ஜனனி பிணத்தின் மேல தர்ஷனின் கல்யாணம் நடக்கும்.. விஷமாக மாறிய குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: ஜீவானந்தத்திடம் பேசும் ஈஸ்வரி, தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் செய்து வைப்பது தான் சரியாக இருக்கும் என்கிறாள். இதைக்கேட்டு ஜீவானந்தம், என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறார். இது பற்றி நீங்கள் தான் பார்கவியிடம் பேச வேண்டும் என்று சொல்ல, ஜீவானந்தம் பார்கவியிடம் இதைப்பற்றி பேசுகிறார். இதை கேட்டு ஆத்திரப்படும், பார்கவி எனக்கு கல்யாணமும் வேண்டாம், குடும்பமும் வேண்டாம், எதுவும் வேண்டாம் எங்க அப்பாவை கொலை செய்தவர்கள் வீட்டில் நான் எப்படி வாழ்வேன் என சொல்லி கதறி அழுகிறாள்.

அதன் பின், ஜீவானந்தம் பார்கவி தனியாக அழைத்துச் சென்று பேசுகிறார். அவர் சொல்வதை கேட்ட பின், பார்கவி மனம் மாறி தர்ஷனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்கிறாள். பார்கவி நல்ல முடிவை கேட்டு, ஈஸ்வரியை மகிழ்ச்சியடைந்து உன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதால் நான் இந்த முடிவு எடுக்கவில்லை. நான் இருவருக்கும் ஒரு அம்மா என்பதால் இந்த முடிவை எடுத்தேன் என்கிறாள். பின், ஜீவானந்தம், தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் 25ஆம் தேதி திருமணத்தை நடத்த குணசேகரன் முடிவு செய்திருக்கிறார். அதே தேதியில் தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் நடக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை பாருங்கள் இந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரியாமல் கவனித்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

மூவருக்கு சமாதி கட்டவேண்டும்: மறுபக்கம் குணசேகரன், அறிவுக்கரசி, கதிர் என அனைவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது குணசேகரன், கதிர் நீ உன்னுடைய மனைவி நந்தினியின் மேல எவ்வளவு கோபத்தில் இருக்கிறாய் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அதைவிட எனக்கு கோபம் நாலு பொம்பளைங்க மேலயும் அதிகமாகவே இருக்கிறது. ஒரு புறம் திருமண வேலைகள் நடக்க வேண்டும். அதே சமயம், ஜீவானந்தம், பார்கவி, ஜனனி என மூவருக்கும் ஒரே நேரத்தில் முடிவு கட்ட வேண்டும். தர்ஷன் கல்யாணத்துடன் சேர்த்து சக்திக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறார். ஏனென்றால், ஜோசியர் சொன்னது போல இந்த வீட்டில் ஒரு உயிர் பலி நடக்கும், அது ஜனனி தான். அவளின் கதையை முடித்துவிட்டு, சக்திக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும். இது அனைத்தையும் செய்வதற்கு அன்புக்கரசி உனக்கு துணையாக இருப்பாள் என்கிறார்.

ஈஸ்வரி போட்ட பிளான்: இன்றைய எபிசோடு காண ப்ரமோ வெளியாகி இருக்கிறது, அதில், ஈஸ்வரி தர்ஷனை தனியாக அழைத்து தர்ஷா, நீ விருப்பப்பட்ட படியே பார்க்கவை திருமணம் செய்து கொள். அதுதான் சரியாக இருக்கும். ஆனால், நான் சொன்னதுபடி உன்னுடைய அப்பாவிடம் சில விஷயங்களை நீ பேசு என்று சொல்கிறாள். ஈஸ்வரி, சொன்னது படியே மறுநாள் காலை தர்ஷன் தன்னுடைய அப்பா குணசேகரிடம் நான் செய்தது எல்லாம் தப்பு தான், கல்யாணம் பிடிக்காமல் வீட்டை விட்டு நான் வெளியே செல்லவில்லை. வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். அதற்காகத்தான் இந்த வீட்டை விட்டு வெளியே சென்றேன். எனக்கு அன்புக்கரசியை திருமணம் செய்து கொள்ள மனப்பூர்வமாக சம்மதம் என்று சொல்கிறான். இதை அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X