ஜனனியை பழிவாங்க துடிக்கும் குணசேகரன்.. அடுத்த ஆட்டம் தர்ஷனின் கல்யாணம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் கோர்ட் ஆர்டருடன் பெண்கள் அனைவரும் வீட்டுக்கு வருகின்றனர். அவர்கள் உள்ளே வரக்கூடாது என கதிர் பிரச்சனை செய்கிறான். அதே போல, குணசேகரம் உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்டு பிரச்சனை செய்கிறா. அப்போது, கோர்ட் ஆடர் வந்துள்ளது. அவர்கள் வெளியில் இருந்தால் இவர்களின் உயிருக்கு ஆபத்து என்பதனால் இதே வீட்டிலேயே இருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு போட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர்களில் யாருக்கு எந்த ஆபத்து நடந்தாலும், அதற்கு காரணம் நீங்களும் கதிரும் தான் பொறுப்பு நீங்கள் தான் ஜெயிலுக்கு போக வேண்டும் என வழக்கறிஞர் சொல்ல, கதிர். குணசேகரன் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதைத்தொடர்ந்து குணசேகரன் எதுவுமே பேசாமல் உள்ளே சென்று விட அப்போது விசாலாட்சி என்னடி பண்ணி வச்சு இருக்கீங்க, நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க, என்னுடைய மகன் ஞானம் ஒண்ணுமே தெரியாத அப்பாவி அவனை போய் ஜெயில்ல புடிச்சு போட்டு இருக்கீங்க. இப்போ, இங்க வந்து நியாயம் பேசுறீங்களா... என்னுடைய வயிறு எரிஞ்சு சொல்றேன், நீங்களே நல்லாவே இருக்கவே மாட்டீங்க, விளங்கவே மாட்டீங்க. ஏன் டி.... ரேணுகா, நீயெல்லாம் ஒரு பொண்டாட்டியா புருஷனா காட்டி கொடுத்து, அவனை ஜெயில்ல வச்சுட்டு இங்க ஒய்யாரமா வந்து நின்னுட்டு இருக்க நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட என்று சாபம் கொடுக்கிறாள். அதன் பின், ஜனனி, ஈஸ்வரி அனைவரும் ரேணுகாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வருகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடு காண ப்ரமோ வெளியாகியுள்ளது, அதில், பார்கவி ஜீவானந்தத்திடம் என்னுடைய அப்பா, நான் எப்படி இருக்க வேண்டும் என ஆசைப்பட்டாரோ, அதேபோல நான் இருக்கிறேன். ஆனால், எங்க அப்பா உயிர் போனதற்கு காரணமானவர்கள் இருக்கும் வீட்டில் நான் இருக்கவே மாட்டேன். நான் உங்களுடன் வருகிறேன் ஜீவானந்தம் சார் என்னை உங்களுடன் அழைத்து செல்லுங்கள் என கதறி அழுகிறாள். அப்போது ஜனனி, பார்கவி நீ இந்த வீட்டில் இருப்பது தான், உனக்கு பாதுகாப்பு, உனக்கு இந்த நேரத்தில் யாருமே இல்லை, உன்னோடு இந்த நிலைமைக்கு காரணம் நாங்க தான், நாங்கள் உன்னை விட்டு விட மாட்டோம். நீ எங்களுடன் இரு உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் எதுவாக இருந்தாலும் நாங்கள் இருக்கிறோம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறாள்.

கண்ணீரில் பார்கவி: இதே தொடர்ந்து நந்தினி உன்னுடைய அப்பாவின் மரணத்திற்கு காரணம் என்னுடைய கணவர் தான். அந்த குற்ற உணர்ச்சியால், நான் செத்துக்கொண்டே இருக்கிறேன். நான் உன்னை என் மகள் போல பார்த்துக் கொள்கிறேன். இதை நான் அனுதாபத்தில் சொல்கிறேனோ, இல்லை பாசத்தில் சொல்கிறேனா.. இல்லை கடமையில் செய்கிறேனோ என்றெல்லாம் இல்லை. எனக்கு நீயும் மகள் போல தான். நான் உன்னை நிச்சயமாக பார்த்துக் கொள்வேன் என்று நந்தினியும் கதறி அழுகிறாள். இவர்களின் பேச்சை மறுக்க முடியாத பார்கவி அதே வீட்டில் இருக்க சம்மதிக்கிறாள்.

குணசேகரின் திட்டம்: மறுபக்கம் கதிர் மற்றும் குணசேகரன் இருவரும் பேசிக் கொண்டு இருக்கின்றனர் அப்போது ஞானத்தை இப்படி சிறையில் வைத்து விட்டோமே என கதிர் ஆதங்கப்படுகிறான். இதை எல்லாம் செய்வதற்கு காரணம், என்னுடைய மகன் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஞானத்தை நான் பகடை காயாக பயன்படுத்தியிருக்கிறேன். இவர்களின் ஆட்டத்திற்கும் நான் நிச்சயம் முடிவு கட்டுவேன் என்னுடைய மகன் தர்ஷன் திருமணம் நிச்சயம் நடக்கும் என்று சொல்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X