ஜனனியின் கழுத்தை நெறித்த அறிவுக்கரசி.. பார்கவி உயிருக்கு வந்த பேராபத்து.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: தர்ஷன் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே செல்வது போல சென்று விட்டு, பின்பக்கமாக பைக்கை நிறுத்திவிட்டு சுவர் ஏறி பார்கவி இருக்கும் அறைக்குள் சென்று பார்கவி நீ என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதை கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று பேசிக்கொண்டு இருக்கிறான். அன்புகரசிக்கு ஏதோ சந்தேகம் வந்து, இப்போது யாராவது வீட்டிற்குள் வந்தார்களா? என்று வேலைக்காரனிடம் கேட்க, அவர் வேறு யாரும் வரவில்லை தர்ஷன் தம்பி தான், மேலே போனார் என்று சொல்ல அன்புக்கரசி, பார்கவியில் இருக்கும் அறைக்கு சென்று, ஜன்னலை திறந்து பார்க்க, தர்ஷன் பார்கவியின் கையை பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அன்புக்கரசி, அதை வீடியோவாக எடுத்துக்கொண்டு அந்த அறையின் கதவை பூட்டிவிட்டு, அக்கா அறிவுக்கரசிக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்ல, கோவத்தின் உச்சத்திற்கு சென்ற அறிவுக்கரசி, இன்னையோட அந்த தர்ஷன் கதையை முடிக்கிறேன் என ஆத்திரத்தோடு துணிக்கடையில் இருந்து கிளம்புகிறாள். இதைப்பார்த்துக்கொண்டிருந்த நந்தினி, ஏதோ பிரச்சனை நடந்துவிட்டது என்பதை புரிந்து கொண்டு ஜனனிக்கு ஃபோன் செய்து, தர்ஷன், பார்கவியை பார்த்து பேசி இருக்கிறான். வீட்டில் ஏதோ பிரச்சனை ஆகிவிட்டது என்று சொல்ல, ஜனனி, ரேணுகா இருவரும் அவசர அவசரமாக வீட்டிற்கு கிளம்புகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: வீட்டிற்கு வந்த அறிவுக்கரசியைப் பார்த்த அன்புக்கரசி, வெளியே போய் நண்பனை பார்த்துவிட்டு வருவதாக சொன்ன தர்ஷன், மாடியில் பார்கவியின் கை பிடித்துக் கொண்டு பேசி கொண்டு இருக்கிறான் என அறிவுக்கரசி மீது சாய்ந்து அழுகிறாள். இதைக்கேட்டு கோவத்தின் உச்சத்தில் இருக்கும் அறிவுக்கரசி, டேய் தர்ஷா உன்னை சும்மா விடமாட்டேன் என்று சொல்லி கத்திக்கொண்டு இருக்கிறாள். அப்போது அங்கு வரும், ஜனனி மற்றும் ரேணுகா.. இங்க என்ன பிரச்சனை.. யாரை உள்ள வெச்சு பூட்டி இருக்கீங்க என்று கேட்க, கோபத்தில் இருந்த அறிவுக்கரசி ஜனனியின் கழுத்தை பிடித்து நெறித்து, எல்லா பிரச்சனையும் உன்னால் தான். நீதான் அந்த பாட்டுக்காரன் மகள் பார்கவியை வீட்டுக்குள்ள வெச்சிருக்க. இப்போ தர்ஷன் அவ கைய புடிச்சு கொஞ்சி பேசிகிட்டு இருக்கான். உன் கதை முடிச்சா எல்லாம் சரியாகிவிடும் என்று பாய்கிறாள். அப்போது ரேணுகா அவளை தடுத்து நிறுத்துகிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

பார்கவி கதை முடிந்தது: நாலு பேரும் சேர்ந்து என்னை அடித்தால் நான் அடங்கி விடுவேன் என நினைத்தீர்களா... இந்த வீட்டில் மீண்டும் ஒரு கொலை விழக்கூடாது, திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக பொறுமையாக இருக்கிறேன். இதற்கு மேல் நான் பொறுமையாக இருக்க மாட்டேன். பார்கவியின் கதைகள் இன்னையோடு முடிந்து விட வேண்டும். இந்த வீட்டு பெரிய மனுஷனை ஃபோன் போட்டு வீட்டுக்கு வர சொல்லு இன்னைக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை பார்த்துவிடலாம் என்கிறாள். உடனே ஜனனி, பார்கவி மேல கை வெச்சிடுவீங்களா.. அப்படி வெச்ச என்ன நடக்கும்னு தெரியுமா, இந்த வீட்டில் யாருமே இருக்க முடியாது.எல்லாரும் குடும்பத்தோட ஜெயிலுக்கு போக வேண்டியது தான் என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X