வீட்டை விட்டு விரட்டப்பட்ட பார்கவி.. கதறி அழுத தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: தர்ஷன் செய்த வேலையால் ஆத்திரத்தில் இருக்கும் அறிவுக்கரசி, நாலு பேரும் சேர்ந்து என்னை அடித்தால் நான் அடங்கி விடுவேன் என நினைச்சீங்களா... இந்த வீட்டில் மீண்டும் ஒரு கொலை விழக்கூடாது, என் தங்கச்சி திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக பொறுமையாக இருக்கிறேன். இதற்கு மேல் நான் பொறுமையாக இருக்க மாட்டேன். பார்கவியின் கதைகள் இன்னையோடு முடிந்து விட வேண்டும். இந்த வீட்டு பெரிய மனுஷனை ஃபோன் போட்டு வீட்டுக்கு வர சொல்லு இன்னைக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை பார்த்துவிடலாம் என்கிறாள் அறிவுக்கரசி.
இதைடுத்து வீட்டிற்குள் குணசேகரன் வந்தவுடன், பூட்டிய அறையின் கதவை திறந்து கதிர், தர்ஷனை சரமாரியாக அடிக்கிறான். அதே நேரத்தில் அறிவுக்கரசி பார்கவியின் கழுத்தை பிடித்து நெறித்து, உன்னால் தான்டி இந்த குடும்பத்திலேயே இவ்வளவு பிரச்சனை என்று, அவளை கடுமையாக அடிக்கிறாள். அப்போது, நந்தினி, ஜனனி இருவரும் அன்புக்கரசியை தடுக்கின்றனர். அப்போதும், அவள், ஆத்திரம் அடங்காமல் பார்கவியை அடிக்க, ஜனனி, அன்புக்கரசியின் கண்ணத்தில் பளார் என அறைவிட்டு, இதற்கு மேல், ஒரு அடி பார்கவி மேல விழுந்தால் அவ்வளவு தான் என்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இந்த பிரச்சனையை பார்த்து ஆத்திரப்படும் குணசேகரன், அனைவரும் அமைதியாக கீழ போங்க, முக்கியமான ஒரு நபர் இங்கு வருவார். அவர் வந்ததும் மற்றதை பார்த்துக்கொள்ளலாம் என்கிறார். இதைத்தொடர்ந்து, குணசேகரன் தரப்பு வழக்கறிஞர், போலீசை அழைத்துக் கொண்டு வருகிறார். வீட்டிற்கு வரும், போலீஸ், வீட்டில் என்ன நடந்தது என்று விசாரிக்க, அன்புக்கரசி, தர்ஷன் என்னிடம் பொய் சொல்லிவிட்டு அந்த பெண்ணை பார்த்து சந்தித்து பேசினார் அதனால் நான் அறைக்குள் வைத்து பூட்டி விட்டேன் என்கிறாள். இதைத்தொடர்ந்து அந்த வழக்கறிஞர், பார்கவியை இதே வீட்டில் இருக்க வைத்து, தர்ஷனின் மனதை மாற்றி கல்யாணம் செய்து வைக்க பார்க்கிறார்கள், இந்த பெண் இந்த வீட்டில் இருக்கக்கூடாது என தீர்க்கமாக சொல்கிறார்.
வீட்டை விட்டு விரட்டப்பட்ட பார்கவி: இதைக்கேட்ட, இன்ஸ்பெக்டர், பார்கவி இந்த வீட்டில் இருக்கக்கூடாது என்று நான் முடிவு எடுக்க முடியாது. நான் பார்கவியை மேஜிஸ்டேட் முன் ஆஜர்படுத்துகிறேன். நீங்க சொல்ல வேண்டியதை அங்கு வந்து சொல்லுங்க என்று சொல்கிறார். இதைத் தொடர்ந்து, பார்கவி மற்றும் ஜனனியை இன்ஸ்பெக்டர் அழைத்து செல்கிறார். இந்த விஷயம் தெரிந்து அங்கு காத்து இருக்கும் சாருலதா, இன்ஸ்பெக்டரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்கிறாள். அப்போது, இன்ஸ்பெக்டர், இந்த பெண் அந்த வீட்டில் பெரிய பிரச்சனை செய்துவிட்டாள், இதனால், அங்கு இருப்பவர்கள் இந்த பெண் அங்கு இருக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் என்கிறார்.
அப்போது, ஜனனி, சார் அவங்க எல்லாம் பொய் சொல்லாங்க சார், அவங்க தான் பார்கவியை ரூமில் வைத்து பூட்டினார்கள் என்று சொல்கிறாள். உடனே, இன்ஸ்பெக்டர், இந்த பெண் தர்ஷனுடன் பேசியதற்கு ஆதாரம் இருக்கு, உங்கள் தரப்பில் எந்த ஆதாரம் இல்லை. இனி மேல் நீங்க எதை பேச வேண்டும் என்றாலும், நீதிபதியிடம் பேசிக்கொள்ளுங்கள் என்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











