அடித்து ஆடிய குணசேகரன்.. அவமானத்தால் தலைகுனிந்த ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: பார்கவி இந்த வீட்டில் இருக்கக்கூடாது என குணசேகரன் குடும்பத்தினர் சொல்லிய நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர். பார்கவியை மேஜிஸ்டேட் முன் ஆஜர் படுத்துகிறார். அப்போது, நீதிபதியிடம் குணசேகரன் தரப்பு வழக்கறிஞர், பார்கவியால் குடும்பத்திற்குள் பிரச்சனை இதனால், அந்த பெண் அங்கே இருக்கக்கூடாது என்கிறாள். இதைக்கேட்ட நீதிபதி, இதுபற்றி பார்கவியிடம் கேட்க, அவள் பயத்தில் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறாள். அப்போது நீதிபதி, அந்த வழக்கில் அவர்கள் தரப்பு வாதத்தை முன்வைத்துவிட்டார்கள்.

இதற்கு மேல் நீ என்ன சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். அப்போதும், பார்கவி பதில் சொல்லாததால், குணசேகரன் தரப்பு வழக்கிறார். இந்த பெண்ணின் மனநிலையிலை இயல்பாக இல்லை. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தர்ஷனுக்கு போன் செய்து அழைத்து, ஜாலியாக இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இதனால், தர்ஷனும் மாடி ஏறி அறைக்கு சென்ற போது, வீட்டில் இருந்தவர்களிடம் மாட்டி இருக்கிறாள். இந்த பெண் வீட்டில் இருப்பதால், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பெரிய பாதிப்பாக இருக்கிறது. மேலும், இந்த அந்த குடும்பத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு மாடியில் இருந்து குதித்து விட்டால் அதற்கு யார் பொறுப்பாக முடியும். இதனால், பார்கவி அந்த வீட்டில் இருக்கக்கூடாது என்றார். இதைக்கேட்ட நீதிபதி, வீட்டில் இருப்பவர்களிடம் இந்த பெண்ணால் எந்த ஆபத்தும் வராது என்று எழுதி வாங்கிக் கொண்டு வேறு இடத்தில் பாதுகாப்புடன் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து, இன்ஸ்பெக்டர் முன்னிலையில் பார்கவி, ஜீவானந்தம், குணேசேகரன் என அனைவரும் கையெழுத்து போடுகின்றனர். அப்போது குணசேகரன் என்னால் இனிமேல் பார்கவிக்கு எந்த பிரச்சனையும் நடக்காது என்கிறார். அதைத்தொடர்ந்து, ஜீவானந்தம் காலத்தோட நிலைமை பாத்தீங்களா... என்னுடைய தம்பி கதிர், உன்னுடைய மனைவியை கொன்னுட்டானு ஜெயில்ல தள்ள பார்த்தே, அடுத்து என்னுடைய மகள் தர்ஷினியை வச்சி, அவளை கடத்திடேனு என் மேல வழக்கு போட்ட, அடுத்து இந்த பெண்ணை வெச்சி விளையாடுனா. கடைசில இப்ப எங்க வந்து நிக்கிற பாத்தியா? ஆயிரம் கைய வச்சு மறச்சாலும் சூரியனா யாராலும் மறைக்க முடியாது. உண்மையை யாருமே மறைக்க முடியாது ஜீவானந்தம், நல்லா தெரிஞ்சுக்கோங்க எல்லாவற்றிலிருந்தும் நேர்மையான வழியில நாங்க வெளியில வருவோம் என கிண்டலாக பேசுகிறார்.

அடுத்த திட்டம் என்ன: இதையடுத்து, எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சு நான் இனி பார்கவி விஷயத்தில், தலையிட மாட்டேன். அதே போல அவங்களும் என்னோட குடும்ப விஷயத்துல தலைகிட கூடாது என்கிறார். பின் அன்புக்கரசி நான் சொல்வது எல்லாம் உனக்கு புரியுதா என்கிறார் உடனே அன்புக்கரசி நல்லா புரியுது மாமா என்கிறார். இதில் இருந்து அவர்கள் வேறு ஏதோ ஒரு திட்டத்தை தயார் செய்து அதில் பார்க்கவும் யோசிக்க வைக்க பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது. பின் ஜீவானந்தம், பார்கவி அனைவரும் வெளியே அப்போது, ஜனனி, பார்கவி இந்த விஷயத்தில் நாம தோற்றுவிட்டோம் என்று நினைக்காதே, நிச்சயமே அப்பா மரண வழக்கில் நல்ல தீர்ப்பு வரும், அவர்களுக்கு சரியான தண்டனை வாங்கி கொடுக்காமல் நான் ஓயமாட்டேன் என்கிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X