மவனே யாருக்கிட்ட மாஸாக என்ட்ரி கொடுத்த ஜனனி.. ரேணுகா செய்யப்போவது என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நேற்றைய எபிசோடில் ரவுடிகள் ஜீவானந்தம், பார்கவியை துரத்திக் கொண்டு வர, ஜீவானந்தம் பைக்கை விட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல், வேறு வழியாக ஓடி நீதிமன்றத்திற்கு வருகின்றனர். அப்போது, சாட்சி கூட்டில் ஏறிய பார்கவி, அனைவரையும் பார்த்து பயந்து விடுகிறாள். இதைப்பார்த்த குணசேகரன் வழக்கறிஞர், பார்கவியின் மனநிலை சரியில்லை என்று சொல்கிறார். அப்போது, பார்கவி, என் அப்பாவே போன பிறகு, யாருக்கு என்ன தண்டனை வாங்கி தருவது என்று யோசித்தேன். ஆனால், குணசேகரன் , அறிவுக்கரசி போன்றவர்களுக்கு சரியான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று தான், இந்த வழக்கை தொடர்ந்தேன் என்கிறார்.
பின் என்னையும் அப்பாவையும் வீட்டிற்கு வரவைத்து, கதிர், குணசேகரன், அறிவுக்கரசி ஆகியோர் தான் காரணம் என்று சொல்கிறார். நிலைமை கை மீறி போனதால், குணசேகரனின் வழக்கறிஞர் ஞானத்திற்கு கண்ணை காட்ட, ஞானம் சாட்சி கூண்டில் ஏறி, நான் தான் பார்கவியின் அப்பாவை தாக்கினேன். ஆனால், வேண்டும் என்று செய்யவில்லை என்கிறார். இதையடுத்து, நீதிபதி ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கிறார். இதைக்கேட்டு, அதிர்ச்சி அடைந்த ரேணுகா, அவர் பொய் சொல்கிறார் என்று நீதிமன்றத்திலேயே கத்தி அழுகிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: நீதிமன்றத்திற்கு வெளியே வரும் ரேணுகா, அண்ணனை காப்பாற்றுவதற்காக எது வேண்டுமானாலும் செய்வீர்களா.. குடும்பத்தை பற்றி நினைக்க மாட்டீர்களா.. என இது புலம்புகிறாள். நாங்க, உங்க அண்ணன் மேல வழக்கு கொடுத்து இருக்கோம் அதனால, என்ன அவரு என்ன வேணும்னாலும் செய்வார், எனக்கு எதாவது ஆச்சுனா நம்ப புள்ளை என்னவாகும்னு, என்னை பத்தியும், என் மகளைப் பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் இப்படி செய்யலாமா... என ஆத்திரப்பட்டு ஞானத்தை அடிக்கிற பாய்கிறாள் ரேணுகா. அப்போது, கரிகாலன் குறுக்க வர, அவனையும் அடிக்கிறாள் ரேணுவா. பின் அனைவரும் சேர்ந்து ரேணுகாவை சமாதானப்படுத்துகின்றனர். அப்போது, வழக்கிறஞர் சாருலதா, குணசேரன் சொல்லித்தான் கதிர் பார்கவியை தாக்கினார் என்பதற்கான ஆதரம் வேண்டும், இல்லை என்றால் இந்த கேஸ் நிக்காது என்று சொல்கிறார்.
ரேணுகா போட்ட திட்டம்: இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து குணசேகரன், கதிர் அனைவரும் வீட்டுக்கு வருகின்றனர். அப்போது ஞானம் வராததை பார்த்து பதறி அழுகிறார் விசாலாட்சி, ஞானம் எங்கே என்று கேட்க அவன் சிறையில் இருப்பதாக சொல்கிறார் குணசேகரன். இதற்கு எல்லாம் காரணமான இவளுங்க தான் இனிமேல், இந்த வீட்டுக்குள்ளேயே வரக்கூடாது என்கிறார். குணசேகரனின் சூழ்ச்சியால் ஞானம் சிறையில் இருக்கும் நிலையில் 4 பெண்களும் அதே வீட்டிற்கு மீண்டும் வருகின்றனர். இந்த வீட்டில் இருந்தால் தான், குணசேகரன் சொல்லித்தான் கதிர் பார்கவியின் அப்பாவை அடித்தார் என்பதற்கான ஆதாரத்தை திரட்ட முடியும் என அனைவரும் வீட்டிற்குள் வருகின்றனர். அப்போது, விசாலாட்சி இவர்கள் வீட்டுக்குள் வரக்கூடாது வந்தால் வெட்டி விடுவேன் என்று கூச்சல் போடுகிறாள். ஆனால் உடன் வந்திருக்கும் காவலாளிகள் இவர்கள் இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் அதுதான் நீதிமன்ற உத்தரவு என்று சொல்கின்றனர். பின் ரேணுகா என் கணவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும், அவருக்கு என் மேல கோவம் இருக்கலாம், ஆனால், அவர் மகள் மேல அவருக்கு உயிர், இனி மேல் என் மகளை வைத்துத்தான் ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்றுபார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











