பார்கவி, ஜீவானந்தம் எங்கே? தேடி அலையும் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஜீவானந்தத்துடன் பார்கவி வீட்டை விட்டு கிளம்பும் நேரத்தில், குணசேகரன் பார்கவியை அழைத்து, திருநீர் போட்டு நன்றாக இரு என ஆசிர்வாதம் செய்து அனுப்புகிறார். கரிகாலன் என்ன மாமா ஆசிர்வாதம் பண்றீங்க என்று கேட்க, அது ஆசிர்வாதம் இல்லாத, வாய்க்கரிசி போட்டு அனுப்ப இருக்கேன். இனி மேல் நீ பார்த்துக்கோ அன்புக்கரசி என்கிறார். பின் ஜீவானந்தம், பார்கவி அனைவரும் வெளியே அப்போது, ஜனனி, பார்கவி இந்த விஷயத்தில் நாம தோற்றுவிட்டோம் என்று நினைக்காதே, நிச்சயமே அப்பா மரண வழக்கில் நல்ல தீர்ப்பு வரும், அவர்களுக்கு சரியான தண்டனை வாங்கி கொடுக்காமல் நான் ஓயமாட்டேன் என்கிறாள்.
தர்ஷன் சோகமாக இருக்க, குணசேகரன் நீ போய் உங்க அம்மா கிட்ட பேசிட்டு வா, அப்போ தான் உன் மனசு நிம்மதியாக இருக்கும் என்று சொல்கிறான். இதைத்தொடர்ந்து தர்ஷன், ஈஸ்வரியை பார்த்துவிட்டு, அம்மா சாரி, என்னை மன்னித்து விடங்கள், உங்க பேச்சை கேட்காமல் நான் பார்கவியை பார்த்து பேசி பெரிய பிரச்சனை ஆகிவிட்டது என்று சொல்லி அழுகிறான். இதைத்தொடர்ந்து, ஈஸ்வரி, ஜனனியிடம் அந்த பெண்ணுக்கு நம்பிக்கை கொடுத்து அழைத்து வந்தேன். அம்மா போல பார்த்துக்கொள்வேன் என வாக்கு கொடுத்தேன் கடைசியில் அவள் வேதனையோடு போகிறார். தர்ஷனுக்கு பார்கவியை கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி, அவன் மனதிலும் ஆசையை வளர்த்துவிட்டேன். என் மனதில் ஏதோ தவறாக படுகிறது ஜனனி, எனக்கு எதாவது ஆகிவிட்டால், என் மகனை பார்த்துக்கொள் என பேசி கண் கலங்குகிறாள்.

ஜீவானந்தம் எடுத்தமுடிவு: இதையடுத்து, ஜனனி அக்கா எதுவும் ஆகாது நீங்க நல்லா இருப்பீங்க, நாம நினைச்சபடி, இந்த கல்யாணம் நடக்கும். அதற்கு முதல் படியாக நான் ஜீவனந்தம் சார் சொன்னபடி தர்ஷனுக்கும் பார்கவிக்கும் பத்திரிக்கை அடித்துவிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு ஜனனி வெளியே கிளம்புகிறாள். மறுபக்கம், ஜீவனந்தம், காரை பாதியில் நிறுத்திவிட்டு இதற்கு மேல் நாங்க சென்றுவிடுகிறோம் என்று சொல்ல, டிரைவர் கிளம்பி விடுகிறார். பின், ஜீவனந்தம், நண்பன் சிவாவிற்கு போன் செய்து, காரை அனுப்பி வையுங்கள். நாங்க எங்கே போகிறோம் என்று யாருக்கும் தெரிய வேண்டாம். இதற்கு மேல் இந்த சிம் வேலை செய்யாது, நானே உங்களை கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சிம்மை உடைத்து போடுகிறார்.
பார்கவி,ஜீவானந்தம் எங்கே: பின் பார்கவி எதற்கு மேல் நீ இந்த ஊருக்கு வரப்போவதில்லை. இந்த ஊருக்கு உனக்கு ஆனா பந்து முடிந்துவிட்டது எத்தனையோ முயற்சி செய்து இந்த வீட்டில் உன்னை வாழ வைத்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால், அவர்கள் பணக்கார விளையாட்டை ஆடுகிறார்கள். அதனால் நீ இனிமேல் இந்த இருப்பது சரி இல்லை. உன்னுடைய வாழ்க்கையை நோக்கி நீ ஓட வேண்டும், அதற்கான நேரம் வந்துவிட்டது. நம்மை யாரும் தொடர்பு கொள்ள முடியாது, நாம யாருக்குமே தெரியாத ஒரு இடத்திற்கு போக போகிறோம் என்று சொல்லிவிட்டு. யாருக்கும் தெரியாமல் ஒரு ஊருக்கு இருவரும் செல்கின்றனர். இதைத்தொடர்ந்து, அந்த வீட்டின் உரிமையாளரிடம், இந்த பெண் பார்கவி, பல பிரச்சனைக்கு மத்தியில் இங்கே வந்து இருக்கிறாள். நல்ல படிச்சி இருக்கா இவள், கனடா போகுற வரைக்கும் நாங்கே இங்கே இருக்கிறோம் என்கிறார். மறுபக்கம் ஜீவானந்தத்திற்கு ஜனனி போன் செய்து பார்க்கிறார். அவருடைய போன் போகவே இல்லை. மேலும், அடுத்து பார்கவிக்கு போன் செய்ய இருவருடைய போனும் ரீச் ஆகாததால், அனைவரும் பயப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications











