ஈஸ்வரிக்கு வந்த ஃபோன்.. ஜனனி போட்ட பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: கொடைக்கானலில் இருந்து தர்ஷன் மற்றும் பார்கவி அனைவரும் தப்பித்து ஒரு மருத்துவமனைக்கு வருகின்றனர். அங்கு பார்கவியின் அப்பாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்பாவின் நிலைமையை பார்த்து கண்ணீர் சிந்தும் பார்கவி, எல்லாத்துக்கும் காரணம் நீதான். நீ எதுக்கு கொடைக்கானல் வரணும், மறுபடியும் நாங்க பிரச்சனையில் மாட்டிக்கொண்டோம். நீ பெரிய இடத்து பையன், உன்னை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால், என்னையும் என் அப்பாவையும் நிச்சயமாக உயிரோடு விட மாட்டார்கள் என்று கதறி அழுகிறாள்.
அப்போது தர்ஷன், இப்படி ஒரு பிரச்சனை நடக்கும் என்று எனக்கு தெரியது. எனக்கு வீட்டில் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள், எனக்கு அது பிடிக்காததால் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தேன். நிச்சயமாக நீங்கள் கொடைக்கானலில் இருந்தது எனக்கு தெரியாது. நான் உங்களுடன் இருந்தால் மீண்டும். உங்களுக்கு பிரச்சனை வரும் நான் எங்காவது போய்விடுகிறேன் என்கிறான். அப்போது, ஜீவானந்தம் இந்த நேரத்தில் நீ பார்கவியுடன் இருப்பது தான் சரி, நீ கிடைக்கவில்லை என்றால் பார்கவியையும் அவருடைய அப்பாவின் உயிருக்கு தான் ஆபத்து. இதனால் நீ இந்த நேரத்தில் பார்கவியுடன் தான் இருக்க வேண்டும் என்கிறார்.

நான் சும்மா இருக்க மாட்டேன்: மறுபக்கம் வீட்டில் இருக்கும் குணசேகருனுக்கு கதிர் ஃபோன் செய்து, தர்ஷனை எங்கே தேடியும் கிடைக்கவே இல்லை. இதனால், அவன் காணாமல் போனது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாமா என்கிறார். உடனே குணசேகரன், புகார் கொடுத்து விடுங்கள். ஆனால், எனக்கு தர்ஷன் வீட்டிற்கு வந்தாக வேண்டும். இந்த கல்யாணம் நடக்க வேண்டும் அதற்காக ஜீவானந்தம், பார்கவி, பார்கவியின் அப்பா எத்தனை பேர் உயிர் போனாலும் எனக்கு கவலையே இல்லை. எனக்கு தர்ஷனின் கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் என கத்துகிறார். அப்போது அங்கு வரும் ஈஸ்வரி, தர்ஷன் வீட்டை விட்டு வெளியே சென்றதற்கும் ஜீவானந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது எப்படி நடந்தது என்றே எனக்கு தெரியாது. ஆனால், ஜீவானந்தத்திற்கும் பார்கவிக்கும் ஏதாவது ஒரு பிரச்சனையை வந்தா நான் சும்மா இருக்க மாட்டேன். நீங்க வேறு ஒரு ஈஸ்வரியை பாப்பீங்க என்று சவால் விட்டு செல்கிறாள்.
ஈஸ்வரிக்கு வந்த ஃபோன்: இன்றைய எபிசோடுக்கான காண ப்ரோமோ வெளியாகி உள்ளது, அதில் ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு ஃபோன் செய்து நடந்த விஷயத்தை பற்றி சொல்கிறார். அப்போது, ஜனனி அவன் கல்யாண விஷயத்தில் தெளிவான ஒருமுடிவு கிடைக்காமல் அவன் வீட்டுக்கு வரக்கூடாது, அவன் அங்கேயே இருக்கட்டும் என்கிறாள். தர்ஷன் இருக்கும் இடம் தெரியாமல் என்ன செய்வது என்ற இருக்கும் குணசேகரன் ஈஸ்வரியிடம் பம்மி தயவு செய்து தர்ஷன் எங்கே இருக்கிறான் என்று சொல், நான் பேசி அவனை வீட்டிற்கு அழைத்து வருகிறேன் என்கிறார். அப்போது, ஈஸ்வரி நிச்சயமாக அவன் இருக்கும் எனக்கு தெரியாது, அவன் இந்த வீட்டில் இருப்பது பிடிக்காததால் தான் வீட்டை விட்டு வெளியில் போனான். நீங்கள் ஒரு நல்ல அப்பாவாக, நல்ல முடிவு எடுக்க, அவன் மனதை புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் அப்போது தான் அவன் வீட்டுக்கு வருவான் என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்


Click it and Unblock the Notifications











