அறிவுக்கரசியை அடித்து துரத்திய குணசேகரன்.. நடுரோட்டில் நடந்த அவமானம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: வீட்டிற்கு வரும் அறிவுக்கரசி, தர்ஷனின் கை காலை உடைச்சாவது, என்னுடைய தங்கைக்கு அவனை திருமணம் செய்து வைப்பேன் என்று சொல்கிறார். இதைக்கேட்ட குணசேகரன், அறிவுகரசியை பளார் என்று அறைந்து, இனிமேல் என்னுடைய மகன் விஷயத்தில் நீ தலையிட கூடாது. உன்னுடைய தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பார். இனிமேல் இந்த வீட்டு பக்கம் நீ வரக்கூடாது, உன் கூட சம்மந்தம் பேசியதால், நீ யாரு எங்கே இருந்து வந்தா என்பது எல்லாம் மறந்து போச்சா, இந்த குணசேகரன் கிட்ட உன் வேலையை காட்டாதே என்று சொல்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அறிவுக்கரசி...டேய்.. குணசேகரா என்று கத்த, கொந்தளித்து போன கதிர், யார் பேரை சொல்லி கூப்பிடுரா, அந்த அளவிற்கு உனக்கு தைரியம் வந்துவிட்டதா என்று அறிவுக்கரசியை அடிக்கிறார்.'
அப்போது, குணசேகரன், ஏய்... அறிவுக்கரசி, இனி தர்ஷன் விஷயத்தில் நீ தலையிடாக்கூடாது, இந்த வீட்டு பக்கமும் வரக்கூடாது, ஒழுங்க வெளியில ஓடிடு என்று சொல்கிறார். அப்போது, முல்லை, உங்க மகனுக்கும் எங்க வீட்டு பொண்ணுக்கும் கல்யாணம் என்று ஊர் முழுக்க பத்திரிக்கை கொடுத்துவிட்டோம். இப்போ, இப்படி சொன்னால் எப்படி என்று கேட்டு கத்துகிறார். அப்போது, ஞானம், என்னடா முல்லை யார் வீட்டில் வந்து கத்திக்கிட்டு இருக்க என்று அவரை அடிக்கிறார். இதையெல்லாம் பார்த்த அறிவுக்கரசி, ஏய் உன்னை சும்மா விட மாட்டேன் என்று சொல்ல, கதிர் மீண்டும் அறிவுக்கரசியை அடித்து, வீட்டில் இருந்து தெருவுக்கு இழுத்து வந்து அடித்து துரத்துகிறார். இதனால், நடுரோட்டில் அறிவுக்கரசி ஆத்திரத்தோடு கத்துகிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அதன் பின், குணசேகரன், ஈஸ்வரியிடம் மிகவும் பனிவான, அறிவுக்கரசியை அடிச்சே துரத்தியாச்சி இப்போதாவது, தர்ஷனை வீட்டிற்கு வர சொல் என்கிறார். இதைத்தொடர்ந்து, ஈஸ்வரி ஜீவானந்தத்திற்கு போன் செய்து பேசுகிறாள். அந்த போனை வாங்கி பேசும் குணசேகர், நான் செய்தது அனைத்தும் தவறு, உங்க குடும்பத்திற்கு நான் செய்த துரோகம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. உங்களை போன்ற ஆட்கள் இருப்பதால், இன்னும் என் மகன் இருக்கிறான். இப்போ நான் முழுசாக மாறிவிட்டேன், என் மகன் மீதான பாசம் என்னை மாற்றிவிட்டது தயவு செய்து என்னுடைய மகனை வீட்டிற்கு அழைத்து வாருங்கள் என்கிறார். அதைத்தொடர்ந்து, பார்கவியின் அப்பா அங்கே தான் இருக்கிறார் என்று எனக்கு தெரியும், ஸ்பீக்கர் போடுங்கள் என சொல்லிவிட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். தயவு செய்து நீங்க தர்ஷனுடன் வீட்டுக்கு வாங்க என்கிறார். இதைத்தொடர்ந்து அனைவரும் காரில் வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
உயிரோடு இருக்க மாட்டேன்: மறுபக்கம், கதிர், குணசேகரன் அறைக்கு சென்று, நீங்க ஜீவானந்தத்திடம் பேசி இருக்க கூடாது, வீட்டில் இவளுங்க நினைப்பது நடந்து கொண்டு இருக்கிறது என்கிறான். அப்போது, குணசேகரன், இப்போ தர்ஷன், அந்த ஆள் கூட இருக்கான். எல்லா விஷயத்திலும் நான் தோற்றுவிட்டேன், இந்த விஷயத்திலும் நான் தோற்றுப்போனால் உயிரோடு இருக்கவே மாட்டேன். முதலில் தர்ஷன் வீட்டிற்கு வரட்டும் என்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











