குணசேகரனின் சூழ்ச்சியில் சிக்கிய பெண்கள்.. அறிவுக்கரசிக்கு விழுந்த அடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில், ஈஸ்வரி, ஜீவானந்தத்திற்கு போன் செய்து, நான் உங்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். தொடர்ந்து என்னால் உங்களுக்கு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என கண் கலங்கி பேசுகிறாள். அப்போது ஜீவானந்தம், உதவி செய்யும் போது அதனால் என்ன விளைவு வரும் என்று யோசித்து உதவி செய்தால், அது ஒருவர் மீது வைத்த அன்புக்கு அர்த்தமே இல்லை என்றாகிவிடும் என்கிறார். இதையடுத்து, ஈஸ்வரி, தர்ஷனிடம் பேசி எங்கேயும் போக வேண்டாம் நீ ஜீவானந்துடன் இரு, இங்கு பிரச்சனை சரியானதும் வந்தால் போதும் என்கிறார்.
ஈஸ்வரி பேசியதை, வெளியில் விசாலாட்சி, குணசேகரன், கரிகாலன் என அனைவரும் கேட்டு விடுகின்றனர். அப்போது விசாலாட்சி, புருஷனுக்கு எப்படி துரோகம் செய்ற, இவ்வளவு நேரம் தர்ஷன் எங்கேனு கேட்டான் அப்போ தெரியாதுனு சொல்லிட்டு, இப்போ பேசிட்டு வரியா என்கிறார். அப்போது ஈஸ்வரி, தர்ஷன் எங்கே இருக்கிறான் என்று எனக்கு தெரியும். ஆனால், நான் சொல்ல மாட்டேன் அவன் என் மகன், அவன் வாழ்க்கை நல்ல படியாக இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஈஸ்வரி ஒரு முடிவோடு இருப்பதை தெரிந்து கொண்ட குணசேகரன், வேறு வழி இல்லாமல், எனக்கு என் மகன் வீட்டிற்கு வரவேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என கேட்கிறார். அப்போது ஈஸ்வரி, அறிவுக்கரசிக்கு ஃபோன் செய்து இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. உன்னுடைய தங்கைக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துக்கொள் என்று சொல்லுங்க என்று சொல்ல ஈஸ்வரி, சொன்னது போலவே குணசேகரனும் போன் செய்து சொல்லிவிடுகிறான். இதைக்கேட்டு அறிவுரசி, கதிர், முல்லை என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
குணசேகரனின் திட்டம்: பின் வீட்டுக்கு வரும் கதிர், ஜீவானந்தத்திடம் தான் தர்ஷன் இருக்கிறான் என்பது தெரிந்து விட்டது. ஜீவானந்தத்தின் கதையை முடித்து விட்டு, நான் தர்ஷனை தூக்கி வருகிறேன் என்று சொல்ல, கதிரை தடுத்து நிறுத்தும் குணசேகரன், இது என்னுடைய மகன் விஷயம், இதில், நீ தலையிடாமல் ஒதுங்கிக் கொள் என்கிறார். இதைக்கேட்டு ஷாக்கான கதிர் என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்கிறார். பின், மருமகள்கள் அனைவரும் போன பிறகு, கதிரின் கையை பிடித்து, கண்ணால் ஜாடை செய்கிறார். இதனால், குணசேகரன் ஏதோ பெரிய திட்டத்தோடு இருக்கிறார் என்பது தெரிகிறது.
அறிவுக்கரசிக்கு விழுந்த அடி: இன்றைய எபிசோடு காண ப்ரமோ வெளியாகி உள்ளது, அந்த ப்ரோமோவில், ஜீவானந்தத்திற்கு போன் செய்யும் குணசேகர், நான் செய்தது அனைத்தும் தவறு, இப்போ நான் முழுசாக மாறிவிட்டேன், எனக்கு என்னுடைய மகன் வேண்டும். தயவு செய்து என்னுடைய மகனை அனுப்பி வையுங்கள் என்கிறார். மறுபக்கம் வீட்டிற்கு வரும் அறிவுக்கரசி, தர்ஷனின் கை காலை உடைச்சாவது, என்னுடைய தங்கைக்கு அவனை திருமணம் செய்து வைப்பேன் என்று சொல்கிறார். இதைக்கேட்ட குணசேகரன், அறிவுகரசியை பளார் என்று அறைந்து, இனிமேல் என்னுடைய மகன் விஷயத்தில் நீ தலையிட கூடாது. உன்னுடைய தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பார். இனிமேல் இந்த வீட்டு பக்கம் நீ வரக்கூடாது என்கிறார். இதைப்பார்த்து அனைவரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











