அய்யோ.. பார்கவிக்கு என்னாச்சு.. கொலைவெறியோடு அடித்த அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில், தர்ஷன் பார்கவியுடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த அன்புக்கரசி, அவர்களை ரூமில் வைத்து பூட்டிவிடுகிறாள். இந்த தகவல் தெரிந்து வந்த அறிவுக்கரசி, வீட்டுக்கு வந்ததும் வனத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறாள். அப்போது, ஜனனி வீட்டிற்கு வர, ஜனனியின் கழுத்த புடிச்சி, பெரிய ரகளை செய்கிறாள். பார்கவி, தர்ஷன் இரண்டு பேரின் காலையும் உடைக்க வேண்டும், குணசேகரன் வரட்டும் இரண்டுல ஒன்னு பார்த்துவிடலாம் என கோவத்தோடு இருக்கிறாள்.
இன்றைய எபிசோடில், சூப்பரான ஒரு தரமான சம்பவத்தை ஜனனி செய்து இருக்கிறார். அதாவது ஜனனி சாருலதா வழக்கறிஞருக்கு ஃபோன் செய்து வீட்டில் நடந்த விஷயத்தை சொல்கிறாள். இதைக்கேட்டு பதற்றப்படும் சாருலதா, எதுக்கு தர்ஷன் இந்த மாதிரி தேவை இல்லாத வேலைகள் எல்லாம் பண்றான். இந்த விஷயம் மட்டும் பெருசா ஆச்சுன்னா, நம்மளுடைய வழக்குக்கு அது சிக்கலா மாறிடும். இதனால், பிரச்சனை பெரிதாகிவிடும் நீங்கள் போலீசை கூப்பிடுவது தான் சரி என்கிறாள்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இதற்குள் இந்த விஷயம் குணசேகரன் காதுக்கு வர, அவர் வீட்டிற்கு வருகிறார். குணசேகரனை பார்த்த அறிவுக்கரசி, மாமா, அந்த தர்ஷன் பையன், நம்பல நம்ப வெச்சி ஏமாத்திட்டான். அவன் நல்லவன் மாதிரி, அன்புக்கரசியை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லும் போது எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், அது உண்மை இல்லை. இவளுங்க ஏதோ திட்டத்தை போட்டு இருக்காளுங்க, அந்த பாட்டுக்காரன் மகளின் கதையை முடிக்க வேண்டும் என்று சொல்கிறான். உடனே குணசேகரன், கதவை திறங்க என்று சொல்ல, கதவை திறக்கும் அறிக்கரசி, தர்ஷனை வெளியே இழுத்து அடி அடி என அடிக்கிறாள். பின் பார்கவியின் கழுத்தில் கை வைத்து அடிக்கிறாள்.

ஆத்திரத்தில் கொந்தளித்த கதிர்: அப்போது, ஜனனி, நந்தினி இருவரும் ஓடி வந்து அறிவுக்கரசியை தடுத்து ஜனனியை காப்பாற்றுகின்றனர். ஏய் அறிவுக்கரசி இதுக்கு மேல, பார்கவி மேல கையை வெச்ச அவ்வளவு தான், நந்தினி அக்கா போலீசிக்கு போன் போடுங்க என்று சொல்கிறான். உடனே கதிர், இந்த பார்கவியை கொன்று போட்டால் தான் இந்த குடும்பமே நிம்மதியாக இருக்கும் என்று சொல்லி, அவளை அடிக்க பாய்கிறான். இப்போது, நந்தினி ஓடி வந்து, நீ எல்லாம் மனுஷனா.. அந்த பெண்னோட அப்பனை கொன்ன, இப்போ அந்த பெண்ணையும் கொன்னாதான் உன் ஆத்திரம் அடங்குமா இன்னும் எத்தனை பேரை பழிவாங்குவா என்று பேச, கதிர் நந்தினியை அடிக்கிறான்.
எச்சரித்த போலீஸ்: போலீசுக்கு ஃபோன் செய்யும் ஜனனி, பார்கவியை வீட்ல இருக்குறவங்க டார்ச்சர் செய்கிறாள் என்று சொல்ல, உடனே போலீஸ் வீட்டுக்கு வருகின்றனர். அப்போது ஜனனி, பார்கவியை ரூமுக்குள்ள வச்சு பூட்டிட்டாங்க சார் என்கிறாள். இதைக்கேட்டு கோவப்படும் போலீசார், என்னம்மா சும்மா இருக்க முடியாதா, அந்த பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சு, உங்க எல்லாரையும் தூக்கி உள்ள வச்சுருவேன் என்கிறார். மேலும், மாடிக்கு யாரும் போகக்கூடாது, அதையும் மீறி போன அவ்வளவு தான் என எச்சரித்துவிட்டு செல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











