தர்ஷன் கல்யாணத்தில் உயிர் பலி.. குடும்பமே சிதையும்.. ஜோசியர் சொன்ன வாக்கு.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்று ஜனனி, கதிரை சந்தித்து, என்னால் உனக்கு பிரச்சனை வரும் என்பதற்காகத்தான், நான் வீட்டில் இதுபற்றி எதுவும், நான் என்னைக்கும் உன் பக்கம் தான் நிற்பேன் ஜனனி, ஏன் என்றால் நான் உன்னை அவ்வளவு காதலிக்கிறேன் என்கிறான். இதைத்தொடர்ந்து ஜனனி சமாதானம் ஆகிறாள். பின் இருவரும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது, விசாலாட்சியின் தன்னுடைய் தம்பியை அழைத்து தர்ஷன் திருமணம் பற்றி குறி கேட்கிறார்.

அப்போது சாமியார், இதற்கு முன் நான், ஆதிரையின் திருமணம் எப்படி நடக்கும் என்று சொன்னேனோ அதைவிட மோசமானதாக தான் இந்த திருமணம் நடக்கும். இந்த திருமணத்தால் மிகப் பெரிய பிரளயமே இந்த வீட்டில் ஏற்படும். நிச்சயமாக பெரிய உயிர் பலி ஒன்று நடந்தே தீரும். இன்று ஒன்றாக இருக்கும் இந்த குடும்பமும் இரண்டாக சிதைந்து ஒரு குடும்பம் வாழும், மற்றொரு குடும்பம் தாழ்ந்து போகும். இதுதான் என்னுடைய வாக்கு, இனி மேல் சொல்வதற்கு எதுவுமே இல்லை என்று விறுவிறுப்பாக வெளியில் சென்றுவிடுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த விசாலாட்சி, இந்த திருமணம் திருமணத்தை நிறுத்துக்கள், என் மனதிற்கு எதுவும் சரியாக படவில்லை என்று சொல்கிறார். அப்போது, குணசேகரன் திருமணம் நடந்தே தீரும் என்று அவரே சொல்லி இருக்கிறாரே. அதன்படி இந்த திருமணத்தை நாம் நடத்தி விடுவோம் என்று சொல்லிவிட்டு திருமணத்திற்கான ஏற்பாடுகளை பார்க்கலாம் வாங்க என்று கதிரையும், அறிவுக்கரசியை அழைத்து செல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

தர்ஷன் பார்கவி திருமணம்: ஜோசியர் சொன்னதை எல்லாம் கேட்டு பயத்தில் இருக்கும் ஈஸ்வரி, என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்கிறாள். அப்போது ஜனனி, சக்தி, ரேணுகா, நந்தினி என அனைவரும் வருகின்றனர். உடனே, ஈஸ்வரி ஜோசியர் சொன்னது போல இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும். ஆனால், தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் இல்லை... தர்ஷனுக்கும் பார்கவிக்கும் என்று சொல்ல அனைவருமே அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது, நந்தினி எப்படி இந்த திருமணம் நடக்கும் என்று கேட்க. இதுதான் எனக்கு சரியானதாக தெரிகிறது நந்தினி, ஏனென்றால் அவர்கள் தர்ஷனை நிச்சயமாக விடமாட்டார். அவனுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று, அவனை கட்டாயப்படுத்துவார்கள். இதனால் பார்கவிக்கும் தர்ஷனுக்கும் இப்போது திருமணம் நடத்தி வைப்பது தான் சரியாக இருக்கும் என்று சொல்கிறாள். இதை கேட்ட ஜனனியும் எனக்கும் அதுதான் சரியான முடிவாக படுகிறது. ஆனால், பார்கவின் முடிவு என்னவென்று தெரியவில்லை என்று சொல்ல அப்போது ஈஸ்வரி இதைப் பற்றி பேசுவதற்காக நான் ஜீவானந்தத்தை வர சொல்லி இருக்கிறேன் என்று சொல்ல அனைவரும் கிளம்பி ஜீவானந்தத்தை சந்திக்க செல்கின்றனர்.

பார்கவியின் முடிவு: இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது, அந்த ப்ரோமோவில் ஜீவானந்தத்திடம் பேசும் ஈஸ்வரி, தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் செய்து வைப்பது தான் சரியாக இருக்கும் என்கிறாள். இதைக்கேட்டு ஜீவானந்தம், என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறார். இது பற்றி நீங்கள் தான் பார்கவியிடம் பேச வேண்டும் என்று சொல்ல, ஜீவானந்தம் பார்கவியிடம் இதைப்பற்றி பேசுகிறார். இதை கேட்டு ஆத்திரப்படும், பார்கவி எனக்கு கல்யாணமும் வேண்டாம், குடும்பமும் வேண்டாம், எதுவும் வேண்டாம் எங்க அப்பாவை கொலை செய்தவர்கள் வீட்டில் நான் எப்படி வாழ்வேன் என சொல்லி கதறி அழுகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X