கையும் களவுமாக சிக்கிய தர்ஷன்.. பார்கவியின் வாழ்க்கையில் மீண்டும் புயல்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் வீட்டிலிருந்த அனைவரும் ஒவ்வொரு வேலையாக வெளியில் சென்று விடுகின்றனர். வெளியில் செல்வதற்கு முன் குணசேகரன் கரிகாலனை அழைத்து, தர்ஷனுக்கு பாதுகாப்பாக இருக்கும் படி சொல்கிறார். இதனால், எங்கேயும் போகாமல் வீட்டில் இருக்கும் கரிகாலன், தர்ஷனிடம் சென்று எனக்கு இந்த வயதிலும் கல்யாணம் ஆகாமல் இருக்கு, ஆனால், உன் வயதுக்கு மேல பார்கவி, கீழே அன்புக்கரசி நல்லா வாழ்ற மாப்பிள்ளை என்று சொல்கிறான். இதை கேட்டு ஆத்திரப்பட்ட தர்ஷன், பெரிய மனுஷன் மாதிரி பேசுங்க என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிடுகிறான்
வெளியில் சென்ற தர்ஷன் மாடியில் பார்கவி தனியாக நிற்பதை பார்க்கிறான். அவளிடம் பேச வேண்டும் என்று அவனுக்கு ஆசை வருகிறது. ஆனால், கரிகாலன் வீட்டில் இருப்பதால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறான். அந்த நேரம் கலிகாலனுக்கு நண்பரிடம் இருந்து போன் வர, கரிகாலனும் வெளியில் சென்று விடுகிறான். அந்த நேரத்தை தனக்காக பயன்படுத்திக் கொள்ள திட்டம் போட்ட தர்ஷன் அன்புக்கரசியிடம் அன்பாக பேசுவது போல நடிக்கிறான். தர்ஷன் அன்பாக பேசுவதால் சந்தேகப்படும் அன்புக்கரசி, நீங்க இப்படி எல்லாம் பேச மாட்டீங்களே என்று கேட்கிறாள். உடனே தர்ஷன் பாத்தியா இப்போ கூட உனக்கு சந்தேகம் தான் என்கிறான்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அதைத் தொடர்ந்து தர்ஷன், அன்புக்கரசியிடம், என்னுடைய நண்பன் வெளிநாட்டிலிருந்து வந்து இருக்கிறான். பலமுறை பார்க்க வேண்டும் என என்னை கூப்பிட்டான். ஆனால், வீட்டில் பிரச்சனை இருந்ததால் நான் சென்று அவனை பார்க்க முடியாமல் போனது. இப்போ தான் எல்லா பிரச்சனையும் முடிந்துவிட்டதே, நான் அவனை பார்த்து விட்டு வருகிறேன் என்கிறார். ஆனால், அன்புக்கரசி, நானும் வருகிறேன் என்று சொல்ல ஏதோ காரணத்தை சொல்லி சமாளித்து விடுகிறான். அன்புக்கரசியும் அவன் அன்பாக பேசுவதை பார்த்து உண்மை என நம்பி, நண்பரை பார்த்துவிட்டு சீக்கிரம் வாங்க என சொல்லி தர்ஷனை அனுப்புகிறாள்.
கோவப்படும் ஞானம்: மறுபக்கம் ஞானத்தை சந்தித்து, எப்படியாவது நாங்கள் வைக்கும் வழக்கறிஞருக்கு நீங்கள் ஓகே சொன்னால், விரைவிலேயே வெளியே வந்துவிடலாம். நாங்கள் உங்களை ஜாமீனில் எடுக்கிறோம் என்று சொல்வதற்காக ரேணுகாவும் ஜனனியும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், ஞானம் தரப்பு வழக்கறிஞர் அவர்கள் சந்தித்து பேசி விடவே கூடாது என்பதில் குறியாக இருக்கிறார். இதைத்தொடர்ந்து, ரேணுகா ஞானத்திடம் பேச ஆத்திரப்படும் ஞானம், உன்னால் தான் நான் சிறையில் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் தயவு செய்து என்னிடம் எதுவுமே பேசாதே என்று கோபப்பட்டு கத்துகிறார். இதைக்கேட்டு ரேணுகா கதறி அழுகிறாள்.
வசமாக சிக்கி தர்ஷன்: மறுபக்கம் தர்ஷன் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே செல்வது போல சென்று விட்டு, பின்பக்கமாக பைக்கை நிறுத்திவிட்டு சுவர் ஏறி பார்கவி இருக்கும் அறைக்குள் சென்று பார்கவி நீ என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதை கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று பேசிக்கொண்டு இருக்கிறான். அன்புகரசிக்கு ஏதோ சந்தேகம் வந்து, இப்போது யாராவது வீட்டிற்குள் வந்தார்களா? என்று வேலைக்காரனிடம் கேட்க, அவர் வேறு யாரும் வரவில்லை தர்ஷன் தம்பி தான், மேலே போனார் என்று சொல்ல அன்புக்கரசி, பார்கவியில் இருக்கும் அறைக்கு சென்று, ஜன்னலை திறந்து பார்க்க, தர்ஷன் பார்கவியின் கையை பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அன்புக்கரசி, அதை வீடியோவாக எடுத்துக்கொண்டு அந்த அறையின் கதவை பூட்டுகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











