திருமணத்தை நிறுத்திய குணசேகரன்.. புலி பதுங்குவது பாயத்தான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஜீவானந்தம், தர்ஷன், பார்கவி அனைவரும் மருத்துவமனையில் இருக்க, அப்போது, தர்ஷன் எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம், என்னால், பார்கவி ஒன்னும் ஆகிவிடக்கூடாது, நான் வீட்டை விட்டு வெளியில் வந்ததிற்கும், பார்கவிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று வீடியோ வெளியிட்டு விட்டு சென்று விடுகிறேன் என்கிறார். அப்போது, ஜீவானந்தம், மறுபடியும் தப்பு செய்யாத தர்ஷா, நீ மட்டும் இப்போது வீட்டிற்கு போகாமல், வேறு எங்காவது போனால், அது பார்கவிக்குத்தான் பிரச்சனையாக முடியும் என்கிறான்.
இதைத்தொடர்ந்து, ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு ஃபோன் செய்து நடந்த விஷயத்தை பற்றி சொல்கிறார். அப்போது, ஜனனி அவன் கல்யாண விஷயத்தில் தெளிவான ஒருமுடிவு கிடைக்காமல் அவன் வீட்டுக்கு வரக்கூடாது, அவன் அங்கேயே இருக்கட்டும் அதுவரைக்கும் தர்ஷனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறாள். இதைத்தொடர்ந்து, குணசேகரன், தர்ஷன் இருக்கும் இடம் தெரியாமல் என்ன செய்வது என்று இருக்க, ஈஸ்வரியிடம் பம்மி தயவு செய்து தர்ஷன் எங்கே இருக்கிறான் என்று சொல், நான் பேசி அவனை வீட்டிற்கு அழைத்து வருகிறேன் என்கிறார். அப்போது, ஈஸ்வரி சத்தியமா அவன் இருக்கும் எனக்கு தெரியாது என்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது குணசேகரன், தர்ஷன் எங்கே இருக்கிறான் என்ற உனக்கு நிச்சயமாக தெரியும், அவன் வீட்டை விட்டு ஓடி போய் யாரையாவது திருமணம் செய்து கொண்டு வந்தால் அதைவிட பெரிய மானக்கேடு எனக்கு எதுவுமே இல்லை. இந்த குடும்பத்திற்கு என்று ஒரு கௌரவம் இருக்கிறது. அந்த கௌரவம் காற்றில் போய்விட நான் விரும்ப மாட்டேன். தயவுசெய்து தர்ஷன் எங்கே இருக்கிறான் என்று சொல், இந்த கல்யாணத்தை கூட நான் நிறுத்தி விடுகிறேன் என்கிறார். அப்போது, அவன் எங்கே இருக்கிறார் என்று எனக்கு தெரியாது, இந்த வீட்டில் இருப்பது பிடிக்காததால் தான் வீட்டை விட்டு வெளியில் போய் இருக்கான். நீங்கள் ஒரு நல்ல அப்பாவாக, நல்ல முடிவு எடுக்க, அவன் மனதை புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் அவனே வீடு தேடிவருவான் என்கிறாள்.
ஈஸ்வரி போட்ட திட்டம்: இன்றைய எபிசோடு காண ப்ரமோ வெளியாகி உள்ளது, அந்த ப்ரோமோவில், தர்ஷனை எங்கே தேடியும் கிடைக்காததால் இப்போது மனம் மாறிவிட்டது போல இவர் பேசுகிறார். இவரை நம்பவே முடியாது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவருடைய பேச்சு மாறிக்கொண்டே இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இந்த நேரத்தில் தர்ஷன் ஜீவானந்தத்துடன் இருப்பதுதான் சரி. ஆனால், தர்ஷனுடைய மனசு மாறிக்கொண்டே இருக்கும். இதனால், அவனுக்கு ஃபோன் செய்து அங்கேயே இருக்கும்படி சொல்ல வேண்டும் என ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியில் வருகின்றனர்.
நடக்கக்போவது என்ன: வெளியில் குணசேகரன், விஷாலாட்சி, கரிகாலன் அனைவரும் இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை கேட்டு விடுகின்றனர். அப்போது விஷாலாட்சி, தர்ஷனை பற்றி கேட்டதும் தெரியவே தெரியாது என்று சொல்லிவிட்டு, தர்ஷனை மறைத்து வைத்துவைத்து நாடகமாடுறீங்களா... துப்பாக்கி எடுத்து இவளுங்களை சுட்டு தள்ளு, ஒருத்தியும் உயிருடன் இருக்கக் கூடாது வாழ்கிறோமோ... சாகிரோமோ என்ன பிரச்சனை வந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிறாள். இதன் பின், ஈஸ்வரி, தர்ஷன் எங்கே இருக்கிறான் என்று எனக்கு தெரியும். ஆனால், நான் சொல்ல மாட்டேன். அவன் உங்களுக்கு மட்டும் மகன் இல்லை, எனக்கு மகன்தான். ஒரு அம்மாவாக நான் என்ன செய்ய வேண்டுமோ, அதைத்தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன். மகன் வாழ்க்கை எப்படி கெட்டுப் போனாலும் பரவாயில்லை. கவுரவம் தான் முக்கியம் என்று பார்க்கும் ஒரு மோசமான அப்பாவா அப்பாவா நீங்கள் என்று கேட்கிறாள். நிலைமை கை மீறி போனதே உணர்ந்து கொண்ட குணசேகரன், அறிவுக்கரசிக்கு ஃபோன் செய்து, உன்னுடைய தங்கைக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துக்கொள் என்கிறார். இதை கேட்டு அறிவுக்கரசி அதிர்ச்சி அடைகிறாள். இதன் என்ன நடக்கபோகிறது என்று பார்க்கலாம்


Click it and Unblock the Notifications











