ஜனனி, சக்தி காதல்.. ஞானம் வெளியே வரக்கூடாது அறிவுக்கரசி போடும் பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: திமிராக பேசிய அறிவுக்கரசியை நைசாக மேலே அழைத்து வந்து நான்கு பெண்களும் சரமாரியாக அடித்து அவளுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுக்கின்றனர். இதையடுத்து அறிவுக்கரசி, கீழே வந்து எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறாள். அப்போது குணசேகரன், என்ன ஆச்சு, நாலு பேரும் சேர்ந்து உன்னை அடித்தார்களா.. என்று கேட்க கண்ணீர் விட்டு கதறி அழுகும் அறிவுக்கரசி, இந்த கல்யாணம் எப்படி நடக்கிறது என்று பார்க்கிறேன் என சவால் விடுகிறார்கள், அவர்கள் நினைத்தது நடக்கக்கூடாது மாமா, இந்த கல்யாணத்தை நல்லபடியாக செய்து முடிக்க வேண்டும் என்று சொல்கிறாள்.

பின் ஜனனி மற்றும் ரேணுகா இருவரும் வழக்கறிஞர் சாருலதாவை சந்தித்து பேசுகின்றனர். அப்போது, சாரு லதா, அவர்கள் ஞானத்தை வெளியில் எடுப்பதற்காக எந்த முயற்சியும் செய்யவே இல்லை. இதில், வேறு ஏதோ திட்டம் இருக்கிறது என்று சொல்கிறார். இதைக்கேட்டு ரேணுகா அதிர்ச்சி அடைகிறாள். அப்போது, சாருலதா ரேணுகாவை சமாதானப்படுத்தி நாமே ஒரு வழக்கறிஞரை ஞானம் அவர்களுக்கு ஏற்பாடு செய்து நியமித்து , அவரை ஜாமீனில் எடுக்க வைக்கலாம். ஆனால், இதற்கு ஞானம் சம்மதிக்க வேண்டும், அவர் சம்மதிக்க வில்லை என்றால், அவர் வெளியில் வருவது கஷ்டம் என்று சொல்ல ரேணுகா, அவர் நிச்சயமாக சம்மதிப்பார் அவரை நான் சம்மதிக்க வைக்கிறேன் என்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: அந்த நேரம் சக்தி, ஜனனிக்கு போன் செய்து உன்னை உடனடியாக பார்க்க வேண்டும் என்று சொல்ல, ஜனனி, சக்தியை பார்த்து, நான் உனக்கு மேட்ச் இல்லாதவள். நியாயம், நீதி என்று பார்த்துக்கொண்டு இருக்கிறேன். என்னை போல நீயும் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை தயவு செய்து என்னை மன்னித்து விடு என்கிறாள். அப்போது சக்தி, ஊரில் இருக்கும் அனைவரின் மனசும் உனக்கு புரியும். ஆனால், புருஷன் மனநிலை உனக்கு புரியவில்லையா, அண்ணன் செய்தது அனைத்தும் தவறுதான் அது எனக்கு நன்றாகவே புரிகிறது. வீட்டில் நான் பேசாமல் இருப்பதற்கு காரணம் ஒன்னே ஒன்று தான், நான் உங்களுடன் இருந்தால் மேலும் உங்களுக்கு தான் பிரச்சனை. அதனால் தான், நான் அப்படி நடந்து கொண்டேன். பார்கவி அப்பா இறந்தது எனக்கும் மிகப்பெரிய அளவில் வருத்தத்தை கொடுத்தது. நீ செய்யும் விஷயம் எனக்கு சரி என்று தான் பட்டது. ஆனால், அந்த விஷயத்தை வீட்டில் இருப்பர்களிடம் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

காதலிக்கிறேன் ஜனனி: என் கண்ணு முன்னாடியே வேற யாரையாவது வச்சு உங்களுக்கு பிரச்சனை கொடுப்பார்கள் இதனால் தான் நான் யாரிடமும் சொல்லாமல் வெளியில் கிளம்பி சென்று விட்டேன். ஆனால், நீ என்னை ஒதுக்குற, நான் உன்னை மனதார காதலிக்கிறேன் ஜனனி. ஆனால், அது உனக்கு புரியவே இல்லை, நான் மட்டும் உன் பக்கம் இருந்தால் தொடர்ந்து உங்களுக்குத் தான் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். ஆனால், என்னைக்கும் நான் உன் பக்கம் தான் இருப்பேன் என்று சக்தி கண்ணீர் விட்டு பேசுகிறான். இதை அனைத்தையும் கேட்ட ஜனனி, சக்தியை கட்டிப்பிடித்து அழகிறாள். இதையடுத்து, என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X