பார்கவிக்கு வாய்க்கரிசி போட்டாச்சு.. குணசேகரன் வெச்ச குறி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: குணசேகரன் தரப்பு வழக்கிறார். இந்த பெண்ணின் மனநிலையிலை இயல்பாக இல்லை. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தர்ஷனுக்கு போன் செய்து அழைத்து, ஜாலியாக இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இதனால், தர்ஷனும் மாடி ஏறி அறைக்கு சென்ற போது, வீட்டில் இருந்தவர்களிடம் மாட்டி இருக்கிறாள். இந்த பெண் வீட்டில் இருப்பதால், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பெரிய பாதிப்பாக இருக்கிறது. மேலும், இந்த அந்த குடும்பத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டால், அதற்கு யார் பொறுப்பாக முடியும். இதனால், பார்கவி அந்த வீட்டில் இருக்கக்கூடாது என்றார். இதைக்கேட்ட நீதிபதி, வீட்டில் இருப்பவர்களிடம் இந்த பெண்ணால் எந்த ஆபத்தும் வராது என்று எழுதி வாங்கிக் கொண்டு வேறு இடத்தில் பாதுகாப்புடன் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

இன்ஸ்பெக்டர் முன்னிலையில் பார்கவி, ஜீவானந்தம், குணேசேகரன் என அனைவரும் கையெழுத்து போடுகின்றனர். அப்போது குணசேகரன் என்னால் இனிமேல் பார்கவிக்கு எந்த பிரச்சனையும் நடக்காது. அந்த பெண் இங்கே இருந்தால் எங்களும் பிரச்சனை அந்த பொண்ணுக்கும் பிரச்சை இதனால், ஜீவனந்தம் சார் கூட போவது தான் சரி. அவரு எப்பவுமே பெண்களுக்காக பாடுபடுபவர். அவர் இந்த பெண்ணை நல்ல வளர்ப்பார் என்கிறார். இதைத்தொடர்ந்து, பார்கவி, ஜீவனந்தமும் கோர்ட் ஆர்டரில் கையெழுத்து போடுகின்றனர். அதைத்தொடர்ந்து, ஜீவானந்தம் காலத்தோட நிலைமை பாத்தீங்களா... என்னுடைய தம்பி கதிர், உன்னுடைய மனைவியை கொன்னுட்டானு ஜெயில்ல தள்ள பார்த்தே, அடுத்து என்னுடைய மகள் தர்ஷினியை வச்சி, அவளை கடத்திடேனு என் மேல வழக்கு போட்ட, அடுத்து இந்த பெண்ணை வெச்சி விளையாடுனா. கடைசில இப்ப எங்க வந்து நிக்கிற பாத்தியா?

கிண்டலடித்த குணசேகரன்: ஆயிரம் கைய வச்சு மறச்சாலும் சூரியனா யாராலும் மறைக்க முடியாது. உண்மையை யாருமே மறைக்க முடியாது ஜீவானந்தம், நல்லா தெரிஞ்சுக்கோங்க எல்லாவற்றிலிருந்தும் நேர்மையான வழியில நாங்க வெளியில வருவோம் என கிண்டலாக பேசுகிறார். இதைத்தொடர்ந்து அனைவரும் கிளம்ப அப்போது, பார்கவி அழைத்த குணசேகரன், திருநீர் போட்டு நன்றாக இரு என ஆசிர்வாதம் செய்து அனுப்புகிறார். இத்தொட இந்த வீட்டின் பீடை ஒழிந்தது, அறிவுக்கரசி வாய்க்கரிசி போட்டு அனுப்ப இருக்கேன். இனி மேல் நீ பார்த்துக்கொள் என்கறிர்.

கல்யாண ஏற்பாடு: பின் ஜீவானந்தம், பார்கவி அனைவரும் வெளியே அப்போது, ஜனனி, பார்கவி இந்த விஷயத்தில் நாம தோற்றுவிட்டோம் என்று நினைக்காதே, நிச்சயமே அப்பா மரண வழக்கில் நல்ல தீர்ப்பு வரும், அவர்களுக்கு சரியான தண்டனை வாங்கி கொடுக்காமல் நான் ஓயமாட்டேன் என்கிறாள். இதையடுத்து, வீட்டில் குணசேகரன், ஒரு சாமியாரை வரவைத்து, வீட்டில் பூஜை போட வேண்டும், அந்த பூஜையை போட்டு விட்டு அடுத்த வேலையை அடுத்து கல்யாண வேலையை ஆரம்பிக்கலாம் என்று சொல்கிறார். அப்போது தர்ஷன் சோகமாக இருக்க, குணசேகரன் நீ போய் உங்க அம்மா கிட்ட பேசிட்டு வா, அப்போ தான் உன் மனசு நிம்மதியாக இருக்கும் என்று சொல்கிறான். இதைத்தொடர்ந்து தர்ஷன், ஈஸ்வரியை பார்த்துவிட்டு, அம்மா சாரி, என்னை மன்னித்து விடங்கள், உங்க பேச்சை கேட்காமல் நான் பார்கவியை பார்த்து பேசி பெரிய பிரச்சனை ஆகிவிட்டது என்கிறார். இதைத்தொடர்ந்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X