண்ணாவின் பேச்சை மறுக்க முடியாத ஞானம், குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண் அடைகிறார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதற்காக அனைவரும் கிளம்பி வருகின்றனர். அப்போது விசாலாட்சி, எதற்கு வீட்டிற்கு போலீஸ் வந்து இருக்கு, பிரச்சனை செய்துவிட்டார்களா என அழுகிறாள். அப்போது, பிரச்சனை எதுவும் இல்லை அம்மா, நீதிமன்றத்திற்கு சென்று விட்டு வருகிறோம். நாங்கள் திரும்பி வருவோம் என்று நம்பிக்கை இருந்தால், எங்களுக்காக சமைத்து வையுங்கள். அப்படி இல்லை என்றால் விஷத்தை எடுத்து வையுங்கள் அதை சாப்பிட்டுவிட்டு நாங்கள் அனைவரும் இறந்து விடுகிறோம் என்று சொல்கிறார் குணசேகரன். இதை கேட்டு பதறிப்போன விசாலாட்சி, எதுவும் நடக்காது நல்லபடியாக போய்ட்டு வாங்க என்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: நீதிமன்றத்தில் வாதத்தை தொடங்கிய சாருலதா, தர்ஷனும் பார்கவியும் காதலித்தார்கள்.பிரச்சனை ஆன பின் பார்கவி தர்ஷனை பார்க்கவே இல்லை. அப்படி இருக்கும் போது, பார்கவியையும், அவளது அப்பாவையும் நயவஞ்சகமாக வீட்டிற்கு அழைத்து அவர்களை அடித்தே கொலை செய்து இருக்கிறார்கள். இனி எந்த பிரச்சனையும் செய்ய மாட்டேன் என்று தான் குணசேகரன் அவர்களை வீட்டுக்கு அழைத்து இருக்கிறார். ஆனால், வீட்டுக்கு வந்ததும் தம்பிகளை ஏவி விட்டு அராஜகம் செய்து அவர்களை அடித்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாத அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய இறப்புக்கு குணசேகரன், கதிர், அறிவுகரசி தான் காரணம் என்கிறார். இவ்வாறு நீதிமன்றத்தில் தொடர்ந்து விவாதம் நடந்து கொண்டு இருக்க ஜீவானந்தமும், பார்கவியும் பைக்கில் வருவதை தெரிந்து கொண்ட, அறிவுக்கரசி ஏற்பாடு செய்த அடியாட்கள், அவர்களை வழிமறித்து பார்கவியை கடந்த திட்டம்போடுகின்றனர். இதிலிருந்து தப்பித்து ஜீவானந்தம் பார்கவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார். நீதிமன்றத்தில் பார்கவி அனைத்து உண்மைகளையும் சொல்கிறார். இந்த நேரத்தில் ஞானம் தான் பார்கவியின் அப்பாவை கொன்றேன் என்று சொல்ல, நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார்.
அவமானத்தில் குணசேகரன்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், குணசேகரன், கதிர் அனைவரும் வீட்டுக்கு வருகின்றனர். அப்போது ஞானம் வராததை பார்த்து பதறி அழுகிறார் விசாலாட்சி, ஞானம் எங்கே என்று கேட்க அவன் சிறையில் இருப்பதாக சொல்கிறார் குணசேகரன். இதற்கு எல்லாம் காரணமான இவளுங்க இனிமேல், இந்த வீட்டுக்குள்ளேயே வரக்கூடாது என்கிறார். அந்த நேரம் பார்த்து நான்கு மருமகள்களும் மீண்டும் வீட்டுக்குள்ளே போலீஸ் பாதுகாப்புடன் வருகின்றனர். இனிமேல், நாங்கள் இந்த வீட்டில் தான் இருப்போம் என்று சொல்ல, கதிர் அவர்களை அடிக்க பாய்கிறான். இதையடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்


Click it and Unblock the Notifications











