ஓங்கி அறைந்த ஈஸ்வரி.. அறிவுக்கரசியின் சமஸ்தானமே ஆடிப்போச்சு.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நேற்றைய எபிசோடு, அட்டகாசமாகவே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். அதாவது, அறிவுக்கரசி குணசேகரன் வீட்டில் இனிமே எல்லாமே நான் தான், யாரும் சமையல் அறைக்குள்ள வரக்கூடாது சொல்லுகிறாள். பின், தங்கை அன்புக்கரசி அறையில் சமைத்துக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து நந்தினி சமையல் அறைக்கு வருகிறாள். உடனே, அறிவுக்கரசி உன்னை யார் இங்கே வரச் சொன்னது வெளியில் போ என்று நந்தினியிடம் வாய் தகராறு செய்கிறாள்.
அப்போது நந்தினி, இது என்னுடைய வீடு இந்த வீட்ல நான் எங்க வேணாலும் போவேன் வருவேன், குதிப்பேன், அதைக் கேட்பதற்கு நீ யார் என்று கேட்கிறாள். இந்த கதை எல்லாம் நேத்தோட முடிஞ்சு போச்சு. இனிமே, இது என் வீடு யாரும் சமையலறைக்குள் வரக்கூடாது. நீங்க எல்லாரும் மேலே தான் இருக்கணும் என்று அன்புக்கரசி திமிராக பேசுகிறாள். அந்த நேரம் பார்த்து ஜனனி கீழே வந்து என்ன பிரச்சனை என்று கேட்க, அன்புக்கரசி மீண்டும் திமிராக பேசுகிறாள். இதனால், கடுப்பான ஜனனி. உங்ககிட்ட தனியான ஒரு விஷயத்தை பற்றி பேச வேண்டும், மேல வாரீங்களா என்று கேட்கிறாள். என்னடி நேத்து வானத்திற்கும் பூமிக்கும் குதிச்ச, இப்போ பம்பி பேசுற, என்ன பார்த்து இப்போத்தான் பயம் வந்து இருக்கா என்று கேட்கிறாள். உடனே ஜனனி நீங்க மேல வாங்க எல்லாத்தையும் தெளிவா சொல்லி நான் புரிய வைக்கிறேன் என்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அந்த நேரம் பார்த்து குணசேகரன், கதிரும் வீட்டுக்கு வருகின்றனர். அப்போது, ஜனனி பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு, என்ன ஜனனி மீண்டும் பிரச்சனையை ஆரம்பிச்சிட்டீயா.. என்று கேட்கிறார். உடனே, அன்புக்கரசி, இல்ல மாமா ஏதோ பேச வேண்டுமாம், நான் பேசிவிட்டு வருகிறேன் என்று அறிவுக்கரசி மேலே போகிறாள். மேலே சென்றதும், அனைவரும் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிவிட்டு, அறிவுக்கரசியின் வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டு அடிக்கின்றனர். அப்போது, நந்தினி, என்னது கதிர் மாமாவா, எவன்டி உனக்கு மாமா, இனி மேல் மாமா... கீமானு வந்தே அவ்வளவு தான் என்று கன்னத்திலேயே பளார்.... பளார் என்று அடிக்கிறாள்.
கோவத்தில் அன்புக்கரசி: அடுத்து ரேணுகா வந்து, எல்லாரும் சேர்ந்து அவரை கொன்றுவிட்டு, கடைசியில என் புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டீங்களே என அடிக்கிறாள். கடைசியாக ஜனனி, யார் வீட்டில் இருந்து கொண்டு, யாரை சீண்டி பாக்குற, எங்களுக்கும் அடிப்பது, குத்துவது எல்லாம் தெரியும், ஒழுங்காக இருந்துக்கோ என்று வெளியே அனுப்ப, கதவின் அருகே இருந்த ஈஸ்வரி, ஓங்கி ஒரு அறைவிட்டு, இதுதான் நாங்க உனக்கு கொடுக்கும் கடைசி வார்னிங் இதுக்கு மேல, இந்த வீட்டில் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்கிறாள். அடிவாங்கிக்கொண்டு கீழே வந்த அறிவுக்கரசியைப் பார்த்த குணசேகரன், நாலு பேரும் சேர்ந்து அடித்தார்களா என்று சொல்ல, கதிர் இதற்குத்தான் நான் போக வேண்டாம் என்று சொன்னேன் என்று சொல்லி வருத்தப்படுகிறான். இதனால், கோவத்தின் உச்சத்தில் இருக்கும் அறிவுக்கரசி அனைவர் மீதும் கோவத்தின் உச்சத்தில் இருக்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.,


Click it and Unblock the Notifications











