தர்ஷன் செய்த தவறு.. மீண்டும் வெடித்த பூகம்பம்.. கல்யாணம் நடக்குமா? எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: ஈஸ்வரி தர்ஷனை தனியாக அழைத்து தர்ஷா, நீ விருப்பப்பட்ட படியே பார்க்கவை திருமணம் செய்து கொள். அதுதான் சரியாக இருக்கும். ஆனால், நான் சொன்னதுபடி உன்னுடைய அப்பாவிடம் சில விஷயங்களை நீ பேசு என்று சொல்கிறாள். ஈஸ்வரி, சொன்னது படியே மறுநாள் காலை தர்ஷன் தன்னுடைய அப்பா குணசேகரிடம் நான் செய்தது எல்லாம் தப்பு தான், கல்யாணம் பிடிக்காமல் வீட்டை விட்டு நான் வெளியே செல்லவில்லை. வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். அதற்காகத்தான் இந்த வீட்டை விட்டு வெளியே சென்றேன். எனக்கு அன்புக்கரசியை திருமணம் செய்து கொள்ள மனப்பூர்வமாக சம்மதம் என்கிறான்.

எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், ரேணுகா, ஜனனி இருவருமே நீதிமன்றத்திற்கு செல்கின்றனர். குணசேகரன் நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பதால் அவரை பார்ப்பதற்காக இருவரும் செல்கின்றனர். அப்போது, அங்கு வரும் குணசேகரன் தரப்பு வழக்கறிஞர், இவர்களை பார்த்து, இவர்கள் தான் ஞானசேகருக்கு எதிராக வழக்கு போட்டவர்கள், உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்கிறார்கள். வழக்கறிஞர் இப்படி கேட்டதும் கடுப்பான ரேணுகா, நீங்க என் புருஷனை வெளியில் கொண்டு வரப்போறீங்களா... உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா.. நீ எல்லாம் என்ன மனுசன் என சண்டை போடுகிறாள். அப்போது, வழக்கறிஞர் ஞானத்தை பேச விடாமல் தடுக்க, ரேணுகாவால் ஞானத்திடம் பேச முடியாமல் போகிறது.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் வீட்டில், ஈஸ்வரி, தர்ஷின் கல்லூரி விஷயமாக வெளியில் செல்கின்றனர். குணசேகரன், விசாலாட்சி இருவரும் கோவில் நிகழ்ச்சி ஒன்றுக்காக வீட்டில் இருந்து கிளம்பி சென்று விடுகின்றனர். வீட்டில் யாருமே இல்லாததால் கரிகாலனை தர்ஷனை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். அப்போது கரிகாலன் இவனை பார்த்துக்கொள்வது எல்லாம் எனக்கு ஒரு வேலையா என சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிடுகிறான்.

அன்புவை ஏமாற்றிய தர்ஷன்: இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில், அன்புக்கரசியிடம் அன்பாக பேசும், தர்ஷன் என்னுடைய நண்பன் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்து இருக்கிறான். நம்முடைய திருமணத்தில் பிரச்சனை இருந்தால், நான் அவனை பார்க்காமல் தவிர்த்து வந்தேன். ஆனால், இப்போதுதான் அனைத்து பிரச்சனையும் சரியாகிவிட்டதே, இதனால் நான் நண்பனை சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்கிறான். அப்போதும், அன்புக்கரசி வேண்டாம் என பல முட்டுக்கட்டைகள் போட தர்ஷன் நைசாக பேசி அவளை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறான்.

தர்ஷனால் சொப்பிய பிளான்: பின் பைக்கை எடுத்துக்கொண்டு, எங்கோ செல்வது போல சென்றுவிட்டு மீண்டும், வீட்டிற்கு வரும் தர்ஷன் மாடியில் இருக்கும் பார்கவியை பார்க்க அறைக்கு சென்று அங்கு பார்கவியிடம் பேசுகிறான். உன்னுடைய அப்பா இறந்ததற்கு காரணம் நான் தான், நான் தான் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடு பார்கவி. ஆனால், நீ என்னை திருமணம் செய்து கொள்வதாக சொன்னதில் எனக்கு மிகவும் சந்தோஷம் என்று கையைப் பிடித்துக் கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறான். இதை அன்புக்கரசி ஜன்னலில் இருந்து பார்த்துவிட்டு, அதை வீடியோவாக எடுத்துக்கொண்டு, தன்னுடைய அக்கா அறிவுகரசிக்கு விஷயத்தை சொல்ல அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். தர்ஷன் செய்த தவறால், ஈஸ்வரியின் மொத்த பிளானும் சொதப்பிக்கொண்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X